கரும்பு

கணுவிடைப்பகுதி துளைப்பான்

Chilo sacchariphagus indicus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் குண்டடிபட்டது போன்ற துளைகள்.
  • குறுகிய கணுவிடைப்பகுதிகள்.
  • தண்டுகள் மற்றும் காம்புகளில் உட்புற உண்ணும் செயல்பாடு.
  • பழுப்பு நிற தலை, நீளமான கோடுகள் மற்றும் அடர் பக்கத்தில் அடர் புள்ளிகள் கொண்ட வெண்ணிற முட்டைப்புழுக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்


கரும்பு

அறிகுறிகள்

கம்பளிப்பூச்சிகள் முதலில் இளமையான சுருண்ட இலைகளை உண்டு குண்டடிபட்ட துளைகளை போன்று ஏற்படுத்துகின்றன. தாவர வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், இவை வளரும் பகுதிகளை உண்டு, இறந்த இதயங்களை உருவாக்குகின்றன. கணுவிடைப்பகுதிகள் பல குடையப்பட்ட துளைகளுடன் ஒடுங்கி, சுருங்கப்பட்டுள்ளன. தண்டுகளுக்குள் நுழைந்து உள்ளே உண்ணும் போது இவை நுழையும் துளைகளை கழிவுகள் கொண்டு அடைத்து விடுகின்றன. முட்டைப்புழுக்கள் தண்டு திசுக்களுக்குள் மேலே பரவி, சிவந்து, முனைகளை சேதப்படுத்தும். தாவர தண்டுகள் பலவீனமடைந்து காற்றினால் எளிதில் உடையக்கூடியதாக ஆகும். குன்றிய வளர்ச்சி மற்ற அறிகுறிகளுள் ஒன்று.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த பூச்சியைப் பொறுத்தவரை, உயிரியல் பூச்சிக்கொல்லிகள் எதுவும் அறியப்படவில்லை, ஆனால் ஒட்டுண்ணிகள் கணுவிடைப்பகுதி துளைப்பான் பூச்சி தாக்கத்தைக் குறைக்கிறது. டிரைக்கோகிராம்மா ஆஸ்ட்ராலியாகம் @ 50,000 ஒட்டுண்ணிகள் / ஹெக்டேர் என்ற எண்ணிக்கையில் வாரம் ஒரு முறை வயலில் அறிமுகப்படுத்தவும். நான்காவது மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிராம்மா சிலோனிஸ் @ 2.5 மில்லி /ஹெக்டேர் என்ற அளவில் வெளியிடவும். முட்டைப்புழு ஒட்டுண்ணிகள் ஸ்டெனோபிராகன் டீசா மற்றும் அப்பன்டெலிஸ் ஃபிளாவிப்கள் ஆகும். கூட்டுப்புழுவாக இருக்கும் நிலையில், டெட்ராஸ்டிக்கஸ் அய்யாரி மற்றும் ட்ரைக்கோஸ்பிலஸ் டயட்ரேயா போன்ற ஒட்டுண்ணிகளை வெளியிடலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தொடர்பு பூச்சிக்கொல்லியான மோனோக்ரோடோபோஸை வளரும் பருவங்களில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும். சேதம் கடுமையாக இருந்தால் கார்போஃபுரான் 3 ஜி துகள்களை மண்ணில் 30 கிலோ / ஹெக்டேர் என்ற அளவில் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சிலோ சக்கரிபாகஸ் இன்டிகஸின் முட்டைப்புழுவால் தாவரத்திற்கு சேதம் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சிறியதாக, வைக்கோல் நிறத்தில் இருக்கும், மேலும் இவை வெள்ளை நிற பின் இறக்கைகள் மற்றும் முன் இறக்கைகளின் ஓரத்தில் அடர் நிற கோடுகளை கொண்டிருக்கும். இவை ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் உள்ளன, ஒரு வருடத்தில் சுமார் 5-6 தலைமுறைகளை நிறைவு செய்கின்றன. ஆரம்ப கட்டத்திலிருந்து அறுவடை வரை தாவரங்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்றன. முட்டைப்புழுக்கள் தாவரத்தின் கணு பகுதிக்குள் துளையிட்டு, தண்டில் நுழைந்து, மேல்நோக்கி குடைந்து செல்கின்றன. கரும்புச் தண்டைச் சுற்றியுள்ள நீரில் மூழ்கிய நிலைமைகள் கணுவிடைப்பகுதி துளைப்பான் பூச்சியின் கட்டமைப்பை ஆதரிக்கின்றன, எனவே அதிக அளவு நைட்ரஜன் மற்றும் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இவற்றுக்கு சாதகமானதாகும். மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவை இவற்றின் மற்ற புரவலன்கள் .


தடுப்பு முறைகள்

  • சி.ஓ 975, சி.ஓ.ஜெ 46 மற்றும் சி.ஓ 7304 போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்துங்கள்.
  • நடவு செய்வதற்கு பூச்சி இல்லாத கரணைக்குச்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பயிர்களை தவறாமல் கண்காணிக்கவும்.
  • அவ்வப்போது முட்டைகளை சேகரித்து அழிக்கவும்.
  • கரும்பு வயல்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள களைகளை அகற்றி அழிப்பதன் மூலமும், உங்கள் பயிரை கவனமாக கையாளுவதன் மூலமும் நல்ல சுகாதார மேலாண்மையை நிர்வகியுங்கள்.
  • நடவு செய்த 150 மற்றும் 210 வது நாளில் உலர்ந்த கரும்பு இலைகளை உங்கள் வயலில் இருந்து அகற்றவும்.
  • கண்காணிப்பதற்கு ஹெக்டேருக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஃபெரோமோன் பொறிகளை நிறுவவும் மற்றும் 45 நாட்களுக்கு ஒரு முறை அவற்றை மாற்றவும்.
  • அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் இயற்கை இரைப்பிடித்துண்ணிகளுக்கு நல்ல நிலைமைகளை வழங்குங்கள்.
  • அறுவடைக்குப் பிறகு, எஞ்சியிருக்கும் தளிர்களை அகற்றி அழிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க