எங்களது கதை

சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான வேளாண்மையை நோக்கிய பயணத்தில், விவசாயத்தில் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னோடியாகத் திகழுவது.

atf-background-image-img-alt

கடந்த சில ஆண்டுகளாக, பிளான்டிக்ஸ் செயலி ஆனது டிஜிட்டல் முறையில் தாவர நோயைக் கண்டறியும் கருவியாகவும், சாகுபடி நிபுணராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இன்று, சிறிய அளவிலான விவசாயிகளையும் சப்ளையர்களையும் எமது இரண்டு செயலிகளான பிளான்டிக்ஸ் மற்றும் பிளான்டிக்ஸ் பார்ட்னர் மூலம் ஒரே டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் இணைக்கிறோம். எமது முதன்மை இலக்குகளில் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள், நம்பகமான தயாரிப்புகள் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவது உள்ளிட்டவை அடங்கும். விவசாயிகளிடமிருந்து பல லட்ச கணக்கில் சாகுபடி மற்றும் பயிர் தொடர்பான கேள்விகளுக்கு நாம் ஏற்கனவே பதிலளித்துள்ளோம் மற்றும் நூறாயிரக்கணக்கான சில்லறை விற்பனையாளர்களுடன் டிஜிட்டல் முறையில் இணைந்திருக்கிறோம்.

தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள், நம்பத் தகுந்த தயாரிப்புகள் மற்றும் நம்பகமான சேவைகளே எங்களது முதன்மை இலக்குகள். 2022 ஆம் ஆண்டில், விவசாயிகளிடமிருந்து 50 மில்லியனுக்கும் அதிகமான சாகுபடி மற்றும் பயிர் தொடர்பான கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களை டிஜிட்டல் முறையில் இணைத்துள்ளோம்.


தகவல்களும் புள்ளிவிவரங்களும்

பிளான்டிக்ஸ் செயலி

daily active app users

134,000 தினசரி பயன்படுத்தும் செயலி பயனாளிகள்

crop diagnosis

ஒவ்வொரு 1,5 வினாடிக்கும் 1 நோய் கண்டறியப்படுகிறது

Languages and Countries

177 நாடுகளில், 18 மொழிகளில் கிடைக்கிறது

பிளான்டிக்ஸ் பார்ட்னர் செயலி

brands and products

40+ பிராண்டுகள் மற்றும் 1000+ தயாரிப்புகளை வழங்குகிறது

states

10 இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது

retailers

100,000+ சில்லறை விற்பனையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றது

பிளான்டிக்ஸ் குழு

users

250+ பிளான்டிக்ஸ் ஊழியர்கள்

offices

அலுவலகங்கள்:
பெர்லின் · இந்தூர்


நிர்வாகக் குழு

சிமோன் ஸ்ட்ரே

சிமோன் ஸ்ட்ரே · சி.ஈ.ஓ

தலைமை நிர்வாக அதிகாரி (சி.ஈ.ஓ) மற்றும் இணை நிறுவனர் என்ற முறையில், சிமோன் ஸ்ட்ரே சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான வேளாண்மையை நோக்கிய பயணத்தில், விவசாயத்தில் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை வழங்கும் வகையில் பிளான்டிக்ஸை இயக்குகிறார்.

சிமோன் லீப்னிஸ் பல்கலைக்கழக ஹானோவரில் புவியியல் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். இவரது வேலை இவரை பெர்லின், அமேசான் மழைக்காடுகள் முதல் மேற்கு ஆப்பிரிக்கா, காம்பியா மற்றும் இந்தியா வரை அழைத்துச் சென்றது, அங்கு இவர் சிறிய அளவிலான விவசாயிகளின் தேவைகளைப் பற்றிய நேரடியான அனுபவத்தையும் புரிதலையும் பெற்றார்.

நீர், விவசாயம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க சிமோன் கிரீன் டெஸர்ட் ஈ.வி. என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்.

ராப் ஸ்ட்ரே

ராப் ஸ்ட்ரே · சி.டி.ஓ.

பிளான்டிக்ஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் (சி.டி.ஓ.) இணை நிறுவனருமான ராபர்ட் ஸ்ட்ரே, பிளான்டிக்ஸின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் விவசாய தரவுத்தளத்தின் கட்டமைப்பாளர் ஆவார். ராபர்ட் லீப்னிஸ் பல்கலைக்கழக ஹானோவரில் புவியியல் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்றவர்.

பிளான்டிக்ஸில் அவரது முதன்மை கவனம் திறமையான, இலாபகரமான மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் மூலோபாயத்தை நிறுவுவதும், புதிய உள்கட்டமைப்பு அமைப்புகளைச் செயல்படுத்துவதாகும்.


ஊடக உடைமைகள்

சின்னங்கள்


நிழற் படக் கலை

பிளான்டிக்ஸ் செயலி பயன்பாட்டில் உள்ளது
விவசாயி தனது பயிர்களைப் பரிசோதிக்கிறார்
பிளான்டிக்ஸ் பார்ட்னரைப் பயன்படுத்தும் வேளாண் சில்லறை விற்பனையாளர்
வயலில் விவசாயி
பார்ட்னர் டுகானைப் பயன்படுத்தும் வேளாண் சில்லறை விற்பனையாளர்
பிளான்டிக்ஸை பயன்படுத்தும் தந்தையும் மகனும்

தொடர்புக்கு

அனைத்து பத்திரிகை வினவல்களுக்கும், எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
press@plantix.net