பயிர் நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான #1 இலவச செயலி

பிளான்டிக்ஸ் செயலி விவசாயிகளுக்குப் பயிர் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவுகிறது, உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது மற்றும் விவசாயம் பற்றிய அறிவை வழங்குகிறது. பிளான்டிக்ஸ் மூலம் உங்கள் விவசாய இலக்குகளை அடைந்து, உங்கள் விவசாய அனுபவத்தை மேம்படுத்திடுங்கள்.

பெரியளவிலான விவசாய சமூகத்தால் நம்பப்படுகிறது


உங்கள் பயிர் உற்பத்தியை அதிகரித்திடுங்கள்

உங்கள் நோய்வாய்ப்பட்ட பயிர் பிரச்சினையைக் கண்டறிந்திடுங்கள்

உங்கள் நோய்வாய்ப்பட்ட பயிரைப் புகைப்படமெடுத்து, அது என்ன நோயென்றும் சிகிச்சை பரிந்துரைகளையும் இலவசமாகப் பெறுங்கள் - அனைத்தும் சில நொடிகளில்!

நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள்

கேள்வி இருக்கிறதா? கவலை இல்லை. எங்களது சமூக விவசாய நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் பயிர் சாகுபடி பற்றியும் தெரிந்து கொள்ளலாம், மேலும் நீங்கள் பெற்ற அனுபவத்தை வைத்து சக விவசாயிகளுக்கும் உதவலாம்.

உங்கள் பயிர் விளைச்சலை அதிகரிக்க விரும்புகிறீர்களா?

எங்களது நோய் நூலகத்தில் உங்களுக்கான தகவல் இடம்பெற்றுள்ளது! உங்கள் குறிப்பிட்ட பயிர் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய தகவல் மூலம், நீங்கள் வெற்றிகரமான அறுவடையை உறுதி செய்திடலாம்.

எண்ணிக்கையில் பிளான்டிக்ஸ்

உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேளாண் தொழில்நுட்ப செயலியாக, விவசாயிகளின் 10 கோடிக்கும் அதிகமான பயிர் தொடர்பான கேள்விகளுக்குப் பிளான்டிக்ஸ் பதிலளித்துள்ளது.


எங்களுடைய பயனாளிகள் என்ன சொல்கிறார்களென்று பாருங்கள்

இந்தச் செயலி திறன்மிக்கது மற்றும் பயனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வசதியினைக் கொண்டது, இது பயிர் நோய்களைக் கண்டறிவதையும் இரசாயன மற்றும் உயிரியல் சிகிச்சைகளைக் கண்டறிவதையும் எளிதாக்கித் தருகிறது.

ஜோஸ் சூசா

விவசாயி | பிரேசில்

வேளாண் விஞ்ஞானியாக, நான் இந்தச் செயலியை மிகவும் பரிந்துரைக்கிறேன். தாவர நோய்களைக் கண்டறிவதிலும் தீர்வுகளை வழங்குவதிலும் இது பயனுள்ளதாக இருக்கிறது.

அலெஜாண்ட்ரோ எஸ்கார்ரா

வேளாண் விஞ்ஞானி | ஸ்பெயின்

இந்தச் செயலி எனது தாவர நோய்களுக்குச் சிறந்த பகுப்பாய்வு மற்றும் தீர்வுகளை வழங்கியது. தங்கள் பயிர் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் எவருக்கும் நான் இந்தச் செயலியை மிகவும் பரிந்துரைக்கிறேன்!

வாடி சிங்காரிம்புன்

விவசாயி | இந்தோனேசியா