மக்காச்சோளம்

காஸ் வாடல் நோய்

Clavibacter michiganensis

நுண்ணுயிரி

5 mins to read

சுருக்கமாக

  • நரம்புகளுக்கு இணையாக, இலைகளில் ஒழுங்கற்ற ஓரங்களுடன் நீளமான வெளிறிய பழுப்பு நிறப் புண்கள் காணப்படும்.
  • படிப்படியாக இலைத்திரள்கள் கருகுவதற்கு வழிவகுக்கிறது.
  • புண்களில் இருந்து வடியும் பளபளப்பான உலர்ந்த பாக்டீரியா கசிவுகள் மற்றும் கருப்பு சுருக்கங்கள் ஏற்படும்.
  • நாற்றங்கால்கள் வாடும் மற்றும் இறந்துபோகும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

இலைகளில் முதல் அறிகுறியானது ஒழுங்கற்ற விளிம்புகளுடன் நீண்டப் பழுப்பு நிறப் புண்கள் நரம்புகளுக்கு இணையாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். காலப்போக்கில், இந்தப் புண்கள் இலைத் தொகுதிகள் கருகிப்போவதற்கு வழிவகுத்து, பெரிய அளவிலான கவிகைகளை அழித்து மற்றும் தாவரங்களின் தண்டுகள் அழுகுவதற்கு அடிகோலும். புண்களில் கருத்த, நீர் தோய்த்த புள்ளிகள் (சுருக்கங்கள்) உருவாகும். இலை விளிம்புகள் பெரும்பாலும் சிதைந்து போகும். புண்களில் உலர்ந்த பாக்டீரியா கசிவுகள் பளபளப்பான பகுதிகளாக பெரும்பாலும் காணப்படும். தண்டுகளில் நோய்த் தொற்று கொண்ட தாவரங்களில், ஆரஞ்சு கடத்துத்திசு கற்றைகள் தண்டுகளில் காணப்படும். நாற்றுகளில் நடவு செய்யும் காலத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டால், அது சில பகுதிகளில் இளம் தாவரங்கள் வாடி கருகிப்போவதற்கும் மற்றும் நாற்றுகள் இறப்பதற்கும் வழிவகுக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சி.மிக்கிகனென்சிற்கு தற்போது எந்த உயிரியல் சிகிச்சையும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெறும் தடுப்பதற்கான இயல்புகளையே கொண்டுள்ளன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சி.மிக்கிகனென்சிற்கு தற்போது எந்த இரசாயனச் சிகிச்சையும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். பயனுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெறும் தடுப்பதற்கான இயல்புகளையே கொண்டுள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் கிளாவிபாக்டர் மிக்கிகனென்சிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது, இது பாதிக்கப்பட்டச் சோள கழிவுகளில் அல்லது பச்சை ஃபாக்ஸ்டையில், குதிரைவாலி, நொறுக்கு கரும்புகள் போன்ற பிற புரவலன் தாவரக் கழிவுகளில் செயலற்ற நிலையில் குளிர்காலத்தை கழிக்கிறது. இந்த பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து, பாக்டீரியாக்கள் முதன்மையாக மழைத் துளி, மேல்நிலை நீர்பாசனத்தின்போது காற்றில் பரவக்கூடிய துளிகள் ஆகியவற்றின் மூலம் வளர்ந்து வரும் செடிகளுக்குப் பரவுகிறது. காஸ் வாடல் நோய் முதலில் காயமடைந்த இலைகளைப் பாதிக்கிறது, உதாரணமாக ஆலங்கட்டி மழை, மணல்-வெடித்தல் மற்றும் வலுவான புயல்கள் ஆகியவற்றின் மூலம் காயமடைதல். இலையைப் பாதித்த பிறகு, இந்த நோய் தாவரங்களுக்குள் பரவுகிறது, பின்னர் ஒரு தாவரத்திலிருந்து பிற தாவரத்திற்குப் பரவுகிறது. வெதுவெதுப்பான வெப்பநிலை (> 25 டிகிரி செல்சியஸ்) இந்த நோய் பரவுவதற்குச் சாதகமான சூழலாகும். சோளக்காதுகளில் இருந்து பட்டு நூல்கள் வெளியான பிறகு இந்த நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் தோன்றும், மேலும் இந்த நிலைக்கு பிறகு நோயின் தீவிரம் அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட கலப்பினத்தாவரங்களை பயிர் செய்தல் , குறைவாக உழுதல், சோளத்தை மட்டும் கொண்டு ஒற்றைப் பயிர் செய்தல் இந்த நோய்க்குச் சாதகமானவை ஆகும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் (பல சந்தையில் கிடைக்கின்றன) அவற்றை நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயலைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • சாகுபடியில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளிலும் உயர் தரமான சுகாதாரத்தை மேற்கொள்ளவும்.
  • முடிந்த வரை குறைந்த அளவிலான இயந்திரச் சேதங்களைத் தாவரங்களுக்கு ஏற்படுத்துங்கள்.
  • உதாரணமாக ஆழமாக உழுவதன் மூலம் தாவரக் கழிவுகளை அகற்றவும்.
  • மீதமுள்ள சோளக் கழிவுகள் சிதைவதற்கு இரண்டாண்டிற்கு ஒருமுறை பயிர் சுழற்சி மேற்கொள்ளவும்.
  • பச்சை ஃபாக்ஸ்டையில், குதிரைவாலி, நொறுக்கு கரும்புகள் போன்ற மாற்றுப் புரவலன்களை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க