அரிசி

அரிசி மஞ்சள் தேமல் நோய்

RYMV

நோய்க்கிருமி

5 mins to read

சுருக்கமாக

  • மஞ்சள் நிற கோடுகள் மற்றும் புள்ளிகள் புதிய இலைகளில் காணப்படும்.
  • மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறத்திலான புள்ளிகள் முதிர்ந்த இலைகளில் காணப்படும்.
  • கோடுகளுக்கு நடுவில் அடர் திட்டுக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இளம் இலைகளில் மஞ்சள் முதல் பச்சை நிறத்தில் தேமல் போன்ற புள்ளிகள் காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட பின்பு (இரு வாரங்கள் கழித்து) இந்த புள்ளிகள் இலை நரம்புகளுக்கு இணையாக பெரிதாகும். மஞ்சள் நிற கோடுகளின் நடுவில் அடர் திட்டுக்கள் காணப்படும். மஞ்சள் முதல் ஆரஞ்சுநிறமாற்றம் முதிர்ந்த இலைகளில் காணப்படும். பயிரின் வளர்ச்சி குன்றி, பயிர்ப்பயனாக்கம் குறையும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட பயிர்களை அழித்துவிடவும் மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவுகளுக்கு அடியில் உழுதுவிடவும் அல்லது அவற்றை எரித்துவிடுவது மிகவும் சிறந்தது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இந்த வைரஸ் காரணிகளைக் கட்டுப்படுத்த எவ்வித நேரடி வேதியியல் சிகிச்சைகளும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

பலவகையான வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகள், பசுக்கள், எலிகள் மற்றும் கழுதைகள் மூலம் கூட இந்த வைரஸ் பயிர்களுக்கு பரவலாம். தாவர உயிர்ச்சாறு ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிருக்கு செல்வதன் மூலமும் பரவும், உதாரணமாக பாசனநீர் மூலம் பரவுதல் அல்லது ஆரோக்கியமான பயிர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் அழிக்கப்படாத / உழப்பட்ட பயிர் கழிவுகளுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.


தடுப்பு முறைகள்

  • அதிக எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளை நடவு செய்யவும்.
  • இந்த பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க சீக்கிரமே நடவு செய்யவும்.
  • வயலிலும் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள களைகளை அகற்றவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளை பாதிக்காதபடி பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர எச்சங்களை உழுது புதைத்து விடவும் அல்லது அவற்றை எரித்து விடுவது சிறந்தது.
  • மாற்றாக, அறுவடைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட தாவரங்களை அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க