அரிசி

அரிசி இலைச் சிலந்திப்பேன்

Oligonychus spp.

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • அடிப்புற இலைப்பகுதியில் பொடி போன்ற வலைப் பொருள் இருக்கும்.
  • மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகள் மேற்புறத்தில் இருக்கும்.
  • இலைகள் சாம்பல் நிறமாக மாறும் மற்றும் காய்ந்துபோகும்.
  • சிலந்திப்பேன் மிகவும் சிறியது, பூதக்கண்ணாடி இல்லாமல் இதனை பார்ப்பது கடினம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இலையின் மேற்புறத்தில் வெள்ளைப் புள்ளிகள் உருவாகும், இவை பின்னர் உலரும்போது மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திலான சிறிய பகுதி கொண்டதாக மாறும். இதற்கு இலைகளின் புள்ளிமுறைப் பொறிப்பு என்று பெயர். மிகவும் அதிகமான பாதிப்புகளில், முழு இலையும் சாம்பல் - வெள்ளை நிறமாக மாறும் மற்றும் காய்ந்துபோகும். இலையின் கூர்முனைப் பகுதியின் அடிப்புறத்தில் மிகவும் மென்மையான வலையினை இவை பின்னும், இது பொடி போன்ற பொருளாகக் காட்சியளிக்கும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, குளோரோபில் இழப்பினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் வெளிர் மஞ்சள் அல்லது வண்ணமிழந்த தோற்றத்துடன் காணப்படும், சிலந்தி இலைத் திசுக்களில் ஊடுருவுதல் மற்றும் இலையின் ஊட்டத்தினை உறிஞ்சுதல் போன்றவை காரணமாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூடோமோனாஸ் வகை பாக்டீரியாக்களைக் கொண்டு ஒரு கிலோ விதைகளுக்கு 10 கிராம் அளவில் விதை சிகிச்சை செய்யலாம். வேப்ப ரொட்டியுடன், யூரியாவினை கலந்து நெற்பயிரில் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த முடிவைத் தரும். ஈரமான கந்தகத்தினை பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதும் 3 கிராம் அளவில் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். ஸ்பிரோமெஸிஃபென் கலந்த சிலந்திப்பேன் கொல்லிகளைப் பயன்படுத்துவது சிறந்த பயன்தரும். இருப்பினும், சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் நோய்த் தொற்றின் அளவு, செலவுத்தொகை மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கை அடர்த்தியின் மீதான சாத்தியமான விளைவு ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு சிகிச்சையளிப்பதைத் தீர்மானிக்க வேண்டும். குறித்த நேரத்தில் பயன்படுத்துவது முக்கியமானது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது அரிசி இலை சிலந்திப்பேன், ஒலிகோனிகஸ் ஒரைசாவின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. அதிக வெப்பநிலை (25 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல்) மற்றும் அதிக ஒப்பு ஈரப்பதம் இருக்கும்போது இதன் பாதிப்புகள் அதிகமிருக்கும். சுற்றுப்புறச் சூழ்நிலையினைப் பொறுத்து இவற்றின் வாழ்நாள் காலம் 8 முதல் 18 நாட்கள் வரை அமையும். முதிர்ந்த பூச்சிகள் வெளிப்படும்போது பாலியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து விடுகின்றன மற்றும் விரைவாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இலைகளின் அடிப்புறத்தில், இலையின் மையநரம்புகள் மற்றும் நரம்புகளில் தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன. 4 முதல் 9 நாட்கள் அடைகாக்கும். ஈரப்பதமான நிலங்களில், நெற்பயிருக்கு இணையாக வளரும் பிற களைகள், (எச்சினோசோலா கோலோனா) இவற்றிற்கு மாற்று பயிராக அமைந்து ஊட்டமளித்து, அதிகப்படியான தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில் இருந்து பாதுகாப்பது சிரமம், வழக்கமாக அந்த நிலத்தில் இப்பூச்சிகளால் சென்ற ஆண்டு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்ட அதே இடத்தில் அடுத்து வரும் வருடங்களிலும் பாதிப்பு ஏற்படுகிறது.


தடுப்பு முறைகள்

  • சிலந்திப்பேன் அறிகுறிகள் இருக்கிறதா எனத் தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.
  • சிலந்திக்கு மற்றொரு ஊட்டப் பயிராக அமையும் களைகளில் இருந்து, நெற்பயிரின் கட்டுக்களைப் பாதுகாக்கவும்.
  • உதவியாக இருக்கும் சில பூச்சிவகைகளைக் கொல்லும் வகையில், அதிகப்படியான நைட்ரஜனை பயன்படுத்த வேண்டாம்.
  • அறுவடைக்குப் பின்னர் எஞ்சிய பயிர் பாகங்களை நீக்கிவிடவும்.
  • அறுவடைக்குப் பின்னர் ஆழமாக ஏர் பூட்டவும்.
  • புரவலன் அல்லாத பிற பயிர்களுடன் பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க