அரிசி

அரிசி முள்வண்டு

Dicladispa armigera

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளின் முக்கிய கணுஇடுக்கு நெடுகிலும் இணையான வெள்ளைக் கோடுகள் அல்லது திட்டுக்கள்.
  • ஒழுங்கற்ற வெள்ளைத் திட்டுக்கள்.
  • இலைகள் வாடிப்போகுதல்.
  • அடர் நீலம் அல்லது நீல நிற ஒருவித சதுர வடிவிலான சுழன்ற வண்டுகள்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

மேற்புறத் தோலடுக்கிலிருந்து வெளிப்புறமாக முதிர்ந்த வண்டுகள் ஊட்டம் பெறுகின்றன, இதனால் இலைகளின் முக்கிய கணுஇடுக்கு நெடுகிலும் இணையான வெள்ளைக் கோடுகள் அல்லது திட்டுக்கள் வகையான அமைப்பினை உருவாக்கின்றன. அதிகப்படியான பாதிப்புகளில், நரம்புகளும் பாதிக்கப்படலாம், இதனால் பெரிய வெள்ளை நிற திட்டுக்கள் உருவாக வழிவகுக்கும். முதிர்ந்த உயிரிகள் அடிக்கடி பாதிக்கப்பட்ட இலைகளில் இருக்கும், பொதுவாக மேல் பகுதியில் இருக்கும். இலைகளின் மேற்புற அடுக்குகளுக்கு நடுவே உள்ள பச்சைத் திசுக்களில் இளம் உயிரிகள் ஊட்டம் பெற்று, நரம்புகள் நெடுகிலும் துளைத்து, வெள்ளைத் திட்டுக்களை உருவாக்குகின்றன. இலைகளை வெளிச்சத்திற்கு எதிராக காட்டும்போது அல்லது விரல்களை துளைகளினுள் விட்டுப்பார்க்கும்போது இவற்றை கண்டறியலாம். வயல்களில் பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து, வெள்ளைத் தோற்றத்தினை ஏற்படுத்தும். தொலைவில் இருந்து பார்க்கும்போது தீவிரமாகப் பாதிக்கப்பட்ட வயல்வெளி எரிந்தது போன்று காட்சியளிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த முள் வண்டுகளுக்கான உயிரியல் கட்டுப்பாட்டு சிகிச்சைகள் இன்னும் ஆய்வில் மட்டுமே உள்ளன. இயூலோபஸ் ஃபெமோராலிஸ் போன்ற முட்டைப்புழு ஒட்டுண்ணிகளை, வங்காளதேசம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளனர் மற்றும் முள் வண்டுகளினால் ஏற்படும் பிரச்சினைகள் இந்தப்பகுதிகளில் குறையலாம். உள்நாட்டு இயற்கை எதிரிகளை பேணுவது இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. உதாரணமாக, சில பூச்சிகள், முட்டைகள் மற்றும் இளம் உயிரிகளைத் தாக்கி அழிக்கும் மற்றும் ரிடுவீட் வண்டுகள் முதிர்ந்த முள் வண்டுகளையும் உண்ணும். மேலும் மூன்று பூஞ்சை நோய்க்காரணிகளும் இந்த முதிர்ந்த உயிரிகளைத் தாக்குகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கடுமையான தொற்றுகளில், பின்வரும் செயற்கூறான பொருட்களைக் கொண்டிருக்கும் பல இரசாயன சூத்திரங்கள் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன: குளோர்பைரிபோஸ், மாலத்தியான், சைபெர்மெத்ரின், ஃபென்தோயேட்.

இது எதனால் ஏற்படுகிறது

டிக்ளாடிஸ்பா ஆர்மிஜெரா என்னும் இளம் மற்றும் முதிர்ந்த முள் வண்டுகளினால் பாதிப்புகள் ஏற்படுகிறது. முதிர்ந்த வண்டுகள் இலைகளின் மேற்புற அடுக்கினை முற்றிலும் அழித்து வெறும் கீழடுக்கினை மட்டும் இலைகளில் மீதம் வைத்துவிடுகின்றன. இளம் இலைகளில் உள்ள சிறிய பிளவுகளில் முட்டைகளை இடுகின்றன, பொதுவாக இவை விளிம்பை நோக்கியதாகவே இருக்கும். தட்டையான மற்றும் வெண்மையான மஞ்சள் நிறத்துடன் வண்டினப் புழு இருக்கும். இவை இலைகளின் கணுஇடுக்கு நெடுகிலும் துளைத்து, திசுக்களில் இருந்து ஊட்டம் பெறுகின்றன, பின்னர் இவற்றினுள்ளேயே கூட்டுப்புழுவாகின்றன.முதிர்ந்த வண்டுகள் சதுர வடிவில், 3-5 மிமீ நீளம் மற்றும் அகலம் கொண்டிருக்கும். இவை கருநீளம் அல்லது கரு நிறத்தில் முட்களை தனது உடல் முழுவதும் கொண்டிருக்கும். புல்வெளி களைகள், அதிகப்படியாக உரமளித்தல், அதிகப்படியான மழை மற்றும் அதிகமான ஒப்பு ஈரப்பதம் போன்றவை இந்த முள் வண்டுகள் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையாகும்.


தடுப்பு முறைகள்

  • இந்தப் பூச்சிகள் நெற்பயிரில் இருந்தால் அவற்றின் தாக்கத்தினைத் தடுக்க எவ்வித எதிர்ப்பு முறைகளும் இல்லை.
  • குறுகிய பயிர் இடைவெளியில், சிறந்த இலை அடர்த்தி அமையுமாறு பயன்படுத்தவும்.
  • அதிகப்படியான பூச்சிகள் உருவாவதைத் தவிர்க்க குறித்த காலத்திற்கு முன்னரே பயிரிடவும்.
  • இளம் பயிர்களின் விளிம்புகளை வெட்டுவதன் மூலம் அவற்றில் முட்டையிடப்படுவதைத் தவிர்க்கலாம்.
  • சுத்தம் செய்யும் வலை கொண்டு முதிர்ந்த பூச்சிகளைப் பிடிக்கவும்.
  • இதனை, அவை மெதுவாக நகரும் பொழுதான அதிகாலை நேரத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செய்யலாம்.
  • பயிர் செய்யாத காலத்தில் நெற்பயிர் நிலத்தில் உள்ள தேவையற்ற களைகளை அகற்றவும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் இளம் பயிர்களை பறித்து மற்றும் எரித்துவிடலாம் அல்லது சேற்றுப்பகுதியில் நன்கு ஆழமாகப் புதைத்துவிடலாம்.
  • பாதிக்கப்பட்ட நிலத்தில் அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை அளிக்க வேண்டாம்.
  • பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியினை உடைக்கப் பிற பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க