Monographella nivalis
பூஞ்சைக்காளான்
பாதிக்கப்பட்ட நாற்றுக்களின் ஆரம்ப இலைகளில் பழுப்பு நிறச் சிதைவுகள் தோன்றும் அல்லது முளைத்தவுடன் பின்னர் இறந்துவிடும். முதிர்ந்த பயிர்களின் அடிப்புற இலைகளில் பழுப்பு நிறச் சிதைவுகள் காணப்படும் (சிலவேளைகளில் அடர் கனி உடல் இலை உறைகளில் தோன்றலாம்) மற்றும் சாம்பல்-பழுப்புக் கொப்புளங்கள் அடிப்புறக் கணுவிடைகளைப் பாதித்து பின்னர் மேற்புறத்திற்குச் செல்லும். அதிகமாகப் பாதிக்கப்பட்ட தண்டுகள் அழுகும் மற்றும் ஆரஞ்சு நிறப் பூஞ்சைகளின் வளர்ச்சி அதில் காணப்படும். நிலத்தில் சற்று சாதகமற்ற சூழ்நிலைகள் நிலவும்போது தண்டுகள் உடைந்துவிடும். சிறிய, பழுப்பு நிற, நீர் தேங்கிய சிதைவுகள் சிறு பூக்களில் காணப்படும், அவை பச்சையாகவே இருந்தாலும், நோயின் வளர்ச்சி நிலைகளில் வெளிறியத் தோற்றத்தினைப் பெறும். சூடான மற்றும் ஈரப்பதமான சூழல்களில், கதிர்களின் அடிப்பகுதியில் ஆரஞ்சுநிறப் பூஞ்சைத் திசுக்கள் உருவாகும் மற்றும் பூக்காம்பிலைகள் ஊதா கலந்த பழுப்பு நிறத்தில் மாறும்.
குளிர்ச்சியினைத் தாங்கும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகளவில் பரப்புவதன் மூலம் நோய்க்குக் காரணமான பூஞ்சைகளின் வாழ்க்கைச் சுழற்சியினை தடுத்து மற்றும் அவற்றின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அஜோல்ஸ் (உதாரணமாக: டிரைஅடிமெனோல், பைடெர்டனோல், ப்ரோதியோகோனஸோல்), அல்லது ஸ்ட்ரோபிலுரின்ஸ் (உதாரணமாக: ஃப்லெஃக்ஸ்ட்ரோபின்) மற்றும் ஃபுபெரிடஸோல் அல்லது இப்ரோடியோன் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை விதைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தலாம்.
மோனோக்ராபெல்லா நிவாலிஸ் எனும் மண்வழிப் பரவும் பூஞ்சைகளினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. கோடைக்காலத்தில் பயிர்களின் எஞ்சிய பாகங்கள் அல்லது மண்ணில் இவை உயிர்வாழும். பனிப்பொழிவு அல்லது குளிர்காலத்தில், ஈரப்பதமான வானிலை ஏற்பட்டவுடன் பூஞ்சைகள் வளர்ந்து மற்றும் வித்துக்களை உருவாக்கும், அவை நாற்றுக்கள் மற்றும் அடிப்புற இலைகளைப் பாதிக்கும். இந்த வித்துக்கள் காற்று மற்றும் மேற்புற நீர் ஆகியவற்றினால் பரவும். இவை நிலத்தில் பிற பயிர்களின் பாகங்கள் மற்றும் பிற பயிர்களைப் பாதித்து, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 18-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இப்பூஞ்சைகளின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும், ஆனால் சில நேரங்களில், அவை குறைந்தது -6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் மற்றும் அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் கூட வளரும். குளிர்ந்த, உலர் சூழல்களில் பயிர்களின் அடிப்புற பாகங்கள் பாதிக்கப்படும், அங்கு நிலவும் ஈரமான, சூடான காலங்களைப் பொறுத்து தானியங்களைத் தாங்கும் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படும்.

Put your product in front of farmers the moment they diagnose தானியங்களின் பனிப் பூசண நோய் — right when they need a solution.
Explore
Explore the live agronomic data that powers Plantix disease pages.
Discover