சோயாமொச்சை

பூச்சிக்கொல்லியால் எரிந்துவிடுதல்

Pesticide Burn

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலை புள்ளிகள் அல்லது பெரிய திட்டுகள்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகுதல் மற்றும் வாடுதல்.
  • வெந்தப்பண் அல்லது நுனி கருகல்.

இதிலும் கூடக் காணப்படும்

34 பயிர்கள்
வாழைப் பழம்
பார்லிகோதுமை
விதையவரை
பாகற்காய்
மேலும்

சோயாமொச்சை

அறிகுறிகள்

தாவரங்களின் மீது இரசாயனங்களின் தவறான பயன்பாடு அல்லது தவறான உபயோகத்தால், தாவர நச்சுத்தன்மை (ஃபைட்டோடாக்சிட்டி) என்று அழைக்கப்படும் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன. அறிகுறிகளாவது இலையில் புள்ளிகள், சிதைந்த கொப்புளங்கள் தோன்றுவது, விளிம்புகள் பொசுங்கிவிடுவது மற்றும் முனை எரிந்து விடுவது போன்றது உள்ளிட்டவையாகும். சில நேரங்களில் நோய், பூச்சி அல்லது சிற்றுண்ணிகளால் ஏற்படும் சேதத்தோடும், சுற்றுச்சூழல் நிலைகளால் ஏற்படும் மற்ற நோய் குறிகளோடும் இவற்றைக் குழப்பிக்கொள்ளக்கூடும். இலக்கு அல்லாத அல்லது உணர்திறன் மிகுந்த தாவரங்கள் மீது காற்றோட்டம் காரணமாகவும் சேதம் ஏற்படலாம். அதே நேரத்தில் பொருந்தாத இரசாயனங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தும்போதும் தாவர நச்சுத்தன்மை ஏற்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகள் அல்லது நோய்கள் காய்கறித் தாவரங்களை தீவிரமாக சேதப்படுத்தும்போது, சில நேரங்களில் சேதமடைந்த பாகங்களை துண்டிப்பதும், மறுமுறை பயிரிட்டு, அடுத்த முறை பிரச்சனையை எப்படித் தடுப்பது என்பதையும் அறிந்து கொள்வது சிறந்தது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லியால் எரிந்து போவதற்கான கட்டுப்பாட்டு முறைகள் என்று எதுவும் இல்லை. குறிப்புகளின்படி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும். கடுமையான காயம் ஏற்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் யூரியா அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பாலிஃபீட் ஆகியவற்றை கலந்து தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

தாவரங்களுக்கான எதிர்மறையான சுற்றுச்சூழல்களில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது, தாவர நச்சுத்தன்மை அடிக்கடி ஏற்படுகிறது. பொதுவாக அதிக வெப்பநிலையும், ஈரப்பதமும் தீங்கு விளைவிக்கும் உயிரின கொல்லிகளால் (பூச்சிக்கொல்லிகளும், பூஞ்சைக்கொல்லிகளும், குறிப்பாக சோப்புகள், எண்ணெய்கள் மற்றும் கந்தக கலவைகள்) ஏற்படக்கூடும் சேதங்களை அதிகரிக்கும். குளிர்ந்த, ஈரப்பதம் மிகுந்த பருவங்களில், செம்பு சேர்ந்த பூஞ்சைக் கொல்லிகளால் சேதம் ஏற்படலாம். தெளிப்பு (ஸ்ப்ரே) பயன்பாடுகள் அமைதியான, உலர்ந்த குளிர்ச்சியான நிலைமைகளில் பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பாலான பூச்சிக்கொல்லிகளை 25°C க்கும் குறைவான வெப்பநிலைகளில் உபயோகப்படுத்துவது சிறந்தது. உயிரியக்கத்திற்கு அழுத்தம் தரும் சுற்றுச்சூழல் (வறட்சி, பூச்சிகளால் சேதம்) தாவரங்களை இரசாயன சேதத்திற்கு எளிதாக உள்ளாக்கிவிடுகின்றன. உலருவதற்கு இடம் தராத சூடான, ஈரப்பதமான மழைக்கால வானிலை, எதிர்ப்பு சக்தி கொண்ட தாவரங்களையும்கூட பாதித்துவிடக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • பூச்சிக்கொல்லியின் உபயோகம் தேவைப்படுகிறது என்றால், விளக்கச் சீட்டில்(லேபிள்) உள்ளக் குறிப்புகளின்படி இரசாயனங்களைப் பயன்படுத்தவும்.
  • எப்பொழுதும் தாவரங்களின் உணர்திறனைப் பற்றியும் பூச்சிக்கொல்லிகளின் கலவையைப் பற்றியும் முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ளவும்.
  • பூச்சிகளோ நோய்களோ காய்கறித் தாவரங்களை சேதப்படுத்தும்போது, பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சில நேரங்களில் சேதமடைந்த பகுதிகளை வெட்டிவிடுவதே சிறந்தது.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க