விவசாயத்தில் தீவிர மாற்றத்தை உருவாக்குகிறோம்

உலகெங்கிலும் உள்ள சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் விவசாய சில்லறை விற்பனையாளர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகிறோம். AI தொழில்நுட்பம், தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, சரியான தீர்வுகளை வழங்குவதும், நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதும் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுமே எங்கள் இலக்காகும்.

டிஜிட்டல் வேளாண்மை மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்

உலகத்திற்கான உணவை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் தகவல்களுக்கான குறைந்த அணுகல் போன்றவை விவசாயத்தை மேம்படுத்துவதை கடினமாக்குகிறது. அதனால்தான், நாங்கள் பிளான்டிக்ஸ் செயலியை உருவாக்கியுள்ளோம். இது விவசாயிகளுக்குத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாய உதவிக்குறிப்புகளுக்கான அணுகலை வழங்கும் இலவச செயலி ஆகும்.

நீடித்த மற்றும் லாபகரமான விவசாயத்தை ஆதரிக்கிறது

நமது விவசாய அமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாய சில்லறை விற்பனையாளர்களை மேம்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்களது இரண்டு செயலிகளான பிளான்டிக்ஸ் மற்றும் பிளான்டிக்ஸ் பார்ட்னர், வெறும் கருவிகள் மட்டுமல்ல; இவை விவசாயத் தொழிற்துறையை மாற்றியமைக்கும் இயக்கத்தின் அடித்தளமாகத் திகழுகின்றன, விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வுக்கான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே வேளையில் விவசாய சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விவசாய சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்ய வழிவகை செய்கிறது.

உங்களது வேளாண்மை வருமானத்தை அதிகரித்திடுங்கள்

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க

உங்களது வேளாண்மை-சில்லறை வணிகத்தை வளரச் செய்திடுங்கள்

பிளான்டிக்ஸ் பார்ட்னராகத் திகழ்ந்திடுங்கள்

கவனம், அக்கறை, இயலுமை, பகிர்வு!

எங்கள் பிராண்ட் மதிப்பானது, நாங்கள் எதை நம்புகிறோம் என்பதையும், எங்கள் வணிகத்தை எவ்வாறு நடத்துவது என்பதை நாங்கள் தேர்வுசெய்கிறோம் என்பதைப் பிரதிபலிக்கிறது. அவை எங்கள் கொள்கைகளை வழிநடத்துகின்றன.

கவனம்

பாரம்பரிய சிந்தனைக்குச் சவாலாக இருந்தாலும், சரியானதைச் செய்யவே நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்களால் இயன்ற அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தையும், மிகப்பெரிய மதிப்பையும் உருவாக்குவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.

அக்கறை

அக்கறை என்பது நமது செயல்கள் நமது சமூக மற்றும் இயற்கை சூழல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதே. எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் கனிவாகவும், அனுதாபமிக்கவராகவும், உதவிகரமாகவும் இருக்க முயற்சி செய்கிறோம்.

இயலுமை

மக்கள் வளரவும் சிறந்த வாழ்க்கையை வாழவும் உதவும் வகையில் புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்ய நாங்கள் உதவுகிறோம். இது அதிக சுதந்திரம், தன்னம்பிக்கை மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

பகிர்வு

நம்பகமான தகவலுக்கான அணுகலைக் கொண்டிருப்பது எங்கள் பயனர்களுக்குச் சிறந்த முடிவுகளை அடைய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, துல்லியமான, பொருத்தமான மற்றும் பக்கச்சார்பற்ற தகவலை எங்கு, எப்போது தேவைப்பட்டாலும் அவற்றை நாங்கள் வழங்குகிறோம்.

பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குதல்

ஜெர்மனி மற்றும் இந்தியாவில் அலுவலகங்களைக் கொண்ட ஒரு சர்வதேச நிறுவனமாக, அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்தும் உள்ள தனிநபர்களுக்குச் சம வாய்ப்புகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள். முன்னேற்றம், புத்திக் கூர்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை மதிக்கும் பணியிட கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம், அதன் மூலம் செழித்து வளரக்கூடிய சூழலை அனைவரும் உருவாக்குகிறோம்.

வாடிக்கையாளருக்கு முதல் முன்னுரிமை
வாடிக்கையாளரின் குரல்
எங்கள் பயனர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கு வாடிக்கையாளர் கருத்து மற்றும் எதிர்பார்ப்புகள் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
மக்களை மையமாகக் கொண்டது
வேலை-வாழ்க்கை சமநிலை
பணியாளர்களின் தனிப்பட்ட தேவைகளை நாங்கள் கருத்தில் கொண்டு, பணியின்போதும் அதற்குப் பின்னரும் தங்கள் நேரத்தை அனுபவிக்கும்படி அனைவரையும் ஊக்குவிக்கிறோம்.
முன்னேற்றத்துக்கான தூண்கள்
தொலைநோக்குப் பார்வை
நாங்கள் வலுவான நோக்கத்தோடு லட்சியத்துடன் இருக்கிறோம். எங்கள் முயற்சிகள் புத்தாக்கம் நிறைந்ததாகவும் எதிர்காலம் சார்ந்ததாகவும் இருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நன்னெறி நடத்தை
பாகுபாடின்மை
பாலினம், மதம், சாதி, இனம், வருவாய் பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் சமமாக வரவேற்கிறோம் மற்றும் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம்.