பருத்தி

இலை வண்ணச்சிதறல் நோய்

Chimera

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலை வண்ணச்சிதறல் நோயானது இலைகளின் மீது திட்டுக்களாகக் காணப்படும் நிறமாற்றங்களின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.
  • இலைத் திசுக்களின் பாகங்கள் வெள்ளை முதல் மஞ்சள் நிறம் வரை காணப்படும், இவை நிறத்திட்டு, திட்டுக்கள் அல்லது நேரியலான தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
  • இந்த நிலையானது எந்தவிதத் தீங்கும் விளைவிக்காது மற்றும் இது தாவரங்களின் சிறிய சதவீதத்தை மட்டுமே பாதிக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

16 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

இலைப் பகுதிகளில் மற்றும் சில நேரங்களில் தண்டுகளில் ஒழுங்கற்ற வெள்ளை முதல் மஞ்சள் நிறமாற்றங்களாக வண்ணச்சிதறல்கள் காணப்படும். சாதாரணப் பச்சை நிறம் கொண்டத் திசுக்கள் அருகில் இருக்கும், இது மாறுப்பட்ட நிறத்திட்டு, திட்டுக்களான அல்லது நேரியலானத் தோற்றத்திற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் நரம்புகளிலும் வண்ணச்சிதறல்கள் காணப்படும், அதாவது, எஞ்சிய இலைத் திசுக்கள் கரும் பச்சை நிறமாக இருக்கையில், நரம்புகளில் நிறமாற்றம் காணப்படும். தாவரங்களின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டால், பச்சையக் கூறுகளின் குறைபாடு குன்றிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வயலின் சிறிய சதவீதத்தை மட்டுமே பாதிக்கிறது; மேலும் இதனால் விளைச்சல் பாதிக்கப்படாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தக் குறைபாட்டுக்கான நேரடியான சுற்றுசூழல் காரணம் எதுவும் இல்லை என்பதால், இவற்றுக்குச் சிகிச்சை அளிக்க எந்தவொரு உயிரியல் சிகிச்சை முறைகளும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். இலை வண்ணச்சிதறல் என்பது மரபணு அல்லது உயிரியல் மாறுபாடு ஆகும், எனவே அவற்றுக்குச் சிகிச்சை அளிக்க எந்தவித இரசாயனத் தயாரிப்புகளும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

இலை வண்ணச்சிதறல் என்பது மரபணு அல்லது உடலியல் இயல்பிறழ்வுகள் ஆகும்; இது சுற்றுசூழல் நிலைமைகளுடன் தொடர்புடையதல்ல; அதாவது, இது எந்த நோய்க்கிருமியாலும் ஏற்படுவதில்லை. இலை வண்ணச் சிதறலின் முக்கியக் காரணம் இலைத் திசுக்களின் சில பகுதிகளில் பச்சையக் கூறுகள் குறைபாடு ஆகும். இது இயற்கையாக சிறிய அளவிலேயே ஏற்படுகிறது மற்றும் இது தாவரங்களுக்கும் விளைச்சலுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், சில அலங்கார மற்றும் தோட்டத் தாவரங்களில் இயற்கையாகவே வண்ணச் சிதறல்கள் காணப்படுகின்றன, மேலும் அது அவற்றின் அழகின் ஒரு பகுதியாகும்.


தடுப்பு முறைகள்

  • நன்கு அறிந்த இரகங்கள்/கலப்பினங்கள் ஆகியவற்றின் சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும்.
  • விதைகளில் மரபணு இயல்பிறழ்வுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும், இது இலை வண்ணச் சிதறலைத் தடுக்க உதவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க