நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நார்த்தை ஹிந்து சிலந்திப்பேன்

Schizotetranychus hindustanicus

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் எண்ணற்ற, சிறிய சாம்பல் அல்லது வெள்ளி நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்டத் திசுக்கள் பொதுவாக தூரத்திலிருந்து பார்க்கும்போது வெள்ளி நிறத் தோற்றத்துடன் காணப்படும்.
  • கடுமையான நோய்த்தொற்றானது முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இலைகள் உதிர்தல், கிளைகள் பின்புறமாக கருகி இறந்து போகுதல், குறைவான தரங்களை உடைய பழங்கள் மற்றும் மரங்களின் வீரியம் குறைந்து போகுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
  • நல்ல முறையில் நீர்ப்பாய்ச்சுதல் இந்த நோய் ஏற்படுவதையும், இந்த நோய்ப்பூச்சி ஏற்படுத்தும் சேதத்தினையும் குறைக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

சேதங்களானது இலைகளின் மேற்புறத்தில் சிறிய சாம்பல் அல்லது வெள்ளி நிறப் புள்ளிகள் தோன்றுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இது புள்ளிமுறைப் பொறிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக மையநரம்பு நெடுகிலும் எண்ணற்ற அளவில் காணப்படும், பின்னர் இவை முழு இலை பரப்பிற்கும் பரவும். வழக்கமாக, மரத்தின் விளிம்பில் இருக்கும் இலைகள், பழங்கள் மற்றும் கிளைகள் அதிகம் தாக்கப்படக்கூடும். அதிக அளவிலான நோய்த் தொற்றுகளின்போது, இந்த புள்ளிகள் இணைந்து, பெரிய திட்டுக்களாக மாறி, இலைகள் மற்றும் காய்களில் சீரான வெள்ளை அல்லது வெண்கல தோற்றத்துடன் காணப்படும். பாதிக்கப்பட்டத் திசுக்கள் படிப்படியாக கடினமாகி, சிதையும்; மேலும் இது முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இலைகள் உதிர்தல், கிளைகள் பின்புறமாக கருகி இறந்து போகுதல், குறைவான தரங்களை உடைய பழங்கள் மற்றும் மரங்களின் வீரியம் குறைந்து போகுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது குறிப்பாக பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் போது, உதாரணமாக உலர்ந்த,காற்றடிக்கும் வானிலையின்போது வழக்கமாக ஏற்படுகிறது. மாறாக, நல்ல முறையில் நீர் பாய்ச்சுதல் இந்த நோய் ஏற்படுவதையும், இந்த நோய்ப்பூச்சி ஏற்படுத்தும் சேதத்தினையும் குறைக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சிஸோடெட்ரானிக்கஸ் ஹிந்துஸ்தானிக்கஸ் பெரும் எண்ணிக்கையிலான இரைப்பிடித்துண்ணிகளையும், பிற இயற்கை எதிரிகளையும் கொண்டுள்ளது. வானிலையானது பூச்சிக்கு சாதகமற்றதாக இருந்தால், இந்த நோய்ப்பூச்சி பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இவை போதுமானது. வலைக் கூடுகள் காரணமாக, பைட்டோஸிட் சிலந்திப்பேன்கள் (உதாரணமாக இயூசீயஸ் ஸ்டிபுலேட்டஸ்) இந்த நோய்ப்பூச்சிக்கு எதிராக திறன்மிக்க வகையில் செயல்படுவதில்லை. ஸ்டெதோரஸ் இன லேடிபேர்டு (வண்டு வகை) என்பவற்றின் சில இனங்கள் இந்த நோய்ப்பூச்சியை பேரார்வத்துடன் உண்ணும். பூஞ்சை மற்றும் குறிப்பாக வைரஸ்கள், வயலில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இது வெப்பநிலைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் பரந்த வீச்சினை உடைய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு இரைப்பிடித்துண்ணிகளையும், பிற நன்மை பயக்கும் பூச்சிகளையும் அழித்து இந்த நிலைமையை மோசமாக்கக்கூடும். பல வகையான அகாரிசிட்ஸ்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது எதிர்ப்புத் திறன் உருவாகுவதைத் தவிர்க்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது சிஹோடெட்ரானிக்கஸ் ஹிந்துஸ்தானிக்கஸ் என்னும் நார்த்தை ஹிந்து சிலந்திப்பேனின் இளம் மற்றும் முதிர்ந்த பூச்சியின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இலைகளின் அடிப்புறத்தில் பெண்பூச்சிகள் உருவாக்கும் வித்தியாசமான வலைக் கூடுகள் (1-3 மிமீ விட்டம்) மற்றும் அதற்கடியில் உருவாகும் காலனிகள் மூலம் இந்தப் பூச்சி வகைப்படுத்தப்படுகிறது. இந்தத் தன்மை இந்த சிலந்திப்பேனை பிற வகையான சிலந்திப்பேன்களில் இருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது.இதனால் இந்த சிலந்திப்பேன் "கூட்டு-வலைப்பின்னும் சிலந்திப்பேன்" என்றும் அழைக்கப்படுகிறது. முதிர்ந்த பேன்கள் கூட்டை விட்டு வெளியேறி மற்ற இலைகள் அல்லது பழத் திசுக்களைத் தாக்கும், முதிர்ச்சியடையாத பேன்கள் வலைக்குள்ளேயே தங்கியிருக்க விரும்பும். பூச்சிகள் மற்றும் பறவைகள் மற்ற மரங்களுக்கு இந்த பேன்களை பரவச்செய்யக்கூடும். பாதிக்கப்பட்டக் கருவிகள் மற்றும் மோசமான வயல்வெளி நடைமுறைப் பயிற்சிகள் மற்ற வயல்களுக்கு இந்த பூச்சியை பரவச்செய்கின்றன. நல்ல நீர்ப்பாசனத் திட்டத்துடன் உகந்த அளவிலான நீரை மரங்களுக்கு பாய்ச்சுதலானது இந்த நோய் ஏற்படுவதையும், இந்த நோய்ப்பூச்சி ஏற்படுத்தும் சேதத்தினையும் குறைக்கும். மாறாக, குறைந்த அல்லது அதிக ஈரப்பதம், அதிக காற்று, வறட்சி அல்லது மோசமாக வளர்ச்சியடைந்த வேர் அமைப்பு இந்த நிலைமையை மோசமாக்கக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு பூதக்கண்ணாடிகளைக் கொண்டு பழத்தோட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளின் எண்ணிக்கையை எதிர்மறையாக பாதிக்கும்.
  • தினந்தோறும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி, வறட்சியினால் ஏற்படும் அழுத்தத்தினைத் தவிர்க்கவும்.
  • மரத்தின் கிளைகள் நிலத்தில் உள்ள களைகள் அல்லது புற்களில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • பழத் தோட்டங்களில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • அறுவடைக்குப் பின் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க