பிஸ்தா பருப்பு

பிஸ்தாவில் வெந்தப்புண் (வெப்பப்புண்)

Abiotic Sunburn

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் ஓரத்தில் இருந்து வாடி மஞ்சளாக மாறும்.
  • பழங்கள் மற்றும் பட்டைகள் இலையுதிர்ந்த பிறகு பாதிக்கப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
பிஸ்தா பருப்பு

பிஸ்தா பருப்பு

அறிகுறிகள்

உயிர்சாரா வெந்தப்புண் என்பது நேரடி சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவற்றின் கலவையால் மரங்களுக்கு ஏற்படும் சேதத்தை குறிக்கிறது. இந்த காரணிகள் தாவரத் திசுக்களில் ஈரப்பதத்தை மாற்றும், இதன் விளைவாக ஆரம்பத்தில் இளம், மென்மையான இலைகள் வாடிவிடும். இந்த இலைகள் படிப்படியாக வெளிர் பச்சை நிறமாக மாறி 2-3 நாட்களுக்குப் பிறகு இறுதியில் முகடு மற்றும் ஓரங்களுக்கு அருகில் சிதைவுகளை உருவாக்கத் தொடங்கும். வறண்ட சிதைவுகள் பின்னர் இலை மேற்பரப்பின் நடுப்பகுதியை நோக்கி பரவும். வறட்சி அழுத்தம் அல்லது பூச்சி தாக்குதலால் ஏற்படும் இலை உதிர்வு, பட்டை மீதான சூரியத்தாக்கதுக்கு வழிவகுக்கும். இதில், அவை வெடிப்பு மற்றும் சொறிநோய்கள் வடிவத்தில் இருக்கும், இவை இறுதியில் பாகத்தின் காய்ந்துபோன (இறந்த) பகுதிகளாக உருவாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சூரிய ஒளி நேரடியாகப் படாமல் தடுக்க வெள்ளை களிமண் அல்லது டால்க் கலவைகளை இலைகள் மற்றும் தண்டு மீது தெளிக்கலாம். இது வெப்பநிலையை 5-10 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கலாம். கால்சியம் கார்பனேட் அல்லது படிக சுண்ணாம்புக் கற்களை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. கார்னாபா மெழுகு பொருட்கள் தாவரங்களுக்கு இயற்கை சூரிய ஒளி பாதுகாப்பு தயாரிப்பாக (சன்ஸ்கிரீனாக) செயல்படுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைத்தால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். அப்சிசிக் அமிலத்தை உர நிரப்பியாகப் பயன்படுத்தப்படுவது ஆப்பிள் போன்ற பழங்களுக்கு சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க உதவுகிறது, எனவே இது மற்ற பயிர்களுக்கும் பலனளிக்கலாம். பாலி-1-பி மெந்தீனை அடிப்படையாகக் கொண்டவை போன்ற இலைகளால் நீர் இழப்பைக் குறைக்க நீராவிப்போக்கிற்கு எதிரான தயாரிப்புகளும் சில ஆய்வுகளில் நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளன.

இது எதனால் ஏற்படுகிறது

அதிக சூரியக் கதிர்வீச்சு, அதிக காற்று வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வளரும் மரங்களில் வெந்தப்புண் (வெப்பக்காயம்) பொதுவானது. உயரமான இடங்களில் புற ஊதா (UV) கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் உயரமும் பங்கு வகிக்கிறது. அறிகுறிகள் இலைகள், பழங்கள் மற்றும் பட்டைகளில் தெரியும். வெயிலின் தாக்கம் மற்றும் தீவிரத்தன்மை தாவரத்தின் பல்வேறு வகை, அதன் வளர்ச்சி நிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் போன்ற காரணிகளையும் சார்ந்துள்ளது. பழங்களின் வளர்ச்சியின் போது காற்றின் வெப்பநிலை மற்றும் வெயில் படும் நேரங்களின் அளவு அதிகமாக இருக்கும் போது, வெந்தப்புண் மிகவும் கடுமையானதாக இருக்கும். வானிலை நிகழ்வுகளின் மாற்றமும் முக்கியமானது: இதனால், குளிர் அல்லது மிதமான வானிலை திடீரென வெப்பமான, வெயில் காலநிலையைத் தொடர்ந்து ஏற்படும் போதும் சேதம் ஏற்படலாம்.


தடுப்பு முறைகள்

  • வெப்பக்காயத்தைத் தாங்கக்கூடிய வகைகளைப் பயன்படுத்தவும்.
  • மண்ணின் நீரை தக்கவைக்கும் திறனை அதிகரிக்க வரிசைகளுக்கு இடையே உள்ள நிலவளங்காப்புப் பயிர்களை பயன்படுத்தவும் (உதாரணமாக அன்னாசி தோட்டத்தில் சோளம் அல்லது துவரஞ்செடி).
  • நீர்ப்பாசனம் பயிர்களின் நீர்த் தேவைகளுக்கு நன்கு பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • மரத்திற்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் வெயிலைத் தவிர்க்க வெப்ப அலைகளுக்கு சற்று முன் அல்லது வெப்ப அலையின்போது நீர்ப்பாசனம் செய்யவும்.
  • அதிகப்படியான கோடை சீர்திருத்தம் மற்றும் இலைகள் கத்தரிப்பைத் தவிர்க்கவும்.
  • விதானம் வழியாக காற்றோட்டத்தை மேம்படுத்தவும்.
  • செடி அல்லது மரம் தெளிப்பான் குளிரூட்டும் முறைகளையும் செயல்படுத்தலாம்.
  • தேவைப்பட்டால் நிழல் வலையையும் பயன்படுத்தலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க