அரிசி

நெற் கதிர் சிற்றுண்ணிகள்

Steneotarsonemus spinki

சிலந்திப்பேன்

5 mins to read

சுருக்கமாக

  • இலை உறைகளின் நிறமாற்றம்.
  • இலைகளில் பழுப்பு நிறத்திட்டுகள்.
  • கதிர்கள் உண்ணப்படுவதால் மலட்டுத்தன்மை, சிதைந்த தானியங்கள், நேரான கதிர்கள் மற்றும் "கிளி மூக்கு" தானியம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

இலை உறைகளுக்குப் பின்புறம் இவை ஊட்டம் பெறும், அவ்விடங்களில் உள்ள இலவங்கப்பட்டை மற்றும் சாக்லேட்-பழுப்பு நிறத்திலான காயங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். வெளிப்புற இலை உறைகளை நீக்கும்போது எளிதாக இதனைக் காண இயலும். கதிர்கள் வளரத் தொடங்கும் நிலையிலிருந்து பால் விடும் நிலைக்கு வளரும் வரையிலும் இந்த சிற்றுண்ணிகள் ஊட்டம் பெறும். இந்த பாதிப்புகளின் காரணமாக, பிற நோய்களை ஏற்படுத்தும் பூஞ்சைகள், வளரும் தானியங்கள் மற்றும் இலை உறைகளை (இலை உறை அழுகல் நோய்) எளிதில் தாக்குவதற்கு உள்நுழையும். இது பூக்களின் மலட்டுத் தன்மை, பயிரின் மலட்டுத் தன்மை, நேர் தலை பயிர்கள் மற்றும் "கிளி மூக்கு தானியம்" என்றழைக்கப்படும் தானியங்களின் பண்புகளில் மாற்றம் ஆகியவற்றினை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் உள்ள நெற்பயிர்களை தாக்கும் முக்கியமான பூச்சியினங்களில் இதுவும் ஒன்று.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி இயற்கையாகவே சிற்றுண்ணிகளுக்கு எதிராக அமைந்த சிலந்தி, அக ஒட்டுண்ணி குளவிகள் போன்றவற்றை அழித்துவிடாமல் இருப்பதில் கவனமாக இருக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டால் ஹெக்ஸிதயாஸோஃக்ஸ் அல்லது சல்பர் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும். தெளிப்பதற்கு முன்பு, அதிகப்படியான நீர்ப்பாசனம் செய்து பயிரின் அடிப்பகுதியில் இருக்கும் சிற்றுண்ணிகளை பயிரின் மேல்பகுதிக்கு அனுப்ப செய்யவும். இதன் மூலம், இச்சிகிச்சை மேலும் பயன்தரும்.

இது எதனால் ஏற்படுகிறது

ஸ்டெனேயோடார்சோனிமஸ் ஸ்பிங்கி எனும் தானியத்தின் ஊட்டம் பெறும் சிற்றுண்ணியினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகிறது. அதிக வெப்பநிலை மற்றும் குறைவான மழைப்பொழிவு போன்ற சூழல்களில் சிற்றுண்ணிகள் அதிகளவில் பெருகும். 25.5 மற்றும் 27.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை, 80 முதல் 90% வரையிலான ஈர்ப்பதம் போன்றவை சிற்றுண்ணிக்கு ஏதுவான சூழ்நிலையாகும். தொடர்ச்சியான நெற்பயிர் விவசாயம் மற்றும் பிற நிலங்களில் பயன்படுத்திய அதே கருவிகளை புதிய நிலங்களில் பயன்படுத்துவது போன்றவை சிற்றுண்ணிகள் அதிகரிக்க வழிவகை செய்யும். ஆண்டு முழுவதும் நெற்பயிர் சிற்றுண்ணிகளால் பாதிக்கப்படும். இருப்பினும், இவற்றின் எண்ணிக்கை தானியங்களின் ஆரம்பநிலையில் அதிகமாகும், முதிர்ச்சியடையும் போது குறைந்துவிடும். இலை உறை அழுகல் (சரோகிளாடியம் ஒரிஜெ) மற்றும் பாக்டீரியா தானிய கருகல் நோய் (பர்க்ஹோல்டேரியா குளுமே) போன்ற நோய்களின் அறிகுறிகளுடன் இந்த சிற்றுண்ணிகளின் நோய் அறிகுறிகளும் ஒத்துப்போவதால் இவற்றினை எளிதில் அடையாளம் கண்டறிவது சற்று கடினம்.


தடுப்பு முறைகள்

  • சிற்றுண்ணிகளின் அறிகுறிகள் குறித்து விளைநிலங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • அறுவடைக்குப் பின்னர், நிலத்தை உழுவதற்கு முன் வைக்கோல் இழைகளை பரப்பி, எரித்துவிடவும்.
  • அறுவடைக்குப் பின்னர் நிலத்தினை தரிசு நிலமாக இரு வாரங்களுக்கு விட்டுவிடவும்.
  • அதிகப்படியான அடர்த்தியுடன் வரிசையாக நாற்றுக்களை நடவும்.
  • தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்துக்கள் சமச்சீரான விகிதத்தில் உள்ள வளமான மணலை உபயோகிக்கவும்.
  • பீன்ஸ் அல்லது பயறுவகை தாவரங்களை கொண்டு பயிர் சுழற்சியை மேற்கொண்டு சிற்றுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சியினை உடைக்கலாம்.
  • விவசாயத்தில் பயன்படுத்தும் அனைத்து கருவிகள் மற்றும் இயந்திரங்களையும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பயன்படுத்த வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க