அரிசி

சுருள் மாமிசப்புழு

Hydrellia philippina

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மஞ்சள் நிறப் புள்ளிகள், வெள்ளை அல்லது ஒளிபுகும் வகையிலான திட்டுக்கள் அல்லது கோடுகள் மற்றும் சிறிய துளைகள் இலைகளில் காணப்படும்.
  • இலைகள் உருக்குலைந்து போகும் மற்றும் பயிரின் வளர்ச்சி குன்றும்.
  • சில நேரங்களில் பாதியளவு தானியங்கள் மட்டுமே நிரம்பியிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

ஹெச்.பிலிபினாவின் முட்டைப்புழுக்கள் மடிந்த இலைகளின் உள்புற ஓரங்களை உண்ணுகின்றன. பயிர்கள் வளரும் நிலையில் இலைகள் படிப்படியாகத் திறந்திருப்பதால், மஞ்சள் நிற புள்ளிகள் அல்லது உட்புற ஓரங்களில் கோடுகள், வெள்ளை அல்லது வெளிப்படையான திட்டுக்கள் அல்லது சிறு துளைகள் போன்றவைகளாக உண்ணும் அமைப்புகள் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் உருக்குலைந்து காணப்படும் மற்றும் சில நேரங்களில் காற்றினால் இலைகள் உடைந்தும் போகலாம். இப்பூச்சிகள் கொடி இலையினையும் பாதிக்கலாம், இதனை இலையின் கூர் முனைப்பகுதியில் உள்ள சிறிய துளைகள் இருப்பதன் மூலமும் மற்றும் நிறமாறிய ஓரங்கள் மூலமும் அறியலாம். இவை வளர்ந்து வரும் கதிர்களை அடைந்தால், பாதியளவு தானியங்களை மட்டுமே பூர்த்தி செய்யலாம். பொதுவாக, நெற்பயிர்கள் இப்பூச்சிகளினால் அடைந்த சேதத்தினை தானே சரிசெய்துகொள்ளும் மற்றும் அதிகப்படியான பக்கக் கன்றுகள் வளரும் நிலைகளில் பூச்சிகள் ஏற்படுத்திய அறிகுறிகள் இருக்காது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஓபியஸ் இனங்கள், டெட்ராஸ்டிகஸ் மற்றும் டிரைகோக்ராமா போன்றவற்றின் சிறிய பூச்சிகள் சுருள் மாமிசப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் மீது ஒட்டுண்ணி போல் பற்றி படர்ந்து அவற்றை அழிக்கும். டோலிகோபஸ், மெடிடெரா மற்றும் சின்டோர்மான் போன்ற பறக்கும் பூச்சிகள், சுருள் மாமிசப்புழுக்களின் முட்டைகளை வேட்டையாடும். எபிட்ரிட் ஈக்களின் ஓக்தேரா ப்ரெவிடிபியலிஸ் இனங்கள் மற்றும் ஆக்சியோப்ஸ் ஜாவனஸ், லைகோசா ப்சியூடோன்னுலடா மற்றும் நியோஸ்கோனா தியசி போன்ற இனங்களின் சிலந்தி வகைப் பூச்சிகளும், முதிர்ந்த மாமிசப்புழுக்களை உண்ணும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பொதுவாக, எச்.பிலிபினாவின் அறிகுறிகளானது அதிகபட்ச பக்கக்கன்றுகள் உருவாகும் நிலைகளில் மறைந்துவிடும் மற்றும் பூச்சிக்கொல்லி கட்டுப்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை. அதிகப்படியான பாதிப்புகளில், நிலக்கரி தார் அல்லது வேப்ப எண்ணெய் உடன் பூச்சிக்கொல்லிகளின் துகள்களை ஒற்றை-வேர் மண்டலத்தில் பயன்படுத்துவது நல்ல கட்டுப்பாட்டை அளிக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் அல்லது தாமதமாக பயிரிடப்பட்ட சூழ்நிலைகளில் இவை நல்ல பலன் அளிக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அரை நீர்வாழ் உயிரினம் சுருள் மாமிசப்புழு, ஹைட்ரெல்லியா பிலிபினா என்பவற்றின் முட்டைப்புழுக்களால்தான் நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இலைகளை உண்ணும் வகையினைச் சேர்ந்த இப்பூச்சிகள் மற்றவகை பூச்சிகளிடம் இருந்து சிறிய வேறுபாட்டினைக் கொண்டுள்ளது. இப்பூச்சிகள் இலைகள் விரியும் முன்னரே மடிந்து இருக்கும்போது அவற்றில் இருந்து ஊட்டம் பெற்று தனிப்பட்ட சிதைவு வடிவமைப்புகளை இலையின் பரப்புகளில் உருவாக்கும். இவையே இவற்றினை வேறுபடுத்திக் காட்டுகின்றன. நீர்ப்பாசனம் கொண்ட பகுதிகள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் குளம் அல்லது அதிகப்படியான நீர்த்தேக்கம் கொண்ட பகுதிகள் மற்றும் செழிப்பான பயிர் வளர்ச்சி கொண்ட பகுதிகளில் இப்பூச்சிகள் இருப்பது பொதுவான விஷயமாகும். ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்தல் மற்றும் இளம் நாற்றுக்களை இடம்பெயர்த்தல் போன்றவை இவற்றிற்கு ஏற்ற செயல்பாடுகள் ஆகும். இருப்பினும், நேரடியாக விதைக்கப்பட்ட நிலங்கள், விதைப்படுகைகள் அல்லது நீர் நன்கு வடிந்த வயல்களில் இவற்றால் வாழ இயலாது. முழுவதும் வளர்ந்த சுருள் மாமிசப்புழுவானது, ஊட்டம் பெறும் தளிருக்கு வெளியே கூட்டுப்புழுவாக மாறும். இப்பூச்சிகளின் முதன்மை இலக்கு நெற்பயிர்தான் ஆனால் பிற புல்வகை பயிர்களிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன, அவையாவன ப்ராசியரியா, சியான்டன், எக்கினோக்லோ, லீர்சியா, பனிகம் மற்றும் காட்டு அரிசி ஆகும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதிகளில் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால், அவற்றினைப் பயிரிடவும்.
  • நேரடியாக விதைக்கவும் அல்லது விதைப்படுகைகளைப் பயன்படுத்தவும், ஏனெனில் அவை முதிர்ந்த பூச்சிகளைக் கவருவதில்லை.
  • நைட்ரஜன் கலந்த பொருட்களைக் கொண்டு அதிகமான உரங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • நீரின் மேற்பரப்பினை எளிதில் மூடும் வகையிலான பயிர் வளர்ப்பு முறைகளைப் பயன்படுத்தவும், ஏனெனில், இவை நெல் பயிர்களை பூச்சிகளால் குறைவாக பாதிக்கப்படக்கூடியதாக ஆக்கும்.
  • அஸோல்லா மற்றும் சால்வினியா மோலெஸ்டா போன்றவற்றினால் நீரின் மேற்பரப்பினை மூடி நோய்த் தொற்றினைத் தவிர்க்கலாம்.
  • பயிர்களை நடவுசெய்த பின்பு, அடுத்த 30 நாட்களுக்கு சரியான முறையில் ஒழுங்கான இடைவெளிகளில் வயல்வெளிகளில் உள்ள நீரை வடியச் செய்யவும்.
  • பூச்சிக்கொல்லிகளை பரந்தளவில் பயன்படுத்துவதைக் குறைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க