மற்றவை

உடலியல் இலை புள்ளி நோய்

PLS

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • பல்வேறு வகையான இலை அறிகுறிகள் பல்வேறு அளவுகளில் மற்றும் பல்வேறு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
  • இலை நரம்புகள் மற்றும் பொதுவாக கூர்மையான விளிம்புகளால் வரையறுக்கப்பட்ட புள்ளியமைப்பு, தாவரங்களின் அனைத்து இலைகளிலும் காணப்படும் ( இவற்றுக்கு எதிராக இலை புள்ளி நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் மட்டும் ஏற்படுவதோடு, பூஞ்சைகள் மூலம் பரவும்).

இதிலும் கூடக் காணப்படும்

2 பயிர்கள்
பார்லிகோதுமை
கோதுமை

மற்றவை

அறிகுறிகள்

பயிர் வகை, பல்வேறு வகைகள், பருவம் மற்றும் மேலாண்மை வகை ஆகியவற்றைப் பொறுத்து, உடலியல் இலைப் புள்ளியின் அறிகுறிகள் அளவிலும் வண்ணத்திலும் கணிசமாக வேறுபடும். சில தானியங்கள் மஞ்சள் நிறப் புள்ளிகள் அல்லது ஆரஞ்சு நிற ஊசி குத்தியது போன்றப் புள்ளிகளை கொண்டிருக்கும், மற்றவை பழுப்பு அல்லது சிவந்த பழுப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும். சில சந்தர்ப்பங்களில், இந்த புள்ளிகள் பெரிதாகி, நீர்தோய்த்த விரல்அச்சு போன்ற புள்ளிகளாக மாறும். இந்த அறிகுறிகளானது மஞ்சள் கலந்த பழுப்பு நிறம், ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகள் மற்றும் செப்டோரியா இலைப் புள்ளி போன்ற பூஞ்சையால் ஏற்படும் இலை புள்ளி நோயின் அறிகுறிகளுடன் குழப்பிக்கொள்ளக்கூடும், இருப்பினும், காரணம் உடற்கூறியல் என்றால், தாவரங்களின் அனைத்து இலைகளிலும் இந்த புள்ளிகள் காணப்படும், அதேசமயம் பூஞ்சை நோய்கள் பொதுவாக கீழ்ப்புற விதானத்தில் இருந்து தொடங்கும். மற்றொரு முக்கியமான வேறுபாடு, உடலியல் புண்கள் இலை நரம்புகளால் வரையறுக்கப்பட்ட கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருக்கும் (இவற்றுக்கு எதிராக இலை புள்ளி நோயின் அறிகுறிகள் பூஞ்சைகள் மூலம் பரவும்).

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தற்போது உடலியல் இலை புள்ளிகளுக்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், தயவு செய்து எங்களுக்கு தெரிவிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மண்ணின் ஹைட்ரோஜன் அயனிச்செறிவு நடுநிலை அல்லது குறைவாக இருக்கும் சமயங்களில், கேசிஎல் வடிவிலான பொட்டாஷ் பயன்பாடு சில வகைகளில் அறிகுறிகளை சரிசெய்வதாகவும் அல்லது மீண்டும் திரும்ப பெறுவதாகவும் கூறப்படுகிறது. உயர் ஹைட்ரோஜன் அயனிச்செறிவு கொண்ட மணலில் பொட்டாஷை வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

உடலியல் இலைப் புள்ளி நோய் பெரும்பாலும் குளிர்கால கோதுமையில் காணப்படும், ஆனால் பிற தானியங்களும் பாதிக்கப்படக்கூடும். சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் திசு ஆக்ஸிஜனேற்றத்தால் இந்த கோளாறு ஏற்படுவதாக கருதப்படுகிறது, உதாரணமாக மேல்புற இலைகளுக்கு சூரியனால் ஏற்படும் சேதம் அல்லது மண்ணில் குளோரைடு இல்லாமை போன்றவற்றினால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. சூடான, வெயிற் காலங்களை தொடர்ந்து நிலவும் குளிர்ந்த, மேகமூட்டமான, ஈரப்பதமான வானிலை போன்ற பிற அழுத்தங்களும் இந்த நோயை தூண்டக்கூடும். இலை உறைகளின் அடிப்பகுதியில் படியும் மகரந்தம் மற்றும் தண்ணீரும், இந்த உடலியல் புள்ளிகளின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். இந்த உடலியல் இலைப் புள்ளிகளானது மஞ்சள் கலந்த பழுப்பு நிறம், ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகள் மற்றும் செப்டோரியா இலைப் புள்ளி போன்ற நோய்களால் ஏற்படும் இலைப் புள்ளி அறிகுறிகளுடன் எளிதாக குழப்பிக்கொள்ளக்கூடும். இருப்பினும், இந்த நோய்களுக்கு மாறாக, இந்த நோய் விளைச்சலை பாதிக்கும் என்று கருதப்படவில்லை. எனவே பூஞ்சைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்கும் முன் இந்தப் புள்ளிகள் நோய்களால் ஏற்பட்டதா, அல்லது இல்லையா என்று வேறுபடுத்தி அறிவது மிகவும் முக்கியம்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கும், நோயினை தாக்குப்பிடிக்கக்கூடிய தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • தொடர்ச்சியாக பயிர்களை சோதித்து, நோய்க்கானச் சோதனைகளை கண்டறியக்கூடிய ஆய்வகங்களில் மேற்கொள்ளவும்.
  • குறைந்த அளவிலான குளோரைடு கொண்ட மண்ணை தவிர்க்கவும், இந்த ஊட்டச்சத்துக்காக தொடர்ந்து மண்ணை கண்காணிக்கவும்.
  • உரமிடும் திட்டத்தில் நிரப்பியாக கேசிஎல் வடிவில் பொட்டாஷ் என்பவற்றை பயன்படுத்தவும் (மணல் குறைந்த அளவிலான ஹைட்ரஜன் அயனிச்செறிவை கொண்டிருந்தால் மட்டும்).

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க