வாழைப் பழம்

வாழைப்பழ அந்துப்பூச்சி

Opogona sacchari

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பூச்சிகள் ஏற்படுத்தும் உண்ணும் சேதங்கள் வேர்கள், தண்டுகள், போலி தண்டுகள், பட்டைகள் மற்றும் பழங்கள் மீது துளைகளாகத் தோன்றும்.
  • தாவரங்கள் முழுவதும் குடையப்படக்கூடும்.
  • இலைகள் வாடி, உதிரக்கூடும்.
  • முதிர்ச்சி அடைவதற்கு முன்பே இலை உதிர்வு ஏற்படக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்


வாழைப் பழம்

அறிகுறிகள்

தாவரம் வளரும் பருவத்தில், பூக்கும் பருவத்தில் மற்றும் அறுவடைக்குப் பிறகும் இந்த நோய்த்தொற்று ஏற்படும். பொதுவாக, முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சேதமடைந்த மற்றும் அழுகிய தாவரங்களால் ஈர்க்கப்படுகின்றன. உண்ணும் சேதங்களானது, முட்டைப் புழுக்களால் மட்டுமே ஏற்படுகிறது, இது சாதாரணமாக அழுகிய தாவரங்களை உண்ணுவதால் ஏற்படுகிறது. கழிவுகளை உண்ட பிறகு, அவை ஆரோக்கியமான தாவரப் பொருட்களை (வேர்கள், தண்டுகள், போலி தண்டுகள், பட்டைகள் மற்றும் பழங்கள்) உண்ணத் தொடங்குகின்றன. விதைகளும் தாக்கப்படக்கூடும். ஆரம்ப அறிகுறிகளானது குடைவுகளாகத் தோன்றும், ஆனால் ஆரம்ப கட்டங்களில் அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பொதுவாக, பூச்சிகள் பிந்தைய கட்டங்களில் கண்டறியப்படும். சதைப்பகுதியான தாவர பாகங்கள் முழுவதுமாகக் குடையப்பட்டு மற்றும் இலைகள் வாடி காணப்படும். மோசமான பாதிப்புகளின்போது, இலை உதிர்வை ஏற்படுத்தும் மற்றும் தாவரத்தை முழுவதுமாக அழித்து விடக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பசுமை இல்ல சோதனைகளில், ஸ்டீனெர்னெமா பெல்டியே, ஹெட்டிரோர்ஹாப்டிடிஸ் பாக்டொரோபொரா மற்றும் ஹெட்டிரோர்ஹாப்டிடிஸ் ஹெலியோதிடிஸ் போன்ற நூற்புழுக்களின் பயன்பாடு முட்டைப்புழுக்களுக்கு எதிராகத் திறன்பட செயல்பட்டது. பேசில்லஸ் துரிங்ஜென்சிஸ் தயாரிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். சிகிச்சைகளுக்கு, நீங்கள் இமிடாகுளோபிரிட் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் ஓபோகோனா சக்காரி என்னும் இனங்களின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. அந்துப்பூச்சிகள் இரவில் இயங்கக் கூடியவை. அவை பிரகாசமான பழுப்பு நிற உடலையும், சுமார் 11 மிமீ அளவும், மற்றும் அதன் இறக்கை 18-25 மிமீ நீளத்தினையும் கொண்டிருக்கும். அதன் முன் இறக்கைகள் ஒரே மாதிரியான பழுப்பு நிறத்திலும், சில நேரங்களில் நீண்ட கருமையான பட்டைகளுடனும் காணப்படும் மற்றும் ஆண் பூச்சிகள் கரும்பழுப்பு நிறக் புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதன் பின் இறக்கைகள் சாம்பல் மற்றும் பிரகாசமாக மற்றும் விளிம்புகளில் வரிகளைக் கொண்டிருக்கும். பெண் அந்துப்பூச்சி சுமார் 50-200 முட்டைகளை சுமார் 5 கொத்துக்களாக தாவர திசுக்களின் காயங்கள் மற்றும் பிளவுகளில் இடும். சுமார் 12 நாட்களுக்குப் பிறகு வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் சற்று ஒளிபுகக்கூடிய முட்டைப்புழுக்கள் முட்டையிலிருந்து வெளியே வரும். முட்டைப்புழுக்கள் பளபளப்பான சிவப்பு முதல் பழுப்பு நிற தலைகளுடன், கண் போன்ற குறியை அதன் இரு புறங்களிலும் கொண்டிருக்கும். முட்டைப்புழுக்கள் சுமார் 50 நாட்களுக்குள் சுமார் 26 மிமீ வரை வளரும். பின்னர் அவை உண்ணும் துளைகளுக்கு அடியில் கூட்டுப்புழுக்களாக மாறும். கூடுதலாக 20 நாட்களுக்குப் பிறகு, புதிய தலைமுறை அந்துப்பூச்சிகள் வெளியே வரும். குளிர்ந்த வெப்பநிலை (சுமார் 15° செல்சியஸ்) மற்றும் வறண்ட வானிலை ஆகியவை இதன் வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ளது. வெப்பமான சூழலில் இந்தக் கால அளவு குறையக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான விதைகள் மற்றும் நடவுப் பொருட்களை பயன்படுத்தவும்.
  • பூச்சிகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்கள் மற்றும் தாவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களை கையால் எடுத்து மற்றும் அழிக்கவும்.
  • நோய்த்தொற்றுக்கு மூலமாக இருக்கக்கூடிய உலர்ந்த தாவர பொருட்களை அகற்றி மற்றும் அழித்துவிடவும்.
  • பயிர் செய்யும்போது கவனமாக கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தாவரங்களுக்கு இயந்திரங்களால் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க