சோயாமொச்சை

உரங்களினால் ஏற்படும் வெந்தபண்

Fertilizer Burn

மற்றவை

5 mins to read

சுருக்கமாக

  • இலை ஓரங்கள் பழுப்பு நிறமாகும் அல்லது இலைகள் காய்ந்துப் போகும்.
  • இலைகள் வாடி, மஞ்சள் நிறமாகும்.
  • தாவரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்
கடுகு எண்ணெய்
பருத்தி
சோயாமொச்சை

சோயாமொச்சை

அறிகுறிகள்

அதிகப்படியான உரப் பயன்பாட்டினால் ஏற்படும் சேதமானது பொதுவாக இலை ஓரங்களை பழுப்பு நிறமாக மாற்றும் அல்லது இலைகளை வாடிப்போகச் செய்யும். உரங்களில் இருக்கும் கரையக்கூடிய உப்புகள் வேர்களின் திசுக்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதனை வாடிப்போகச் செய்யும், இலைகளின் ஓரங்களை மஞ்சள் நிறமாக மாற்றும், தாவரங்களின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும். இலை வெந்தபண் அல்லது வாடுதல் சில உரங்களை நேரடியாக இலைத் தொகுதிகளில் பயன்படுத்துவதினால் ஏற்படுகிறது - குருணை உரங்களைப் பரப்புதல் அல்லது திரவமாகத் தெளிப்பதன் மூலம் பயன்படுத்தலாம். மண்ணின் வகை, நீர்ப்பாசன நடைமுறைகள், உப்பின் அளவு மற்றும் குறிப்பிட்டத் தாவரங்களின் உணர்திறன் போன்ற காரணிகள் சேதங்களின் அளவைப் பாதிக்கலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

உரங்களினால் ஏற்படும் வெந்தபண் நோய்க்கான உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இல்லை.

இரசாயன கட்டுப்பாடு

உரங்களினால் ஏற்படும் வெந்தபண் நோய்க்கான இரசாயனக் கட்டுப்பாட்டு முறைகள் எதுவும் இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது

அதிகப்படியான உர பயன்பாடுகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மண் வகை, நீர்ப்பாசன நடைமுறைகள், உப்பின் அளவு மற்றும் குறிப்பிட்ட தாவரங்களின் உணர்திறன் போன்ற காரணிகள் சேதத்தின் அளவு இருக்கும். காய்கறித் தாவரங்களில் ஏற்படும் சேதம் வெப்பமான வறண்ட வானிலையில் மிகவும் கடுமையானதாக இருக்கும். உரத்தில் உள்ள உப்புக்கள் வறட்சியான நிலைமைகளின் கீழ் மண்ணில் மிகவும் அடர்த்தியாக இருக்கும். இது நேரடி வேர்க் காயங்களுக்கு வழிவகுத்து, அது காற்றில் ஆடும் தாவர பாகங்களை வாடச் செய்வதன் மூலம் வெளிப்படுத்தும். மேலும், கரையக்கூடிய உப்புகள் தாவரங்களின் வழியாக நீர் ஓட்டத்தைப் பின்பற்றி, வெப்பமான, உலர்ந்த நாட்களில் நீராவி அல்லது ஆவியாதல் மூலம் விரைவாக ஈரப்பதம் இழக்கக்கூடிய இடங்களில் இலைகளில் தங்கி விடும். குளிர்ந்த, மேகமூட்டமான காலநிலையில், போதுமான மண் ஈரப்பதம் இருக்கும் போது, இலைகளின் ஈரப்பதம் இழப்பு விகிதம் மெதுவாக இருக்கும், இது பல தாவரங்கள் வசந்த காலங்களில் அதிக உப்பு அளவுகளைத் தாக்குப் பிடிக்க அனுமதிக்கிறது, ஆனால் கோடை காலங்களில் இது சாத்தியம் அல்ல.


தடுப்பு முறைகள்

  • மெதுவாக வெளியாகும் கரிம உரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உரங்களினால் ஏற்படும் வெந்தபண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
  • ஒவ்வொரு வருடமும் மண்ணில் சில சென்டிமீட்டர் ஆழத்தில் மக்கிய உரத்தைப் புதைப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • நோய் பரவியதற்குப் பிறகு குருணை உரங்களைத் தெளிக்கவும்.
  • குறிப்புச் சீட்டில் கூறியுள்ள படி கரையக்கூடிய இலைவழி உரங்களைப் பயன்படுத்துங்கள், மேலும் குருணை உரங்களைப் பயன்படுத்தினால், அவற்றை உபயோகித்த பிறகு தண்ணீரை உடனடியாகப் பயன்படுத்தவும்.
  • வானிலை மிகவும் வறட்சியாக இருக்கும் நிலையில் குருணை உரங்களை பயன்படுத்த வேண்டாம், மேலும் தாவரத்தில் வெந்தப்பண் வராமல் தடுக்க இந்த குருணை உரங்களை பயன்படுத்திய உடனேயே நன்கு தண்ணீர் பாய்ச்சவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க