வெண்டக்காய்

குறுக்குவெட்டு அந்துப்பூச்சி

Xanthodes transversa

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மெல்லப்பட்ட இலைகள் தென்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வெண்டக்காய்

அறிகுறிகள்

கம்பளிப்பூச்சிகள் இலைகளை உண்பதால் இலை உதிர்வு ஏற்படுகிறது. இலைகளை உண்பது ஒளிச்சேர்க்கைக்கு இடையூறு விளைவிக்கும், இதன் விளைவாக பயிரின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி எதிர்மறையாக பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்தச் சிறு பூச்சிக்கு உயிரியல் கட்டுப்பாடு எதுவும் இல்லை. தேவைப்பட்டால், அவற்றைக் கையால் அப்புறப்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் நிறைய கம்பளிப்பூச்சிகள் இருந்தால், சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சேதத்தின் அறிகுறிகளைக் கண்டவுடன் நீங்கள் விரைவாக செயல்பட வேண்டும். வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக வெண்டைக்காயை வளர்க்கும் பெரிய விளைநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் நிறைய கம்பளிப்பூச்சிகள் இருந்தால், அவை பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். எந்தெந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்கு நீங்கள் ஒரு விவசாய நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும், மேலும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

சாந்தோட்ஸ் டிரான்ஸ்வெர்சா என்ற அந்துப்பூச்சியால் சேதம் ஏற்படுகிறது. இது பொருளாதார ரீதியாக முக்கியமான பல பயிர்களை உண்ணுகிறது, இவற்றில் பெரும்பாலானவை மால்வேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள். பெண் பூச்சிகள் தங்கள் முட்டைகளை ஒரு நேரத்திற்கு ஒரு முறை இலைகளின் அடிப்பகுதியில் இடும். ஒரு வாரம் கழித்து முட்டையிலிருந்து சிறிய கம்பளிப்பூச்சிகள் வெளிவரும். முழுமையாக வளர்ந்த கம்பளிப்பூச்சி கரும் பச்சை நிறத்தில் இருக்கும், இதன் உடல் நீளம் முழுவதும் தனித்த மஞ்சள் நிற பட்டையைக் கொண்டிருக்கும், மஞ்சள் நிற பட்டையின் இருபுறமும் குதிரைக் காலணி வடிவ கருப்பு நிற அடையாளங்கள் இருக்கும். கம்பளிப்பூச்சியின் பிந்தைய கட்டங்கள் சற்றே மாறுபட்ட வண்ண வடிவங்களைக் கொண்டிருக்கும். இளம் முட்டைப்புழுக்கள் நூல்போன்று, அதிக அளவில் நகரும். இவை இலைகளின் அடிப்பகுதியை உண்ணும், அங்கும் அவற்றைக் காணலாம். கம்பளிப்பூச்சிகள் மண்ணில் கூட்டுப்புழுவாகி, ஓரிரு வாரங்களுக்குப் பிறகு அந்துப்பூச்சி அதிலிருந்து வெளிப்படும். வயது வந்த அந்துப்பூச்சிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், அவற்றின் ஒவ்வொரு முன் இறக்கையிலும் மூன்று பழுப்பு நிற அம்பு வடிவ கோடுகள் இருக்கும். வெப்பமான, ஈரமான வானிலை இந்தப் பூச்சிக்கு சாதகமாக இருக்கும். இது அதிக சேதத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இது பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.


தடுப்பு முறைகள்

  • கம்பளிப்பூச்சிகளைக் கண்டுபிடித்து, கையுறைகளைப் பயன்படுத்தி அவற்றை அப்புறப்படுத்தவும்.
  • இவை எளிதாகக் கண்டுபிடிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன.
  • கம்பளிப்பூச்சிகள் களைகளில் மறைந்து வாழக்கூடும் என்பதால் உங்கள் செடிகளில் களைகள் இல்லாமல் வைத்திருங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க