தக்காளி

இலை பாதமுடைய வண்டுகள்

Coreidae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பயிர் வளர்ச்சி குன்றிவிடும்.
  • பூச்சி பழத்தை உண்ணும்போது பழத்தில் நிறம் மாற்றம் தென்படும்.
  • பழங்களில் நீர் தோய்த்த பகுதிகளைக் காணலாம்.
  • இலைகள் மற்றும் தண்டுகளுக்கு சேதம் ஏற்படும்.
  • இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும்.

இதிலும் கூடக் காணப்படும்


தக்காளி

அறிகுறிகள்

பூச்சியின் இனம், வளர்ச்சி நிலை மற்றும் பாதிக்கப்படும் தாவர வகை ஆகியவற்றைப் பொறுத்து இலை பாதமுடைய வண்டுகள் பயிர்களில் பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். பயிர்களில் இலை பாதமுடைய வண்டு ஏற்படுத்தும் சேதத்தின் சில பொதுவான அறிகுறிகள் இதோ இங்கே. இலை பாதமுடைய வண்டுகள் தாவரங்களின் வளர்ச்சியை மெதுவாக்கும், குறிப்பாக இளம் தாவரங்களில், அவை வளர்ந்து கொண்டிருக்கும்போது. இதனால் விளைச்சல் குறையும் அல்லது அறுவடை தாமதமாகலாம். இந்தப் பூச்சிகள் பழங்களில் நிறமாற்றம் மற்றும் சிதைவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பழங்கள் நிறமாற்றம் அடையலாம், பழங்களின் வடிவம் சிதையலாம் அல்லது மேற்பரப்பில் சிறிய நீர் தோய்த்த பகுதிகளைக் கொண்டிருக்கலாம். இந்த காணக்கூடிய சேதங்கள் காரணமாக பழங்களை சந்தைப்படுத்தும் தன்மை குறையலாம். இலை பாதமுடைய பூச்சிகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகி, வாடி, தாவரம் இறந்தும் போகலாம். கூடுதலாக, சில வகையான இலை பாதமுடைய வண்டுகள் தாவர நோய்களை பரப்பலாம், இது பயிர்களை மேலும் சேதப்படுத்தி, விளைச்சலைக் குறைக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிக்கொல்லி சோப்பு அல்லது தாவரவியல், அதாவது வேப்பெண்ணெய் அல்லது பைரெத்ரின் போன்ற தாவரப் பொருட்கள், இளம் பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். இலை பாதமுடைய வண்டுகளைக் கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்று அவற்றின் முட்டைகளை அகற்றுவதே ஆகும்.

இரசாயன கட்டுப்பாடு

இலை பாதமுடைய வண்டுகளின் இரசாயனக் கட்டுப்பாட்டில் பூச்சிகளைக் கொல்ல அல்லது விரட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது அடங்கும். பைரெத்ராய்டுகள், நியோனிகோடினாய்டுகள் மற்றும் ஸ்பினோசாட் உள்ளிட்ட இலை பாதமுடைய வண்டுகளுக்கு எதிராக பல பூச்சிக்கொல்லிகள் உள்ளன. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி, இந்த பூச்சிக்கொல்லிகளை தெளிப்புகளாக, தூள்களாக அல்லது தூண்டில் பொறிகளாக பயன்படுத்தலாம். பாதுகாப்பு உடைகள் மற்றும் கியர் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், காற்று வீசும்போது அல்லது மழை பெய்யும்போது தெளிப்பதைத் தவிர்க்கவும். மேலும், பயன்பாட்டின் நேரம் மற்றும் தயாரிப்பை எத்தனை முறை பயன்படுத்தலாம் என்பது தொடர்பான விவரங்களுக்கு லேபிளில் உள்ள ஏதேனும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இலை பாதமுடைய வண்டுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இரசாயனக் கட்டுப்பாடு பயனுள்ளதாக இருக்கும் அதே வேளையில், பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு அல்லது தவறான பயன்பாடு இலக்கு அல்லாத பூச்சிகள், வனவிலங்குகள் மற்றும் மனிதர்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பூச்சிக்கொல்லிகளை விவேகமாகவும், வயல் சார்ந்த மற்றும் உயிரியல் கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அணுகுமுறையின் ஒரு பகுதியாகவும் பயன்படுத்துவது முக்கியம்.

இது எதனால் ஏற்படுகிறது

இலை பாதமுடைய வண்டுகள் தட்டையாக இருக்கும், இலை வடிவ பின்னங்கால்களைக் கொண்டிருக்கும். இவை நடுத்தர அளவிலான வண்டுகள், பொதுவாக சுமார் 20 மிமீ நீளம் இருக்கும். இவை பொதுவாக பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கும், மேலும் இவை பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள் போன்ற தாவரங்களின் சாற்றை உண்கின்றன. இலை பாதமுடைய வண்டின் வாழ்க்கைச் சுழற்சி பெண் வண்டு தாவரங்களில் முட்டையிடும்போது தொடங்குகிறது. முட்டைகள் சுமார் 1.4 மிமீ நீளத்திலும், ஓவல் வடிவத்திலும், வெண்கலம் முதல் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும், முட்டைகள் வரிசையாக இடப்படும். முட்டைகள் சிறிய இளம் வண்டுகளாக குஞ்சு பொரிக்கும், இவை முதிர்ந்த வண்டுகளின் சிறிய பதிப்புகள் போல இருக்கும். இளம் வண்டுகள் முதிர்ந்த வண்டுகளாக மாறுவதற்கு முன்பு பல மாற்றங்களைச் சந்திக்கின்றன. ஒவ்வொரு மாற்றத்தின் போதும், இளம் வண்டின் பழைய தோல் உதிர்ந்து, புதியது வளரும். இவை வளருகையில், இவை பெரிய வண்டுகளைப் போலவே தோற்றமளிக்கத் தொடங்கும், மேலும் இவற்றுக்கு இறக்கைகள் முளைக்கும். ஒருமுறை இலை பாதமுடைய வண்டுகள் முதிர்ச்சி அடைந்தவுடன், இவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டு, முட்டைகளை இடும், சுழற்சி மீண்டும் தொடங்கும். தட்பவெப்ப நிலை மற்றும் உணவு கிடைப்பதைப் பொறுத்து இலை பாதமுடைய வண்டுகள் வருடத்திற்குப் பல தலைமுறைகளைக் கடந்து செல்லலாம். அதிக மழை பெய்யும்போது இவை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இறந்த தாவரங்கள் அல்லது தழைக்கூளத்தின் கீழ் குளிர்காலத்தைக் கழித்தப் பிறகு, வசந்த காலத்தில் மறைந்திருந்த முதிர்ந்த பூச்சிகள் வெளியே வரும். குளிர்காலம் சூடாக இருந்தால், முதிர்ந்த பூச்சிகள் அதிகம் உயிர்வாழ்ந்து, அதிக சிக்கல்களை ஏற்படுத்தும். சில வகையான இலை பாதமுடைய வண்டுகள் களைகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும், மற்றவை காய்கறிகளில் இனப்பெருக்கம் செய்யும். இந்தப் பூச்சிகளின் முக்கியப் பிரச்சனை பழம் சேதமடைவதாகும், மேலும் இவை பழங்கள் உருவாகத் தொடங்கும் நேரத்தில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • முட்டை கொத்துகள், நிறமாற்றம் அடைந்த பழங்கள், பழங்களில் நீர் தோய்த்த பகுதிகள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளில் சேதம் போன்ற இலை பாதமுடைய வண்டின் செயல்பாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்களை தவறாமல் சரிபார்க்கவும்.
  • இலை பாதமுடைய வண்டுகளை உங்கள் தாவரங்களிலிருந்து விலக்கி வைக்க, வரிசை கவர்கள் அல்லது வலை போன்ற தடைகளைப் பயன்படுத்தலாம்.
  • உங்கள் வயல்களில் உள்ள களைகளை அகற்றவும், ஏனெனில் இலை பாதமுடைய வண்டுகள் களைகளில் மறைந்து கொண்டு, அவற்றை உண்ணலாம்.
  • இலை பாதமுடைய வண்டுகளை கவரக்கக்கூடிய உதிர்ந்து கிடக்கும் பழங்கள் அல்லது பிற குப்பைகளை அகற்றி, உங்கள் வயல்களைச் சுத்தமாக வைத்திருக்கவும்.
  • இயற்கையாக வேட்டையாடும் உயிரினங்களுக்கான (பறவைகள், சிலந்திகள் மற்றும் கொள்ளையடிக்கும் பூச்சிகள்) தண்ணீர் மற்றும் தங்குமிடத்தை வழங்குவதன் மூலம் அவற்றைக் கவரவும் அல்லது வயலில் அவற்றை அறிமுகப்படுத்தவும், இவை இலை பாதமுடைய வண்டுகளைக் கட்டுப்படுத்த உதவும்.
  • அடுத்த பருவம் வரை வண்டுகள் உயிர்வாழும் வாய்ப்புகளைக் குறைக்க பருவத்தின் முடிவில் நல்ல வயல் சுகாதாரத்தை கடைபிடிக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க