திராட்சை

கருந்திராட்சையின் இலைப்பேன்கள்

Retithrips syriacus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் பழங்களில் வெள்ளி நிறத்திட்டுகள் தென்படும்.
  • இலைகளில் சாம்பல் நிறத்தில் பளபளப்பான கருப்பு புள்ளிகள் (பூச்சிகளின் கழிவுகள்) காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

திராட்சை

அறிகுறிகள்

இலைப்பேன்கள் புரவலன் இலைகளில் இருந்து சாற்றை உறிஞ்சி, இலையுதிர்வு மற்றும் இலைச் சுருக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். இலையில் பூச்சிகள் அதன் கூர்அலகை செருகுவதால் வெள்ளித் திட்டுகள் தோன்றும். பூச்சி உண்ணும் இடங்களில், பழம் சாம்பல் நிறமாக மாறும். நோய்த்தாக்கம் அதிகமாக இருக்கும்போது, பழம் விரும்பத்தகாத தோற்றம் கொண்டதாக மாறி, இயல்புக்கு மாறாக வளரும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஜியோகோரிஸ் ஓக்ரோப்டெரஸ் மற்றும் மெட்டாசீயுலஸ் ஆக்ஸிடெண்டலிஸ் (வேட்டையாடும் இனங்கள்) போன்ற இயற்கை எதிரி இனங்களை அறிமுகப்படுத்துங்கள். வேட்டையாடும் இலைப்பேன்கள், பச்சை நிற கண்ணாடி இறக்கைப் பூச்சிகள், சிறிய கொள்ளைப்பூச்சிகள் மற்றும் பல உண்ணிகளை உண்ணும் பூச்சிகள் தாவரத்தை உண்ணும் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்தப் பூச்சியின் இயக்கம், உண்ணும் பழக்கம் மற்றும் பாதுகாக்கப்படும் முட்டை மற்றும் முட்டைப்புழுவாகும் நிலைகள் (முட்டைப்புழு மற்றும் வயதுவந்த நிலைகளுக்கு இடையில் ஏற்படுகிற, முழுமையான உருமாற்றத்தை வெளிப்படுத்தும் பூச்சிகளின் வளர்ச்சியின் வாழ்க்கை நிலைகள்) ஆகியவற்றின் காரணமாக இலைப்பேன்களை பூச்சிக்கொல்லிகள் மூலம் திறம்பட கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். பின்வரும் பூச்சிக்கொல்லிகள் உலகின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன: டைமெத்தோயேட் மற்றும் பைஃபெந்த்ரின். ஸ்பினோசாட் அடிப்படையிலான தயாரிப்புகள் கரிம கட்டுப்பாட்டு கருவிகளாக கருதப்படுகின்றன. எப்போதும், பூச்சி மேலாண்மை குறித்த பகுதி வாரியான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றவும்.

இது எதனால் ஏற்படுகிறது

நோயின் சேதமானது முதிர்ந்த பூச்சிகள் மற்றும் முட்டைப்புழுக்கள் (இளம் இலைப்பேன்கள்) என இரண்டினாலும் ஏற்படுகிறது, இவை தாவர சாற்றை உண்ணும். இலைப்பேன்கள் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்து, இரண்டு தீவிரமாக உண்ணும் நிலைகள் ஊடாக வளரும். வயது வந்த பெண் பூச்சிகள் 1.4 முதல் 1.5 மிமீ நீளமும் ஆண் பூச்சிகள் 1.3 மிமீ நீளமும் கொண்டிருக்கும். இது அடர் நிறம் முதல் கருப்பு கலந்த பழுப்பு நிற இனமாகும். குஞ்சு பொரித்த முட்டைப்புழுக்கள் பொதுவாக குழுக்களாகப் பிரிந்து உடனடியாக உண்ணத் தொடங்குகின்றன. புதிதாக வளர்ந்த முதிர்ந்த பூச்சிகள் இலேசான கனம் கொண்டதாகவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இலைப்பேன்கள் இலையின் கீழ் பக்கத்தை உண்ணும் ஆனால் தொற்று அதிகமாக இருக்கும் போது, மேல் பக்கமும் தாக்கப்படும், இத்தாக்குதல் குறிப்பாக குளிர்ச்சியான மாதங்களில் நிகழும். வெப்பமான நிலையில், முட்டையிலிருந்து முதிர்ந்த பூச்சிகள் வரையிலான வாழ்க்கைச் சுழற்சி 2 வாரங்களுக்குள் நிறைவடையும்.


தடுப்பு முறைகள்

  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • இலைப்பேன்களின் எண்ணிக்கையை வழக்கமாகவும் அவ்வப்போதும் கண்காணித்து, நோய்ப்பூச்சியான இலைப்பேன்களின் மாற்றுப் புரவலன்களான அருகிலுள்ள களைகளைக் கட்டுப்படுத்தவும்.
  • பயிர் செய்யும் இடத்தில் நிலவும் சூழல்களுக்கு நன்கு பொருந்தக்கூடிய தாவரங்களை வளர்க்கவும்.
  • தாவரங்களை வீரியத்துடன் வைத்திருக்கவும், இலைப்பேன்கள் ஏற்படுத்தும் சேதத்திற்கு அவற்றின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் அவற்றுக்கு பொருத்தமான வேளாண்மை பராமரிப்பை வழங்கவும்.
  • தாவரங்களுக்கு நன்கு நீர்ப்பாசனம் செய்யவும், நைட்ரஜன் உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இது அதிக எண்ணிக்கையிலான இலைப்பேன்களை ஊக்குவிக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க