காபி

காபியின் இலைத் துளைப்பான் நோய்

Leucoptera sp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலையின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • காபி இலையின் கீழ் வெளிர் மஞ்சள் நிற சுவடுகள் தென்படும்.
  • பெரிய சிதைந்த திட்டுக்களையும் காணலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
காபி

காபி

அறிகுறிகள்

ஆரம்பத்தில், சுரங்கங்கள் உருவாகி பின்னர் பெரிய பரப்பளவு முழுவதும் பரவி, பெரிய சிதைந்த திட்டுகளுக்கு வழிவகுக்கும். முட்டைப்புழுக்கள் சுரங்கங்களில் இருந்து, இலையின் நடுத் திசுக்களை (மீசோபில்களை) உண்ணும். இலைகள் செயலிழந்து, ஒளிச்சேர்க்கை நடைபெறாது. தாவரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து, இறுதியில் இறந்துவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பயிர் மேலாண்மை நடைமுறைகளும் இயற்கை அமைப்புகளும் பூச்சிகளையும் இயற்கை எதிரிகளால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் சேவைகளையும் பாதிக்கலாம், இது அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மிகுதியை மேம்படுத்துகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக சிக்கலான காபி அமைப்புகள் ஒட்டுண்ணி குளவிகள், எறும்புகள் மற்றும் பிற வேட்டையாடும் பூச்சிகளின் உயிர் பல்லுயிர் பெருக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இருப்பினும், இந்த இயற்கை எதிரிகளை உயிரியல் கட்டுப்பாடாகப் பயன்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. பெரோமோன் பொறிகளை பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க பூச்சிகளின் இயற்கையான நடத்தைகளை கையாள அல்லது சீர்குலைக்க பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கக்கூடிய உயிரியல் சிகிச்சைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது, காபி விவசாயிகள் ஆர்கனோபாஸ்பேட்கள், கார்பமேட்கள், பைரெத்ராய்டுகள், நியோனிகோடினாய்டுகள் மற்றும் டயமைடுகள் போன்ற நியூரோடாக்ஸிக் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இரசாயன கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை, அவற்றின் செயல்திறன் இழக்கக்கூடும், ஏனெனில் அவற்றின் பயன்பாடு பூச்சிகளிடம் எதிர்ப்புத்திறனை ஏற்படுத்தக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோயின் சேதமானது காபியின் இலைத் துளைப்பான் பூச்சியின் (சிஎல்எம்) முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது, இவை காபி இலைகளை மட்டுமே உண்ணும். முதிர்ந்த பூச்சிகள் இரவில் இனச்சேர்க்கை செய்யும், பெண் பூச்சிகள் காபி இலைகளின் மேற்பரப்பில் முட்டையிடும். முட்டையிடுதலுக்கு முந்தைய நேரம் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 3.6 நாட்கள் ஆகும். சராசரியாக, ஒவ்வொரு முட்டையும் சுமார் 0.3 மிமீ அளவில் இருக்கும், இவற்றை சாதாரணக் கண்ணால் பார்ப்பது கடினம். குஞ்சு பொரிக்கும் போது, ​​இலையின் மேல்தோலுடன் படும் முட்டைகளின் கீழ் பக்கத்தை விட்டுவிட்டு முட்டைப்புழுக்கள் இலைகளுக்குள் நுழையும். முட்டைப்புழுக்கள் பளிச்சென்று, 3.5 மிமீ நீளம் வரையில் வளரும். முட்டைப்புழுக்கள் இலைகளின் மீசோபில்களை சாப்பிட்டு, இலைகளில் சுரங்கங்களை உருவாக்கும். சுரங்கங்கள் சிதைவை ஏற்படுத்தி, ஒளிச்சேர்க்கை நடக்கும் இலையின் மேற்பரப்பைக் குறைக்கும். இது தாவரங்களின் குறைந்த ஒளிச்சேர்க்கை விகிதத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் தாவரத்தின் அடுத்தடுத்த அழிவுக்கு வழிவகை செய்யும். முட்டைப்புழுக்கள் நான்கு வளர் பருவங்களைக் கொண்டிருக்கும். முட்டைப்புழுக்கள் சுரங்கங்களை விட்டு வெளியேறி, பட்டு X-வடிவ கூட்டை நெய்யும், இந்தக் கூட்டை பொதுவாக இலை முளைத்திருக்கும் தண்டில் நெய்யும், பிறகு இவை கூட்டுப்புழுவாக மாறும். வழக்கமாக, இறந்த இலைகள் குவிந்து கிடக்கும் தாவரத்தின் கீழ் பகுதியில் அதிக முட்டைப்புழுக்கள் காணப்படுகின்றன. முட்டைப்புழுவிலிருந்து, சராசரியாக 2 மிமீ உடல் நீளமும் 6.5 மிமீ இறக்கை அளவும் கூடிய முதிர்ந்த பூச்சிகள் வெளிப்படும். இவை இவற்றின் அடிவயிற்றின் அடிப்பகுதியை தொடும் அளவுக்கு நீண்ட கொம்பையும் வெள்ளை நிற செதில்களையும் கொண்டிருக்கும், மேலும் இவை பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில், சுருக்கங்கள் கொண்ட இறக்கைகளைக் கொண்டிருக்கும். முட்டைப்புழுவிலிருந்து முதிர்ந்த பூச்சிகள் வெளியானவுடன், இவை இனச்சேர்க்கை செய்து, முட்டைகளை இடுகின்றன, பிறகு இந்த சுழற்சி மீண்டும் நடக்க ஆரம்பிக்கும். வறட்சியான காலங்கள் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை இந்தப் பூச்சியின் தாக்கத்திற்கு சாதகமானதாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • ஆண்டு முழுவதும் காபியின் இலைத் துளைப்பான் பூச்சியின் பெருகி வரும் எண்ணிக்கையைத் தடுக்க முதல் தலைமுறை திறம்பட கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டெல்டா பொறியைப் பயன்படுத்தி வழக்கமான கண்காணிப்பைப் பயிற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க