கரும்பு

பிளாசி துளைப்பான்

Chilo tumidicostalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மேல்பக்க கணுவிடைப்பகுதிகளில் துளைகள் காணப்படும்.
  • கரும்புகளில் குடைவுகள் ஏற்படும்.
  • சூழல் தண்டு உலர்ந்துப் போகும் மற்றும் இலைகள் குவிந்துக் கொள்ளும்.
  • முதுகுப்பகுதியில் அடர் நிற கோடுகள் அல்லது புள்ளிகள் கொண்ட வெண்மையான முட்டைப்புழுக்கள் காணப்படும், அது கருமையான தலைப்பகுதியைக் கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

கரும்பு

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட கரும்புகளின் உச்சிப்பகுதி குவிந்து காய்ந்து இருப்பதன் மூலம் துளைப்பான் பூச்சி தாக்கத்தை எளிதில் அடையாளம் காண முடியும். முட்டையிலிருந்து புதிதாக பிறந்த முட்டைப்புழுக்கள், ஒரு தண்டில் 50 முதல் 180 வரையிலான எண்ணிக்கையில், முதல்மூன்று முதல் ஐந்து வரையான கணுவிடைப்பகுதிகளில் ஒன்று சேர்வதால், முதன்மை தொற்று ஏற்படுகிறது. மேல்பக்க கணுவிடைப்பகுதிகளில் பல துளைகள் தெளிவாகத் தெரியும். பாதிக்கப்பட்ட தண்டுகள் சிவப்பு நிற கழிவுகளால் நிறைந்திருக்கும். கரும்பு குடைவாகி, நடுத் தண்டு காய்ந்து, இலைகள் குவிந்து, மிகவும் எளிதாக உடையும். பாதிக்கப்பட்ட கணுவிடைப்பகுதியை ஒட்டிய கணுவிடைப்பகுதிகளில் கரணைக்குச்சிகள் முளைக்கும், இது தண்டை முழுவதும் மூடிக்கொள்ளும். கணுப்பகுதி மொட்டுகளும் துளிர்விடும். இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டால், வளர்ந்த முட்டைப்புழுக்கள் கரும்புகளின் ஆரோக்கியமான கீழ் பகுதிக்கு பரவி பக்கத்தில் இருக்கும் கரும்புகளில் முதன்மை தாக்குதலைக் காட்டுகின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

கோடீசியா ஃபிளவிப்ஸ் மற்றும் டிரைக்கோகிராமா சிலோனிஸ் குளவிகள் ஆனது சி. டுமிடிகோஸ்டாலிஸ் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன. மிதமான தட்பவெப்ப நிலைகளின் போது வயலில் வெளியிட டிரைக்கோ கார்டுகள் அல்லது குப்பிகளைப் பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்தப் பூச்சிக்கு எதிராக எந்த இரசாயன கட்டுப்பாட்டு முறையும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. பொதுவாக, இரசாயன கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருப்பதில்லை. இப்பூச்சிகளைக் கவரும் தன்மையைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சிலோ டுமிடிகோஸ்டாலிஸ் முட்டைப்புழுக்கள் கூட்டாக சேர்ந்து உண்ணுவதன் விளைவாக இந்தச் சேதம் ஏற்படுகிறது. அந்துப்பூச்சிகள் இலவங்கப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும், மேலும் ஓரத்தில் வரிசையாக கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும், இவை சிறிய வெள்ளி போன்ற வெண்ணிற புள்ளிகளால் வெளிப்புறமாக உடைந்தது போல இருக்கும். ஆண் அந்துப்பூச்சிகளின் பின் இறக்கைகள் வெண்மையாக இருக்கும், அதன் முன் பகுதியில் சில வெளிர் பழுப்பு நிற செதில்கள் இருக்கும். பெண் பூச்சிகளின் குத பாகங்களில் அடர்த்தியான முடி காணப்படும். பெண் பூச்சிகள் 500 முதல் 800 முட்டைகளை 4 முதல் 5 வரிசைகளில் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டைகள் இலேசான பச்சை சாயம் கலந்தவாறு அழுக்குப் படிந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆனால் குஞ்சு பொரிக்கும் நேரத்தில் முட்டைகள் சிவப்பு நிறமாக மாறிவிடும். முட்டைப்புழுக்கள் கூட்டமாக வாழும், மந்தமான நிலையில், கருப்பு/ஆரஞ்சு நிற தலையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கும், இது பிந்தைய கட்டத்தில் கிரீமி நிறமாக மாறும். கணுவிடைப்பகுதிகளில் கூட்டுப்புழுவாகும் செயல்முறை நடைபெறும். ஈரப்பதமான சூழல் இப்பூச்சிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கனமான மண் மற்றும் நீர் தேங்கி நிற்பது அல்லது வெள்ளம் சூழ்ந்த வயல்கள் ஆகியவற்றில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் வயலைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயலில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
  • வளர்ந்த அந்துப்பூச்சிகளைப் பிடிக்க ஒளிப் பொறிகளை பயன்படுத்தவும்.
  • முதன்மை தாக்குதலைக் காட்டும் முட்டைகள் மற்றும் கரும்புகளின் மேல்பகுதிகளைச் சேகரித்து அழிக்கவும்.
  • துளைப்பான் பூச்சிகளுடன் சேர்ந்து உருக்குலைந்த தாவரப்பகுதியைச் சேகரித்து, இரண்டையும் அழித்து விடவும்.
  • இப்பூச்சிகளுக்கு எதிரான இயற்கை இனங்கள் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுவதால், இவைகளைப் பாதுகாக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க