திராட்சை

காக்சேஃபர்

Melolontha melolontha

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் வாடி, மஞ்சள் நிறமாகிவிடும்.
  • வேர்களில் சேதம்.
  • பயிர் குறைப்பு.

இதிலும் கூடக் காணப்படும்


திராட்சை

அறிகுறிகள்

புழுக்கள் சல்லிவேர்களை சேதப்படுத்துகின்றன, இதனால் செடிகள் வாடி, விதானம் மஞ்சள் நிறமாகிவிடும். திராட்சை கொடிகளின் முழு அழிவை ஏற்படுத்தும் வேர்களை அகற்றிவிடலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கை எதிரிகளான துன்னெலிகள், வவ்வால்கள், குயில்கள், மரங்கொத்திகள், சிட்டுக்குருவிகள், தரை வண்டுகள், பெரிய குளவிகள் மற்றும் இயற்கையில் வேட்டையாடும் இனங்களான டக்கினிட் ஈக்கள் போன்றவற்றைப் பாதுகாக்கவும். பியூவேரியா பாசியானா அல்லது மெட்டாரிசியம் அனிசோப்லியா போன்ற நோய்க்கிருமி பூஞ்சைகளைப் பயன்படுத்தவும். ஹெட்டிரோர்ஹப்டிடிஸ் மெகிடிஸ் போன்ற ஒட்டுண்ணி நூற்புழுக்களை மண்ணில் போட்டும் புழுக்களை அழிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் திராட்சைத் தோட்டத்தில் ஏக்கருக்கு 600-800 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி என்ற அளவில் மாலத்தியான் 50% ஈசி என்பவற்றைப் பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

மெலோலோந்தா மெலோலோந்தா என்ற முதிர்ச்சி அடைந்த சேஃபரால் (வண்டு வகையால்) இந்நோயினுடைய சேதம் ஏற்படுகிறது. இவை பழுப்பு நிறத்தில் அடர் நிற தலையுடன் இருக்கும். பெண் பூச்சியானது 10-20 செ.மீ ஆழத்தில் மண்ணின் மேற்பரப்பிற்குக் கீழே முட்டையிடும். முட்டைப்புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில், ஒளிஊடுருவக்கூடியதாக, சுமார் 5 மிமீ நீளத்தில் இருக்கும். முழுமையாக வளர்ந்த வண்டினப் புழுக்கள் வலுவான கீழ்த்தாடைகளுடன் தடிமனாக இருக்கும். இவற்றின் தலை மஞ்சள் நிறமாகவும், வெள்ளை நிற உடல் சதைப்பற்றுடனும், 'சி' வடிவமாகவும் இருக்கும். முட்டைப்புழுக்கள் மண்ணில் வண்டினப் புழுக்களாக குளிர்காலத்தை கடந்து தாவர வேர்களை சாப்பிடும். இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி சுமார் 3-4 ஆண்டுகள் ஆகும். மூன்றாவது வளர்பருவ முட்டைப்புழுக்கள் பெருவிருப்பம் உடையதாக சாப்பிட்டு, தாவரங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. வேர்கள் உண்ணப்பட்டு, குடைவாகிவிடும், இதனால் தாவரங்களின் மேல் பகுதிகள் வாடி பட்டுப்போய்விடும். முதிர்ந்த வண்டுகள் பகலில் ஓய்வெடுத்து, அந்தி வேளையில் சாப்பிடும் இடங்களை நோக்கி படையெடுக்கும்.


தடுப்பு முறைகள்

  • வண்டுகள், பூச்சிகள் உண்ணுவதால் ஏற்படும் சேதங்கள் ஏதேனும் தென்படுகிறதா என வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் பயிரை கண்காணிக்கவும்.
  • காக்சேஃபர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தால், பூச்சியை கைமுறையாக அகற்றி, சோப்பு நீர் உள்ள வாளியில் சேகரிக்கவும்.
  • முதிர்ச்சி அடைந்த வண்டுகள் வராமல் இருக்க உங்கள் திராட்சைத் தோட்டத்தைச் சுற்றிலும் மென்முடிக் கற்றை போன்ற தடுப்புகளை அமைக்கவும்.
  • அதிக எண்ணிக்கையிலான வண்டுகளை பிடிக்க ஒளிப் பொறிகளை அமைக்கவும்.
  • மண்ணை உழுவதன் மூலம் முட்டைப்புழுக்கள் செயலற்ற நிலையில் காலத்தைக் கடக்கும் இடங்களை அகற்றவும்.
  • ஒட்டுண்ணிகள் மற்றும் இயற்கையாகவே வேட்டையாடும் இனங்கள் முட்டைப்புழுக்களை உண்பதால் இவைகளுக்கு ஆதரவாக சுற்றுப்புற சூழலை பராமரிக்கவும்.
  • சில பகுதிகளில், இவை உணவாகவும் உட்கொள்ளப்படுகின்றன.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க