வாழைப் பழம்

பைப்புழு

Kophene cuprea

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகளில் உண்ணும் துளைகள் இருக்கும்.
  • கூம்பு வடிவ பைகளுடன் பழுப்பு நிறத்தில் முட்டைப்புழுக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் இலைகளிலிருந்து பச்சையத்தை (குளோரோபில்) சுரண்டி, பின்னர் ஒழுங்கற்ற துளைகளை ஏற்படுத்தும். இந்தத் துளைகள் தனித்துத் தெரியும் திட்டுகளில் மட்டுமே காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த பூச்சிக்கு எதிராக எந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. அறிகுறிகள் தென்படுவதைக் குறைக்க அல்லது பூச்சியைக் கவரும் தன்மையைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்தப் பூச்சிக்கு எதிராக எந்த இரசாயன கட்டுப்பாட்டு முறையும் இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. அறிகுறிகள் தென்படுவதைக் குறைக்க அல்லது பூச்சியைக் கவரும் தன்மையைக் குறைக்க ஏதேனும் வெற்றிகரமான முறை உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

இது எதனால் ஏற்படுகிறது

கோபென் குப்ரியாவின் முட்டைப்புழுக்களால் இந்தச் சேதம் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். பைப்புழுக்கள் குளிர்காலத்தைப் பைகளுக்குள் (300 அல்லது அதற்கு மேற்பட்ட) முட்டைகளாகக் கடக்கின்றன, இந்தப் பைகள் முந்தைய ஆண்டில் பெண் பூச்சிகளுக்குப் புழுக்கூடுகளாக இருந்தது. முட்டைகளில் இருந்து குஞ்சு வெளியாகுகையில், முட்டைப்புழுக்கள் உண்பதற்கு வெளியே ஊர்ந்து செல்லும். முட்டைப்புழு ஒவ்வொன்றும் ஒரு சிறிய பையை உருவாக்க பட்டு மற்றும் தாவரப் பொருட்களைப் பயன்படுத்துகின்றன, இது பூச்சிகள் உண்ணும்போதும், வளர்ச்சியடையும்போதும் ஒரு காப்புறையாகச் செயல்படுகிறது. பைப்புழுக்களின் கம்பளிப்பூச்சி சுமார் ஆறு வாரங்களுக்கு உண்ணும், வளருகையில் இவை பைகளைப் பெரிதாக்குகின்றன, அதற்கு இடையூறு நேரும்போது பைகளில் இருந்து விலகிவிடும். முதிர்ந்த முட்டைப்புழுக்கள் அவற்றின் ஊசிகளிலிருந்து பசுமையான பாகங்களைக் கீற்றுகளாக்கி, பெரிய நரம்புகளை மட்டுமே விட்டுவிட்டு முழு இலைகளையும் உண்டுவிடுகின்றன. பழுப்பு நிற முட்டைப்புழுக்கள் கூம்பு வடிவ பைகளில் மூடப்பட்டிருக்கும். இலையுதிர்காலத்தின் துவக்கத்தில், முதிர்ந்த முட்டைப்புழுக்கள் தங்கள் பையைக் கிளைகளுடன் இணைத்துக் கொண்டு, முதிர்ச்சி அடைந்த பூச்சிகளாக மாறுவதற்கு முன்பு கூட்டுப்புழு அல்லது ஓய்வெடுக்கும் நிலைக்கு மாறுகின்றன.


தடுப்பு முறைகள்

  • பூச்சிகள் உங்கள் தாவரத்தை உண்ட சேதங்கள் மற்றும் முட்டைப்புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்களைக் கண்காணிக்கவும்.
  • ஒரு சில மரங்கள் அல்லது புதர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், அதனைக் கைமுறையாக சேகரிப்பது அல்லது பைப்புழு உள்ள தாவரங்களை அழிப்பது திருப்திகரமான கட்டுப்பாட்டை வழங்கலாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க