மாங்கனி

மாம்பழ ஆனைக்கொம்பன் ஈ

Procontarinia

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • சிறிய, மருக்கள் போன்ற திட்டுகள் இலைகள், மொட்டுகள், தளிர்கள் மற்றும் இளம் பழங்களை மூடிக்கொள்ளும்.
  • வெளியேறும் துளைகள் இலைகளின் கீழும் பழ தண்டுகளிலும் காணப்படும்.
  • முன்கூட்டியே உதிர்ந்து விடும்வகையில் சிதைந்த இலைகளின் தோற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

அறிகுறிகள் முக்கியமாக இலைகளில் தோன்றும், ஆனால் எப்போதாவது மொட்டுகள், மஞ்சரிகள் மற்றும் மா மரங்களின் இளம் பழங்களிலும் தோன்றும். இந்த பூச்சியால் பாதிக்கப்பட்ட பாகங்கள் பல சிறிய, உப்பிய கட்டிகள் அல்லது கொப்புளங்களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மருக்கள் போன்ற கொப்புளமும் அல்லது கட்டியும் 3-4 மிமீ அளவினை கொண்டிருக்கும், மேலும் மரத்தின் திசுக்களை உண்ணும் மஞ்சள் நிற முட்டைப்புழுவையும் இது கொண்டுள்ளது. ஆரம்ப கட்டங்களில், முட்டை படிவதற்கான தளம் ஒரு சிறிய சிவப்பு புள்ளியாக தோன்றுகிறது. பெரிதும் பாதிக்கப்பட்ட இலைகள் சிதைந்து, குறைக்கப்பட்ட ஒளிச்சேர்க்கையுடன், முன்கூட்டியே உதிரலாம். பாதிக்கப்பட்ட மஞ்சரிகள் விரியாமல் போகலாம். இலைகளின் அடிப்பகுதியில் உள்ள சிறிய வெளியேறும் துளைகள் முட்டைப்புழுக்களின் இருப்பால் எச்சங்களாகின்றன. இந்த வெளியேறும் காயங்கள் இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். இளம் பழங்களும் தண்டு அடிவாரத்தில் வெளியேறும் துளைகளுடன் காணப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாம்பழ தளிர்களில் கிட்டத்தட்ட எந்த மஞ்சரிகளும் இருக்காது, இது மகசூலைக் கணிசமாகக் குறைக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

விழு வலைப்புழு, டெட்ராஸ்டிக்கஸ் இனங்கள் புரோகோன்டரினியா இனங்களின் முட்டைப்புழுக்கள் மீது ஒட்டுண்ணி போல் பற்றி படர்ந்து கொள்கின்றன, எனவே இவற்றை பூச்சியைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். பிளாட்டிகாஸ்டர் இனம், அப்ரோஸ்டோசெட்டஸ் இனம், மற்றும் சிஸ்டாஸிஸ் டாசினியூரே ஆகியவை பிற ஒட்டுண்ணி பூச்சிகளாகும். மர கவிகைகளில் வேப்ப விதை சாறை பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு எதிர்ப்புத்திறனை ஏற்படுத்தக்கூடும், மேலும் இயற்கை எதிரிகளைக் கொல்லும். மஞ்சரியின் மொட்டு வெடிக்கும் கட்டத்தில் 0.05% ஃபெனிட்ரோதியன், 0.045% டைமெத்தோயேட் போன்றவற்றை தெளிப்பது பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீர் கலக்கப்பட்ட பைஃபென்த்ரின் (70 மிலி / 100 லிட்) இலைத்திரள் பயன்பாடும் திருப்திகரமான முடிவுகளை அளித்துள்ளது. பழங்கள் பட்டாணி அளவை அடையும் வரை பூக்கும் பருவத்தில் 7-10 நாட்கள் இடைவெளியில் தெளிப்பு மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். புரோகோன்டரினியா இனங்களின் எண்ணிக்கையை குறைக்க டைமெத்தோயேட் கொண்ட தெளிப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது புரோகோன்டரினியா இனங்களின் வெவ்வேறு வகை ஆனைக்கொம்பன் ஈக்களால் ஏற்படுகின்றன. முதிர்ந்த ஆனைக்கொம்பன் ஈக்கள் 1-2 மிமீ அளவு இருக்கும், மேலும் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிட்டுவிட்டு பறந்த 24 மணி நேரத்திற்குள் இறக்கின்றன.முட்டைகள் கிட்டத்தட்ட எல்லா மர பாகங்களிலும் இடப்படுகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் இலைகளில் காணப்படுகின்றன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாகிய பிறகு, முட்டைப்புழுக்கள் திசுக்களில் ஊடுருவி அவை பாதிக்கும் உறுப்பைப் பொறுத்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. விரிவான உண்ணும் செயல்பாட்டின் காரணமாக, அவை உட்கொண்ட மலர் பாகங்கள் உலர்ந்து தரையில் விழும். முதிர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் இடம்பெயர்கின்றன அல்லது மேல் மண் அடுக்குகளில் விழுகின்றன, அங்கு அவை கூட்டுப்புழுவாகின்றன. முதிர்ந்த பூச்சிகளின் தோற்றம் பொதுவாக பிற்பகலில் நடைபெறுகிறது மற்றும் குளிர்ந்த வெப்பநிலை (20 ° செல்சியஸ்) மற்றும் 60-82% ஒப்பு ஈரப்பதம் இவற்றுக்கு உகந்த சூழலாகும். வடக்கு அரைக்கோளத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில், இந்த பூச்சியின் 3-4 தலைமுறைகள் இருக்கலாம்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை அல்லது எதிர்ப்பு திறன் கொண்ட மர வகைகளை வளர்க்கவும்.
  • ஆனைக்கொம்பன் ஈக்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • ஈக்களின் எண்ணிக்கை அவ்வளவு அடர்த்தியாக இல்லாமல் இருக்கும் கட்டத்தில், அவற்றை கையால் பிடித்து அப்புறப்படுத்தவும்.
  • வயல்களில் குப்பைகள் மற்றும் உடைந்த கிளைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • வயலிலும் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள களைகளை அகற்றவும்.
  • பருவகாலத்தில் பாதிக்கப்பட்ட கிளைகளை சீர்திருத்தம் செய்யவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க உங்கள் மா பழத்தோட்டத்தில் ஊடுபயிர் செய்யவும்.
  • ஈக்களைப் பிடிக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • முட்டைப்புழுக்கள் தரையில் இறங்குவதைத் தடுக்க அல்லது அவற்றின் கூட்டில் இருந்து கூட்டுப்புழு வெளியே வராமல் இருக்க மண்ணை பிளாஸ்டிக் படலத்தால் மூடி வைக்கவும்.
  • கூட்டுப்புழு மற்றும் முட்டைப்புழுக்களை சூரியனுக்கு வெளிப்படுத்த மண்ணை தவறாமல் உழுங்கள், இது அவற்றைக் கொல்லும்.
  • பருவத்தில் பாதிக்கப்பட்ட மரப் பொருட்களை சேகரித்து எரிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் அல்லது பழங்களை புதிய பகுதிகளுக்கு அல்லது சந்தைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க