மாங்கனி

மாம்பழ தண்டு துளைப்பான்

Batocera rufomaculata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பட்டையில் துளைகளைக் காணலாம்.
  • பலவீனமான கிளைகள் உடைந்து போகலாம்.
  • மரங்கள் பட்டுப்போகலாம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

மரக்கிளைகளின் பட்டைகள் கடித்து துண்டு துண்டாக்கப்படுகின்றன, வளரும் நுனிகள் மெல்லப்படுகின்றன. பட்டையின் திட்டுகள் பிரிக்கப்படுகின்றன. கடுமையான தாக்குதலின் கீழ், மரம் மிகவும் பலவீனமாகி, கிளைகள் உடைந்துவிடும் அல்லது முக்கிய தண்டு சரிந்துவிடும். கிளைகள் அல்லது முழு மரமும் கூட காய்ந்துவிட்டதைப் போல காட்சியளிக்கும். வெளியே வடிந்த கழிவுகள் பட்டை வெடிப்புகள் அல்லது மரத்தின் அடிப்பகுதியில் காணப்படும். மரப்பட்டைகளில் உள்ள பூச்சி வெளியேறும் துளைகள் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாகும். இலைத்திரள்களும் பழ உற்பத்தியும் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்புக்கு வழிவகுக்கும். முட்டைப்புழுக்கள் ஆரம்பத்தில் மரத்தின் துணைப் புறணிக்குள் புகுந்து, பின்னர் மரத்துக்குள் ஆழமாக நகர்ந்து பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்துகிறது. முதிர்ந்த பூச்சிகள் வளரும் பச்சை நிற பகுதிகள் மற்றும் சிறுகிளைகளின் பட்டைகளை மென்று சாப்பிடும். அடிமரத் தண்டு அல்லது கிளைகளில் உள்ள மரச்சேவில் வண்டுகள் துளையிடும். இவை மரச்சேவில் துளையிட்டு, ஒழுங்கற்ற சுரங்கங்களை உருவாக்கும். இவை தாவர கடத்துத் திசுக்களை உண்ணுவதன் விளைவாக திசுக்களில் ஊட்டச்சத்து மற்றும் நீர் போக்குவரத்து தடைபடுகிறது. ஆரம்ப கட்டத்தில் முனைய தளிர்கள் காய்ந்துபோகும். கழிவுகள் பல பகுதிகளில் இருந்து வெளியேறும், சில நேரங்களில் துளைகளிலிருந்து சாறு வெளியேறும். இளம் செடிகள் என்றால் அல்லது ஒரே மரத்தில் அதிக புதர்கள் இருந்தால் கிளைகள் அல்லது முழு மரமும் பட்டுப்போகலாம்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மெட்டார்ஹீலியம் அனிசோப்லியா அல்லது பியூவேரியா பாசியானா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். ஆர்கனோபாஸ்பேட்கள் போன்ற பூச்சிக்கொல்லிகளை பெரிய தண்டு, கிளைகள் மற்றும் வெளிப்படும் வேர்களில் முதிர்ந்த வண்டுகள் தென்பட்டால் பயன்படுத்த வேண்டும். நுழைவுத் துளைகளை சுத்தம் செய்து, டிக்ளோர்வோஸ் (0.05%) அல்லது கார்போஃபுரான் (ஒரு துளைக்கு 5 கிராம் என்ற அளவில் 3 ஜி) குழம்பில் நனைத்த பருத்தி பஞ்சில் நனைத்து, மண்ணில் செருகவும். ஆவியாகும் திரவம் அல்லது புகை நஞ்சுப்பொருளை செலுத்துவதன் மூலம் அந்தப் பகுதியில் புதைகுழியில் மறைந்திருக்கும் முதிர்ந்த முட்டைப்புழுக்களை அழித்து விடலாம். நிலத்திலிருந்து மரப்பட்டையின் ஒரு மீட்டர் உயரம் வரை போர்டியாக்ஸ் பேஸ்ட்டை தடவவும், இது முட்டை இடுவதைத் தடுக்கும். உறிஞ்சும் பருத்தியில் மோனோகுரோட்டோபோஸ் (ஒவ்வொரு மரத்திலும் 2.5 செ.மீ 36 WSC 10 மில்லி) என்பதை நனைத்து, அதனைப் பட்டையாக கட்டலாம். தாக்குதலின் வீரியம் அதிகமாக இருந்தால், மரத் தண்டின் மீது காப்பர் ஆக்ஸிகுளோரைடு பேஸ்ட்டை தடவவும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்நோயின் சேதமானது பட்டோசெரா ருஃபோமகுலேட்டா என்பவற்றின் முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளால் ஏற்படுகிறது. வண்டுகள் 25-55 மிமீ நீள உடலையும், நீளமான கொம்புகளையும் கொண்டிருக்கும், இவை இரவு நேர பூச்சிகள் ஆகும். பெண் வண்டு சேதமடைந்த அல்லது அழுத்தத்தில் உள்ள மரங்களின் பட்டைகளில் வெட்டுகளை ஏற்படுத்தி, அந்தப் பகுதிகளில் முட்டையிடும். மாற்றாக, மண் அரிப்பால் பாதிக்கப்பட்ட வேர்களிலும் முட்டைகள் இடப்படுகின்றன. முட்டைப்புழுக்கள் முக்கிய தண்டுகளின் பட்டைகள், பெரிய கிளைகள் அல்லது வெளிப்படும் வேர்களின் கீழ் உண்ணுகின்றன. முட்டைப்புழுவின் பிந்தைய வளரும் கட்டத்தில் இவை மரத்தில் ஆழமாக துளைத்து அங்கேயே கூட்டுப்புழுவாக மாறும். முதிர்ந்த பூச்சிகள் வெளியேறும் துளையிலிருந்து வெளிப்பட்டு கிளைகளின் பட்டைகள் மற்றும் வளரும் நுனிகளை உண்ணும். முதிர்ந்த பூச்சிகள் 3-5 செ.மீ. அளவில், சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அதன் கழுத்துப் பகுதியில் 2 சிறுநீரக வடிவ ஆரஞ்சு-மஞ்சள் புள்ளிகள் இருக்கும். முழுமையாக வளர்ந்த முட்டைப்புழுக்கள் கிரீம் நிறத்தில் அடர் பழுப்பு நிற தலையுடன் 10 செ.மீ நீளம் கொண்டவையாக இருக்கும். முட்டைப்புழு வளர்ச்சிக்கு பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு மேல் தேவைப்படுகிறது. முட்டைப்புழுக்கள் மரச்சேவு வழியாக துளையிடுகின்றன, அவற்றின் அளவு மற்றும் இவை இடும் பெரிய துளைகள் காரணமாக, இலைத்திரள்கள் மற்றும் பழ உற்பத்தி மோசமாக பாதிப்படைகின்றன. முட்டைப்புழு கூட்டுப்புழுவாக மாறும் கட்டம் தண்டுக்குள் நடைபெறும், கோடை காலத்தின் பிற்பகுதியில் பெரிய வண்டுகள் அதிலிருந்து வெளியாகும். இவை இரவு நேர பூச்சிகள் ஆகும், இப்பூச்சிகள் பல மாதங்கள் வாழக்கூடியவை மற்றும் நீண்ட தூரம் பறக்கக்கூடியவை, இவை நோய் பரவுவதை எளிதாக்குகின்றன. இந்தப் பூச்சிக்கு ஒரு ஆண்டு தலைமுறை மட்டுமே உள்ளது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைத்தால், சகிப்புத்தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • பட்டையின் நுழைவுத் துளைகளில் உள்ள முட்டைப்புழுக்களையும் முட்டைகளையும் அழிக்க கத்தி அல்லது கம்பியைப் பயன்படுத்தவும்.
  • பருத்தி பஞ்சில் மண்ணெண்ணெய், கச்சா எண்ணெய் அல்லது ஃபார்மலின் போன்றவற்றை நனைத்து, அதனை துளைகளில் நிரப்பலாம், இது முட்டைப்புழுக்களைக் கொல்லும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, பெரிதும் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டவும்.
  • உங்கள் வயலிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதியில் உள்ள மாற்றுப் புரவலன் தாவரங்களை அகற்றவும்.
  • பூச்சிகள் நுழையும் துளைகளை இரும்பு கொக்கி அல்லது கம்பி மூலம் சுத்தம் செய்து, முட்டைப்புழுக்களை அழிக்கும் திறன் கொண்ட மண்ணெண்ணெய், கச்சா எண்ணெய் அல்லது ஃபார்மலின் ஆகியவற்றில் பருத்தி பஞ்சை நனைத்து அதனைத் துளைகளில் செருகவும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டுதல், கடுமையாக பாதிக்கப்பட்ட கிளைகளை வெட்டுதல் மற்றும் மாற்று புரவலன் செடிகளை அகற்றுதல் ஆகியவை பிற தடுப்பு முறைகளில் அடங்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க