துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

காய் ஈ

Melanagromyza obtusa

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • காய் சுவர்களில் துளைகள்.
  • சேதமடைந்த தானியங்கள் முதிர்ச்சியடையாமை.
  • கருப்பு ஈக்கள்.
  • பாலாடை போன்ற வெள்ளை நிற மாமிசப்புழுக்கள்.


துவரஞ்செடி மற்றும் துவரம் பருப்பு

அறிகுறிகள்

முழுமையாக வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் மெல்லுவதன் மூலம் காயின் சுவர்களில் (தோள்களில்) துளைகளை உருவாக்கும் வரை அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது. இவை ஏற்படுத்தும் ஜன்னல் போன்ற ஓட்டைகள் வழியாக, காயில் கூட்டுப்புழு காலத்தை கடந்ததற்கு பின்னால், ஈக்களாக வெளியேறுகிறது. கூட்டுப்புழுக்கள் தானாகவே தானியங்களில் துளையிட்டு, சுரங்கங்களை உருவாக்கி, அதன் மூலம் அவை முதிர்ந்த பூச்சிகளாக வெளியேறுகின்றன. பாதிக்கப்பட்ட தானியங்கள் சுருங்கி, முளைக்கும் திறனை இழக்கின்றன. முட்டைப்புழுவின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட தாவர பாகங்களில் பூஞ்சை உருவாகலாம்.சேதமடைந்த விதைகள் மனித நுகர்வுக்கு தகுதியற்றதாகிவிடும் மற்றும் அவை முளைப்பதற்கான சாத்தியத்தையும் இழக்கக்கூடும். உலர்ந்த காய்களில் குண்டூசிமண்டை அளவு துளைகளைக் காணலாம். விதைகள் சுருங்கி, கோடுகளுடன், ஓரளவுக்கு உண்ணப்பட்டதாக காணப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எம். ஒப்டுசாவின் இயற்கை எதிரிகளைப் பாதுகாக்கவும். வேப்ப விதை சாறு கரைசலை நான்கு வாரங்களுக்கு (50 கிராம் / லி தண்ணீர்) தடவவும் அல்லது நீர்ம வேப்ப விதைஉட்கரு சாற்றை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மோனோக்ரோடோபோஸ், அசிபேட் அல்லது லாம்ப்டா-சைஹலோத்ரின் ஆகியவற்றை பூக்கும் கட்டத்தில் தெளிக்கவும், பின்னர் 10-15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தெளிக்கவும். குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புசக்தி உருவாவதை தடுக்க, ஒரு பருவத்தில் தெளிப்புகளை மாறி மாறி பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது மெலனக்ரோமிசா ஒப்டுசாவின் மாமிசப்புழுக்களால் ஏற்படுகிறது. இவை வளரும் தானியங்களின் சுவர்களை உண்ணுகின்றன. முதிர்ந்த ஈக்கள் (2-5 மி.மீ நீளம்) துவரம் பருப்பு மற்றும் பிற புரவலன் தாவரங்களின் முதிர்ச்சியடையாத காய்களின் சுவரில் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவந்த முட்டைப்புழுக்கள் பாலாடை வெண்ணிறத்தில் இருக்கும், அதே நேரத்தில் கூட்டுப்புழுக்கள் ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் இருக்கும். மாமிசப்புழுக்கள் விதையின் மேல்தோலுக்கு சற்று கீழே, விதை தோலை பாதிக்காமல் குடைந்து, பின்னர் விதையிலைகளில் தானாகவே குடையக்கூடும். பின்னர், இறுதியாக மாமிசப்புழு விதையை விட்டுவிட்டு, கூட்டுப்புழுவாவதற்கு முன்னதாக காய்களில் ஜன்னல் போன்ற ஓட்டைகளை ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • நடவு செய்ய கிடைக்கக்கூடிய எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • எம்.
  • ஒப்டுசா ஏற்படுவதை தவிர்க்க பருவத்தின் ஆரம்பத்திலேயே பயிரை விதைக்கவும்.
  • நல்ல வயல் சுகாதாரத்தை பராமரித்து, களைகளை தவறாமல் அகற்றவும்.
  • பூச்சியின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் வயலை கண்காணித்து, முதிர்ந்த ஈக்களைப் பிடிக்க ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றுடன் ஊடுபயிர் செய்வதன் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சியை மேற்கொள்ளவும்.
  • ஒரு பகுதியில் மாறுபட்ட கால அளவை உடைய சாகுபடி கலவையை வளர்ப்பதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க