சோயாமொச்சை

பீகார் முடியுடைய கம்பளிப்பூச்சி

Spilarctia obliqua

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பாதிக்கப்பட்ட இலைகள் உலர்ந்து போகுதல்.
  • முழுமையான இலை உதிர்வு.
  • வலையிடப்பட்ட அல்லது வலையால் பின்னப்பட்ட இலைகள்.
  • சிவப்பு நிற வயிற்றுப்பகுதி மற்றும் கரும் புள்ளிகள் கொண்ட பழுப்பு நிற அந்துப்பூச்சி.
  • மஞ்சள் முதல் கருப்பு நிறத்திலான முடிகளால் மூடப்பட்ட முட்டைப்புழுக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்

16 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

சீக்கிரம் பாதிப்படைந்த இலைகள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாகி, வறண்டு போகும். கம்பளிப்பூச்சிகள் தொடர்ந்து உண்ணுகையில், முழு இலை திசுக்களும் உண்ணப்படுகின்றன. கடுமையான தொற்றுநோய்களின் கீழ், தாவரங்களில் உள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து, தண்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். இலைகள் வலையுடன் அல்லது வலைப்பின்னலுடன் காணப்படும், இறுதியாக எலும்புக்கூடு போல் ஆகிவிடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பீகார் முடியுடைய கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கையை பொதுவாக பல இயற்கை எதிரிகளால், குறிப்பாக அவை முட்டைப்புழுக்களாக இருக்கும் நிலையில் கட்டுப்படுத்தலாம். நன்மை பயக்கும் ஒட்டுண்ணிகள் பிராக்கோனிட் ஒட்டுண்ணிகள்: இக்னுமோனிட் அகதிஸ் எஸ்பியுடன் இணைந்து மெட்டியோர்ஸ் ஸ்பைலோசோமே மற்றும் புரோட்டாபன்டெலெஸ் ஆப்லிக்கா, கிளைப்டாபன்டெலெஸ் அகமெம்னோனிஸ் மற்றும் கோடெசியா ரூஃபிக்ரஸ், கண்ணாடி இறக்கை பூச்சிகள், பொன்வண்டு, சிலந்தி, சிவப்பு எறும்பு, தும்பி, மண்டிஸ் (பூச்சி திண்ணும் பூச்சி வகை), தரை வண்டு மற்றும் கேடய வண்டுகள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். பூச்சிக்கொல்லிகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும், ஏனெனில் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் பல வெள்ளை ஈக்கள் அவற்றுக்கான எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்கின்றன. இதைத் தடுக்க, பூச்சிக்கொல்லிகளுக்கு இடையிலான சரியான சுழற்சியை உறுதிசெய்து, அதன் கலவைகளைப் பயன்படுத்தவும். கம்பளிப்பூச்சிகள் இளமையாக இருக்கும்போது லாம்ப்டா-சைஹலோத்ரின் 10 ஈசி @ 0.6 மில்லி / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும். ஃபெந்தோயேட் 50% என்பதும் எஸ். ஆப்லிகாவிற்கு எதிராக உதவுவதாகவும் கருதப்படுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது பெரும்பாலும் ஸ்பைலார்க்டியா ஆப்லிகாவின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகின்றன. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சிவப்பு வயிற்றுப்பகுதி மற்றும் கரும்புள்ளிகளுடன் நடுத்தர அளவிலான பழுப்பு நிற அந்துப்பூச்சியாக வகைப்படுத்தப்படுகின்றன. பெண் பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் கொத்துக்களாக தங்கள் முட்டைகளை (ஒரு பெண் பூச்சி 1000 முட்டைகள் வரை) இடுகின்றன. குஞ்சு பொரித்தபின், முட்டைப்புழுக்கள் நீண்ட மஞ்சள் நிறம் முதல் கருப்பு நிற முடிகளால் மூடப்பட்டிருக்கும் மற்றும் தாவரங்களுக்கு அருகேயுள்ள இலை குப்பைகளில் கூட்டுப்புழுக்களாகின்றன. ஆரம்ப முட்டைப்புழுக்களானது இலைகளின் அடிப்பகுதியில் உள்ள பச்சையக்கூறுகளை சுவாரஸ்யமாக உண்ணுகின்றன. பிந்தைய நிலைகளில், இது இலைகளின் ஓரங்களில் இருந்து தனித்த முறையில் உண்ணுகின்றன. பொதுவாக, முட்டைப்புழுக்கள் முதிர்ந்த இலைகளை விரும்புகின்றன, ஆனால் கடுமையான தொற்றுநோய்களின் கீழ் மேல் புற தளிர்களும் பாதிக்கப்படுகின்றன. பீகார் முடியுடைய கம்பளிப்பூச்சிகள் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் மற்றும் சில காய்கறிகள் மற்றும் சணல் ஆகியவற்றை பல்வேறு நாடுகளில் தாக்கி கடுமையான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. விளைச்சல் இழப்பின் அளவு நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் வானிலை நிலைமைகளை பொறுத்து மாறுபடும், ஏனெனில் 18 முதல் 33 ° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த இனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றன.


தடுப்பு முறைகள்

  • கூட்டுப்புழுக்களின் மண்ணை அகற்ற கோடைகாலத்தில் நிலத்தை ஆழமாக உழுவதற்கு திட்டமிடவும்.
  • மழைக்காலத்திற்கு முன் விதைப்பதைத் தவிர்க்கவும்.
  • அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் உகந்த விதை வீதத்தை பயன்படுத்தவும்.
  • தாவரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி விடவும்.
  • நன்கு மக்கிய எருக்களை பயன்படுத்தவும்.
  • (சீக்கிரம் முதிர்ச்சியடைக்கூடிய) துவரம் பருப்பு சில வகையான சோளம் அல்லது மக்காச்சோளம் கொண்டு ஊடுபயிர் செய்யவும்.
  • நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் (முட்டை கொத்துக்கள், கம்பளிப்பூச்சிகள் மற்றும் ஏதேனும் சேதங்கள்) ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • வயலிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் களைக்கொல்லிகள் அல்லது இயந்திரங்கள் மூலம் முறையான களையெடுக்கும் முறையை பின்பற்றவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை சேகரித்து, வயலுக்கு அப்பால் எடுத்து சென்று அழித்துவிடவும்.
  • முட்டைப்புழுக்களை உண்ணும் பறவைகளுக்காக உட்காரும் இடங்களை கட்டவும் மற்றும் திறந்த வெளிகளை அமைக்கவும்.
  • பரந்த வீச்சுகளையுடைய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளை பாதிக்கும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர எச்சங்கள் அல்லது தானே வளரும் தாவரங்களை அகற்றவும்.
  • அரிசி அல்லது மக்காச்சோளம் போன்ற புரவலன் அல்லாத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சியை பின்பற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க