நிலக்கடலை

நிலக்கடலை துளைப்பான்

Caryedon serratus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • விதையை சாப்பிடத் தொடங்கும் முட்டைப்புழுக்களால் தானியங்களில் சிறிய துளைகள்.
  • முதிர்ந்த வண்டுகளால் காய்களில் பெரிய துளைகள்.
  • வயலிலும் சேமிப்பகத்திலும் காய்களின் மீது பூச்சிகளின் தாக்கம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

நிலக்கடலை

அறிகுறிகள்

துளைகளிலிருந்து முட்டைப்புழுக்கள் வெளியே வருவதும், காய்களுக்கு வெளியே புழுக்கூடுகள் காணப்படுவதும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளவற்றுக்கான முதன்மை சான்றாகும். பாதிக்கப்பட்ட காய்களைப் பிளந்து திறந்து பார்த்தால் பொதுவாக விதைகளில் எந்தவிதமான சேதமும் பார்ப்பதற்கு தெரியாது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நிலக்கடலை காய்களை வேப்ப விதை தூள் அல்லது கருப்பு மிளகு தூள் கொண்டு சிகிச்சையளிக்கவும். நீங்கள் வேப்ப எண்ணெய், பொங்கமியா எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய் கொண்டு காய்களுக்கும் சிகிச்சையளிக்கலாம். காய்களை காற்று-புகாத பாலிதீன் பைகளில் அல்லது துத்தநாகம் பூசிய உலோகம் / பி.வி.சி விதைத் தொட்டிகளில் சேமிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மெத்தில் புரோமைடு 32 கிராம் / மீ³ உடன் 4 மணி நேரம் ஆவி மூட்டவும். இதனைத் தொடர்ந்து குளோர்பைரிபோஸ் விதை சிகிச்சை @ 3 கிராம் / கிலோ, மாலதியோன் 50 ஈ.சி தெளிப்பு @ 5 மிலி / லி, ஆகியவற்றை கிடங்குகளின் சுவர்களில் 2 முதல் 3 முறை மேற்கொள்ளவும், அதே போல் பைகளிலும் இதைப் பின்பற்றவும். டெல்டாமெத்ரின் @ 0.5 மிலி / லி என்ற அளவில் பைகளில் தெளிக்கவும்.

இது எதனால் ஏற்படுகிறது

வயதுவந்த பழுப்பு நிற வண்டு (சி. செரட்டஸ்) என்பவற்றின் முட்டைப்புழுவால் சேதம் ஏற்படுகிறது. முட்டைகள் (சிறிய மற்றும் ஒளிஊடுருவக்கூடியது) முதிர்ச்சி அடைந்த வண்டுகளால் காய்களுக்கு வெளியே இடப்படுகின்றன. குஞ்சு பொரித்தபின், இளம் முட்டைப்புழுக்கள் முட்டையிலிருந்து நெற்று சுவர் வழியாக நேரடியாக குடையும். இது முதிர்ச்சி அடையும் வரை தானியங்களின் வித்திலைகளை உண்கிறது. முதிர்ச்சி அடைந்த வண்டு பின்னர் காயில் ஒரு பெரிய துளையை இடுகிறது. முதிர்ச்சி அடைந்த வண்டு ஓவல் வடிவத்திலும் பழுப்பு நிறத்திலும் இருக்கும், மேலும் இவை பொதுவாக 7 மி.மீ நீளம் கொண்டது. உகந்த நிலைமைகளின் கீழ், இந்த பூச்சி தன் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்வதற்கு சுமார் 40-42 நாட்கள் ஆகும். வண்டுகளின் வளர்ச்சி 30-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் செழித்தோங்குகிறது.


தடுப்பு முறைகள்

  • சி.எம்.வி 10, ஜிஜி 3 மற்றும் பிறவற்றை போன்ற ப்ரூச்சிட்ஸால் மிகவும் குறைவாக விரும்பப்படுகின்ற எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளை பயிரிடவும்.
  • உடைந்த அல்லது சேதமடைந்த விதைகளை பிரித்து, அப்புறப்படுத்துவதன் மூலம் இரண்டாம்நிலை பூச்சியின் தாக்குதல்களைக் குறைக்கவும்.
  • வயலிலேயே விளைபொருட்களைக் குவிப்பதைத் தவிர்க்கவும்.
  • முதிர்ச்சியின் சரியான கட்டத்தில் நிலக்கடலையை அறுவடை செய்யவும்.
  • பூச்சி தொற்றுநோய் வயலில் இருந்து கடை வரை பரவுவதை குறைக்க விதை ஈரப்பதத்தை பாதுகாப்பான அளவுக்கு (பொதுவாக 10% க்கும் குறைவான ஈரப்பதத்திற்கு) குறைக்கவும்.
  • சேமிப்பக கட்டமைப்புகளை சுத்தம் செய்து, ஆவி மூட்டவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க