நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நார்த்தை கருப்பு ஈ

Aleurocanthus woglumi

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் மற்றும் தண்டுகளில் தேன்துளிகள்.
  • கரும்பூசண தோற்றம்.
  • இலையின் கீழ் பக்கத்தில் சிறிய, கருப்புநிற கட்டிகளின் கொத்துக்கள்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட இலைகள் சிதைந்து சுருண்டு காணப்படலாம், இறுதியில், முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே உதிரக்கூடும். ஒட்டும் தேன்துளிகள் இலைகள் மற்றும் தண்டுகளில் படிந்து, பொதுவாக கரும்பூசண பூஞ்சையை உருவாக்குகின்றன, இது இலைத்திரள்களுக்கு கரும்பூசண தோற்றத்தை வழங்குகிறது. தேன்துளிகள் எறும்புகள் மூலம் ஈர்க்கப்படலாம். இலைகளின் அடிப்பகுதியில் மிகச் சிறிய, கருப்பு முள் போன்ற கட்டிகளின் குவியலாக பூச்சிகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. உண்ணும் சேதம் மற்றும் கரும்பூசண வளர்ச்சியின் கலவையானது மரங்களை பலவீனப்படுத்தி, காய்க்கும் திறனை குறைக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

என்கார்சியா பெர்ப்ளெக்ஸா, போலஸ்ஸெக் மற்றும் அமிட்டஸ் ஹெஸ்பெரிடம் சில்வெஸ்ட்ரி ஆகியவை நார்த்தை கருப்பு ஈக்களின் ஒட்டுண்ணி குளவிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. குளவிகள் நார்த்தை கருப்பு ஈ மற்றும் அதன் நெருங்கிய தொடர்புடைய வெள்ளை ஈக்களை மட்டுமே ஒட்டுண்ணிப்போல் பற்றி படர்கின்றன, ஆனால் தாவரங்களுக்கும் மக்களுக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது. பெண் பறவை வண்டுகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள், ப்ரூமஸ் எஸ்பி., ஸ்கைம்னஸ் எஸ்பி மற்றும் கிளைசோபெர்லா எஸ்.பி. போன்ற பூச்சிகள் இவற்றின் மற்ற இயற்கை எதிரிகள். பருத்தி எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் குங்கிலியம் சோப் (எஃப்ஓஆர்எஸ்) போன்ற எண்ணெய்கள் கறுப்புப்பூக்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், இலைகளில் காணப்படும் கரும்பூசணங்களையும் குறைக்கின்றன. பூச்சி எண்ணிக்கையை குறைக்க வேப்ப விதை சாறு தெளிப்பை (4%) பயன்படுத்தவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ஏ. வோக்லூமியின் இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க பரந்த-வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நடவுப் பொருட்களை புகையூட்டல் அல்லது இரசாயன தெளிப்புகள் மூலம் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். 50% க்கும் அதிகமான முட்டைகள் குஞ்சு பொரித்தவுடன் மற்றும் இளம் பூச்சிகளின் உடலில் எந்தவிதமான பாதுகாப்பு கவசமும் இல்லாமல் இருக்கும்போது நோய் தீர்க்கும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும். குயினால்போஸ் மற்றும் ட்ரையஸோபோஸ் ஆகியவை நார்த்தை கருப்பு ஈக்களின் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. பூச்சி செழித்து வளரும் இலைகளின் கீழ்பரப்பில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டும். தாவரத்தின் முழு விதானத்தையும் கரைசல் கொண்டு நனைக்க வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

நார்த்தை கருப்பு ஈ (அலூரோகாந்தஸ் வோக்லூமி) என்பது ஆசியாவை பூர்வீகமாக கொண்ட தீவிரமான நார்த்தை பூச்சி ஆகும் மற்றும் இது பல்வேறு புரவலன் தாவரங்களைத் தாக்குகிறது. இது வெள்ளை ஈ குடும்பத்தை சேர்ந்ததாகும், ஆனால் முதிர்ந்த பூச்சி அடர் நிறத்தில், கரும்பலகை நிறத்தில் இருப்பதால் இது கருப்பு ஈ என்று பெயர் பெற்றது. முதிர்ந்த பூச்சிகள் மிகவும் மந்தமான சிறிய பூச்சியாகும், இவற்றால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பறக்க முடியும், ஆனால் இது அந்தி வேளையில் செயல்பாட்டில் இருக்கும், பகல் பொழுதில் இலை பரப்பின் கீழ்ப்பகுதியில் ஒழிந்துகொள்ளும். இலைகளின் கீழ் பக்கத்தில் சுழல் வடிவங்களில் சுமார் 100 தங்க நிற முட்டைகளை பெண் பூச்சிகள் உற்பத்தி செய்கின்றன. இளம் பூச்சிகள் தட்டையாக, நீள்வட்ட வடிவில் இருக்கும் மற்றும் இவை முட்களை போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும். கருப்பு ஈக்களின் குத்துகின்ற கூர் அலகுகளால் இலைகளில் இருந்து அணுக்களின் சாறுகள் உறிஞ்சப்படுகின்றன. அதே நேரத்தில் ஈ தேன்துளிகளை பெரிய அளவில் சுரக்கிறது. இவற்றின் வளர்ச்சிக்கான உகந்த நிலைமைகள் சுமார் 28-32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 70-80% ஒப்பு ஈரப்பதம் ஆகும். உறைபனி ஏற்படும் குளிர் சூழலில் ஏ.வோக்லூமியால் உயிர் வாழ முடியாது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பழத்தோட்டத்திற்கு நோய் பூச்சி இல்லாத தாவரங்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • நெருக்கமாக நடவு செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் பழத்தோட்டத்திற்குள் காற்று சுழற்சிக்கான நல்ல நிலைமைகளை உருவாக்குங்கள்.
  • போதுமான அளவு மரங்களை சீர்திருத்தம் செய்து, புரவலன் தாவரங்களை அகற்றவும் (களை மற்றும் பிற புரவலன் பயிர்கள்), இது கருப்பு ஈக்கான பொருத்தமான வாழ்விடங்களை குறைக்கும்.
  • நோய்ப்பூச்சி மற்றும் கரும்பூசண தாவர பாகங்களுக்கான அறிகுறிகள் ஏதெனும் தென்படுகிறதா உங்கள் மரங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • போதுமான அளவு தண்ணீர் மற்றும் உரங்களை வழங்கவும், ஆனால் உங்கள் நார்த்தை மரங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நீர் தேக்கம் அல்லது அழுத்த நிலைகளை தவிர்க்கவும்.
  • அதிகப்படியான நீர்ப்பாசனம் மற்றும் தழைசத்துக்களின் பயன்பாடு, அத்துடன் அதிகப்படியான பூச்சிக்கொல்லி தெளிப்புகளையும் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
  • அடுத்த வளரும் பருவத்தில் புதிய நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியத்தை குறைக்க குளிர்காலத்தில் தங்கியிருக்கும் இடமாக இந்த நோய்ப்பூச்சி சாத்தியமான குப்பைகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க