பருத்தி

பருத்தியின் அரைக்காவடிப்புழு

Anomis flava

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் முட்டைப்புழுக்கள் இலைப்பரப்புகளைக் கூட்டமாக உண்டு, சிறிய துளைகளை இடும்.
  • முதிர்ச்சியடைந்த முட்டைப்புழுக்கள் இலைகளை சுவாரஸ்யமாக உண்டு, மைய நரம்பையும், நரம்புகளையும் மட்டுமே விட்டுவைக்கும்.
  • இளம் முட்டைப்புழுக்களின் வளைவு போன்ற இயக்கத்தால் இந்தப் பூச்சி இப்பெயர் பெற்றது.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

இளம் முட்டைப்புழுக்கள் கூட்டமாக இளம் இலைகளை உண்டு, இலைப் பரப்புகளைச் சுரண்டி, சிறிய துளைகளை ஏற்படுத்துகிறது. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் முழு இலைகளை, ஓரங்களில் இருந்து உண்ணத்தொடங்கி, நரம்புகளை நோக்கி உண்டு, மைய நரம்புகள் மற்றும் நரம்புகளை மட்டுமே மிச்சம் வைக்கின்றன (இந்த செயல்முறை எலும்புக்கூடு போன்றாகுதல் என்று அழைக்கப்படுகிறது). பின்னர், இவை இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் காய்களையும் உண்ணுகிறது. இலை மேற்பரப்பில் காணப்படும் கருப்பு நிறக் கழிவுகள் இந்த நோய்ப்பூச்சி இருப்பதற்கான பொதுவான அடையாளமாகும். முக்கியமாக வானிலை நிலைமைகளைப் பொறுத்து, இந்த நோய்ப்பூச்சியின் திடீர் தாக்குதல் ஏற்படக்கூடும் மற்றும் அவற்றின் தாக்குதல் கடுமையாக இருந்தால் விளைச்சல் இழப்பு ஏற்படும். இந்த அரைக்காவடிப்புழுக்கள் அதிக எண்ணிக்கையிலும் மற்றும் இளம் தாவரங்களைத் தாக்கினால் மட்டுமே, இது பயிர்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக இருக்கும். தாவரங்கள் முதிர்ச்சி அடைகையில், இவை இந்த நோய்ப்பூச்சிக்கு எதிரான எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக்கொள்ளும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அரைக்காவடிப்புழுவைச் சமாளிப்பது தொடர்ச்சியாக முட்டைகள் மற்றும் இளம் முட்டைப்புழுக்களைக் கண்காணித்துப் பிடிப்பதைச் சார்ந்து இருக்கிறது. இக்நியூமோனிடே, பிராகோனிடே, சீலியோனிடே, டிரைக்கோகிராம்மாடிடே மற்றும் டக்கினிடே போன்ற குடும்பத்தைச் சார்ந்த சில ஒட்டுண்ணிக் குளவிகளின் இனங்களை உயிரியல் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தலாம். பூச்சிகளின் உச்சகட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நீங்கள் வேப்ப எண்ணெயையும் தெளிக்கலாம். எடுத்துக்காட்டாக, வேப்ப விதைச் சாறு (என்எஸ்கேஇ 5%) அல்லது வேப்ப எண்ணெய் (1500பிபிஎம்) @ 5மிலி /லி என்ற வீதம் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். அதிகப்படியான பூச்சிக்கொல்லியின் பயன்பாடு இந்த நோய்ப்பூச்சியில் எதிர்ப்புத் திறனை உருவாக்கக்கூடும். வளருகையில் முட்டைப்புழுக்களின் பூச்சிக்கொல்லி சிகிச்சையைத் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகரிப்பதால், முட்டைகளையும், இளம் முட்டைப்புழுக்களையும் பிடிப்பது மிகவும் முக்கியம். இந்த நோய்ப்பூச்சி முட்டையாக இருக்கும் நிலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது பரிந்துரைக்கப் படுகிறது. குளோரன்டிரானிலிப்ரோல், எமாமெக்டின், பென்சோயேட், ஃப்ளுபென்டையமைட், மெத்தோமில் அல்லது எஸ்பென்வலேரேட் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். குறைவான மதிப்புடைய பயிர்களுக்கு இரசாயன சிகிச்சை சாத்தியமில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது அனோமிஸ் பிளேவா என்னும் அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது, இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணக்கூடிய ஒரு அந்துப்பூச்சியாகும். முதிர்ந்த அந்துப்பூச்சிகள் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும், முன்னிறக்கைகளின் ஓரங்களுக்கு அருகே இரு சாம்பல் நிற ஜிக்ஜாக் கோடுகள் காணப்படும். உடலுக்கு அருகே உள்ள மேற்புற இறக்கையின் பாதியளவை கவனத்தைக் கவர்கின்ற ஆரஞ்சு நிற முக்கோணக்குறி மறைத்துவிடும். பின் இறக்கைகள் எந்தவொரு சிறப்பம்சமும் இல்லாமல் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். பெண் பூச்சிகள் இலைகளில் சுமார் 500-600 வட்ட வடிவ முட்டைகளை இடும். இளம் முட்டைப்புழுக்கள் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும் மற்றும் இவற்றின் முதல் ஐந்து பிரிவுகளை மெல்லிய மஞ்சள் நிறக் கோடுகள் பிரிக்கின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறி, இரு மஞ்சள் நிற வரிகளைக் கீழ்ப்புறத்தில் கொண்டிருக்கும். கூட்டுப்புழுக்கள் பழுப்பு நிறத்தில், மடங்கிய இலைகளுக்குள் காணப்படும். செமிலூப்பர் என்னும் இந்த நோய்ப்பூச்சியின் ஆங்கிலப்பெயர் இவற்றின் முட்டைப்புழுக்கள் முன்னோக்கி நகர்ந்து சென்று, அதன் உடலால் வளைவு போன்று உருவாக்குவதைக் குறிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • உங்கள் சந்தையில் கிடைக்கப்பெற்றால், சகிப்புத்தன்மை கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • கடுமையான மழைப்பொழிவு தொற்றுநோய்கான சாத்தியங்களை அதிகரிப்பதால், வயலில் நல்ல வடிகாலினைத் திட்டமிடவும்.
  • பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் (வழக்கமாக விதைத்த 60 முதல் 75 நாட்களுக்கு இடையில்) தடுக்க சீக்கிரம் விதைக்கவும்.
  • வயல்களைக் கண்காணித்து, பாதிக்கப்பட்ட இலைகளைக் கையால் அகற்றவும்.
  • பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளைப் பாதிக்கக்கூடும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க