பருத்தி

பருத்தியின் இலை சுருட்டுப்புழு

Syllepte derogata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் இலைகளைச் சுருட்டி, பிறகு இலை ஓரங்களை உண்ணும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மேற்புறம் சுருண்டு, வாடி, இலை உதிர்வுக்கு வழிவகுக்கும்.
  • காய்கள் உருவாகுவது குறைந்து, காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே வெடிக்கக்கூடும்.
  • கடுமையான நோய்த்தொற்றுக்கள் குறிப்பிடத்தக்க விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்
பருத்தி
கத்திரிக்காய்
மரவள்ளிக்கிழங்கு
வெண்டக்காய்
மேலும்

பருத்தி

அறிகுறிகள்

இலைகள், முக்கியமாக தாவரங்களின் மேல் பாகத்தில் எக்காள வடிவில் சுருண்டு கொள்ளுதல் இவற்றின் ஆரம்ப அறிகுறிகளாகும். முட்டைப்புழுக்கள் இலைகளுக்குள் இருந்து, இலை ஓரங்களை மெல்லும். படிப்படியாக, இலைகள் சுருண்டு, தொங்கி, இலை உதிர்வு மற்றும் காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே வெடித்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். மொட்டுகள் உருவாகும் நிலையில் அல்லது பூக்கும் நிலையில் தாக்குதல் ஏற்பட்டால், காய் உருவாகுவது குறைந்துவிடும். இருப்பினும், பொதுவாக, கடுமையான நோய்த்தொற்றுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இது குறிப்பிடத்தக்க அளவில் விளைச்சல் இழப்பை ஏற்படுத்தக்கூடும். எஸ். டெரோகேடா வெண்டைக்காய் பயிரையும் தாக்கக்கூடிய பொதுவான நோய்ப்பூச்சியாகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி இனங்கள் அல்லது பிற இரைப்பிடித்துண்ணி பூச்சிகளின் மூலமான உயிரியல் கட்டுப்பாடு நோய்த்தொற்றைக் குறைக்கப் பயன்படுகிறது. அபான்டெலெஸ் எஸ்பி மற்றும் மெசோகோரஸ் எஸ்பி என்னும் இரண்டு வகையான ஒட்டுண்ணி முட்டைப்புழுக்கள் மற்றும் பிராக்கிமெரியா எஸ்பி மற்றும் சாந்தோபிம்ப்லா எஸ்பி என்னும் இரண்டு வகையான ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்கள் வயல் சோதனைகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் உடைய தயாரிப்புகளைத் தெளிக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய்த்தொற்றின் அளவுகளைக் குறைக்க பைரிட்ராய்ட்ஸ், சைபர்மெத்ரின் மற்றும் இண்டொக்ஸகார்ப் (அல்லது இந்த செயல்பாட்டு பொருட்களின் கலவை) போன்றவை பருத்தி வயல்களில் ஓரளவுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது சில்லெப்டே டெரோகேடா என்னும் பருத்தி இலைசுருட்டுப்புழு முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் நடுத்தர அளவில், 25-30 மிமீ நீளமுள்ள இறக்கைகளைக் கொண்டிருக்கும். இவை மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில், தலை மற்றும் கழுத்துப்பகுதியில் தனித்துவமான கருப்பு மற்றும் பழுப்பு நிறப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். இரு இறக்கைகளிலும் கரும்பழுப்பு நிற அலை போன்ற கோடுகள் காணப்படும், இது வெளிப்படையான தோற்றத்தை ஏற்படுத்தும். பெண்பூச்சிகள் இலைகளின் அடிப்புறத்தில் முட்டைகளை இடும், இது பெரும்பாலும் தாவரத்தின் மேல்புறத்தில் உள்ள இளம் இலைகளில் இடும். இளம் முட்டைப்புழுக்கள் ஆரம்பத்தில் இலைகளின் அடிப்புறத்தை உண்ணும், பின்பு சுருண்ட இலைக்கூட்டை உருவாக்க மேல்புறத்திற்கு செல்லும், அங்குதான் அவை கூட்டுப்புழுக்களாகும். முட்டைப்புழுக்கள் 15 மிமீ வரையிலான நீளத்தில், அழுக்கு வெளிர் பச்சை நிறத்தில், ஓரளவுக்கு ஒளி கசியக்கூடியதாக இருக்கும்.


தடுப்பு முறைகள்

  • எஸ்.
  • டெரோகேடா மீண்டும் மீண்டும் பிரச்சனை ஏற்படுத்தினால் எதிர்ப்புத் திறன் உடைய வகைகளை நடவு செய்யவும்.
  • பூச்சியின் உச்சகட்ட படையெடுப்பைத் தடுக்க பருவகாலத்தின் இறுதியில் நடவு செய்யவும்.
  • நல்ல முறையில் உரமிடும் திட்டங்களுடன் தாவரங்களை ஆரோக்கியமாக வளர்க்கவும்.
  • நோய் அல்லது நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயல்களைச் சோதிக்கவும்.
  • முட்டைகளையுடைய பாதிக்கப்பட்ட இலைகள், சுருண்ட இலைகள் மற்றும் கம்பளிப்புழுக்களை கையால் எடுத்து அப்புறப்படுத்தவும்.
  • அந்துப்பூச்சிகளைக் கவர்வதற்கு பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • பூச்சியின் இயற்கையான எதிரிகளை அழிக்கக்கூடிய கண்மூடித்தனமான பூச்சிக்கொல்லி உபயோகத்தைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களையும், குப்பைகளையும் அகற்றிவிடவும் அல்லது எரித்து அழித்துவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க