சோயாமொச்சை

சோயாமொச்சை தண்டு துளைப்பான்

Melanagromyza sojae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மென்மையான, செம்பழுப்பு நிற அழுகும் தண்டு திசுக்கள் காணப்படுதல்.
  • சிறிய முட்டையிடும் உண்ணும் துளைகள்.
  • குன்றிய வளர்ச்சி.
  • சிறிய கருப்பு ஈக்களின் தோற்றம்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

சேதங்களானது தண்டில் காணப்படும் அழுகிய திசுக்களின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது . இவை மென்மையாகவும், செம்பழுப்பு நிறமாகவும் மாறும். இலை பரப்பின் அடிப்பகுதியில் காணப்படும் சிறிய முட்டைகள் மற்றும் உண்ணும் துளைகள் மூலம் வெளிப்புற அறிகுறிகள் கவனிக்கப்படுகின்றன. 5 - 8 செ.மீ உயரமுள்ள தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. தாவரங்களின் உயரம் குறைவது போலவே தண்டின் அகலமும் குறையலாம் (குள்ளத்தன்மை). உற்பத்தி கட்டத்தில் பாதிக்கப்படும்போது, காய்கள் குறைவதால், அதன் விளைவாக பழம் இழப்பு ஏற்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

எம். சோஜாவிற்கு ஏராளமான இரைப்பிடித்துண்ணிகள் மற்றும் பிற இயற்கை எதிரிகள் உள்ளன, இது அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரும்பாலான சமயங்களில் போதுமானது. சைனிபொய்டியா எஸ்பி., ஸ்பீகிகாஸ்டர் எஸ்பி., யூரிடோமா மெலனாக்ரோமைஸா, சின்டோமோபஸ் கரினாட்டஸ் மற்றும் அனூரோபிரியா கைரலி போன்ற ஒட்டுண்ணி குளவிகள் ஸ்பீகிகாஸ்டர் எஸ்பியில் 3% முதல் இ. மெலனக்ரோமைசாவில் 20% வரை இந்த பூச்சியை கட்டுப்படுத்தும். சினிபோய்டியா எஸ்.பி. மற்றும் ஈ. மெலனக்ரோமைசா போன்றவற்றை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மண் சிகிச்சையாக விதைக்கும்போது அல்லது முளைத்த பிறகு உடனடியாக லாம்ப்டா-சைஹலோத்ரின் 4.9% சிஎஸ், தியாமெதொக்சாம் 12.6% இசட் சி மற்றும் லாம்ப்டா-சைஹலோத்ரின் 9.5% இசட் சி அல்லது இந்தோக்ஸாகார்ப் 15.8% ஈசி ஆகியவற்றை கொண்டு இலைத்திரள்கள் மீது தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியது அவசியம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகள் பெரும்பாலும் சோயாமொச்சை தண்டு துளைப்பானான மெலனாக்ரோமைசா சோஜாவின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகின்றன. முதிர்ந்த பூச்சிகள் சிறிய கருப்பு ஈக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. தண்டு துளைப்பானின் பெண் பூச்சிகள் தாவர திசுக்களுக்கு அருகிலுள்ள மண்ணில் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து குஞ்சு வெளியாகியபின், அது தண்டில் துளையிட்டு, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி வேர்கள் வரை உண்ணுகிறது. இந்த செயல்பாடு தாவரங்களின் மேல்பகுதி வாடிப்போவதற்கு வழிவகுக்கும். பிந்தைய நிலையில், வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் தண்டில் இருந்துகொண்டு, ஓட்டைகளை குப்பைகளால் நிரப்பி, அது ஏற்படுத்திய துளைகளுக்கு அருகே கூட்டுப்புழுக்களாகின்றன. தண்டுகளை வெட்டி பார்க்கும்போது, உண்ணும் சுரங்கங்கள் வெளியே தெரியும். 2 மற்றும் 3 வது தலைமுறை அதிக சேதத்தை உருவாக்குவதாக கவனிக்கப்பட்டுள்ளது. எம். சோஜே புரவலன் தாவரங்களை அரிதாகவே அழிக்கின்றன, ஆனால் பொருளாதார விளைச்சல் இழப்புகளை ஏற்படுத்தும். நோய்த்தொற்று எவ்வளவு தாமதமாக ஏற்படுகிறதோ, விளைச்சல் இழப்பு அவ்வளவு குறைவாக இருக்கும். எம். சோஜேவுக்கு முன்பு ஓபியோமியா ஃபெஸியோலி கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது, சேதத்தை எம். சோஜாவுடன் 100% இணைக்க முடியாது என்பதை இது குறிக்கிறது. சோயாமொச்சை தண்டு துளைப்பான் பல்வேறு காலநிலை மண்டலங்களில் கண்டறியப்பட்டு, பல்வேறு பருப்பு வகைகள் / பயற்றின வகைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மையுள்ள வகைகளைப் பயன்படுத்தவும், எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சிஓ-1 அல்லது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் என்ஆர்சி 7, என்ஆர்சி 37.
  • எம்.
  • சோஜேயின் சிறிய மற்றும் கருப்பு நிற முதிர்ந்த பூச்சிகள் ஏதேனும் தென்படுகிறதா என குறிப்பாக உங்கள் வயலை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • உண்ணும் சுரங்கங்கள் தண்டுகளில் ஏதேனும் தென்படுகிறதா என சோதிக்கவும்.
  • பயிர் சுழற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
  • அறுவடைக்குப் பிறகு, அடுத்த பருவத்திற்கு போதுமான அளவு மண்ணைத் தயார் செய்து, தாமதமாக நடவு செய்வதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க