மற்றவை

மக்காசோளம் புள்ளி வண்டு

Astylus atromaculatus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மலர்கள் மற்றும் மக்காச்சோளம் கதிர்களின் மீது கருப்பு புள்ளிகளுடன் மஞ்சள் நிற, நீள்வட்ட வடிவிலான வண்டுகள் கொத்தாகக் காணப்படும்.
  • இலவம் பஞ்சு அல்லது தானியங்களில் சேதங்கள் காணப்படும்.
  • விதைகள் அல்லது முளைக்கும் மக்காச்சோள நாற்றுகளுக்கு சேதங்கள் ஏற்படும் மற்றும் தாவரங்களின் நிலைத்தன்மையும் குறையும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

மலர்கள் மற்றும் மக்காச்சோளம் கதிர்கள் மீது கருப்பு நிறப் புள்ளிகள் கொண்ட மஞ்சள் நிற, நீள்வட்ட வடிவிலான வண்டுகள் கொத்தாகக் காணப்படும். விதைகள் அல்லது முளைக்கும் மக்காசோள நாற்றுகளுக்கு சேதங்கள் ஏற்படும் மற்றும் தாவரங்களின் நிலைத்தன்மையும் குறையும். இந்தப் பூச்சி உண்மையில் மகரந்தத்தை எடுத்துச் செல்லும் காரணியாக இருக்கின்றன. ஏனெனில் இவற்றின் பறக்கும் வரம்பு அவ்வப்போது 200 மீ வரை அல்லது அதற்கு மேல் இருக்ககூடும். நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது மட்டும், இது நோய்ப்பூச்சியாக உருவாகும் (வெதுவெதுப்பான, வறண்ட வானிலை மற்றும் 15 ° செல்சியஸிற்கு மேலான வெப்பநிலை). இந்த நிலைமைகளில் கூட, பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு இவை போதுமான சேதத்தை ஏற்படுத்துவதில்லை.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

தாவர தள்ளு-இழு அமைப்புடன் (டெஸ்மோடியம் மற்றும் நேப்பியர் புல் கொண்ட தடைகளுடனான ஊடுபயிர்முறையை உள்ளடக்கியது) அறியப்பட்ட இரைப்பிடித்துண்ணிகளுடனான (தானிய தண்டுத்துளைப்பான்கள்) வாழ்வாதார மேலாண்மையானது பயிர்களை அவ்வப்போது இந்தப் பூச்சிகள் உண்ணுவதிலிருந்து கடந்த காலத்தில் நன்கு தடுத்தது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். ரசாயன விதைச் சிகிச்சைகள் மற்றும் ரசாயனத் தெளிப்பான்கள் ஆகியவை ஆஸ்டிலஸ் வண்டுகளை கட்டுப்படுத்த தற்போது பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள் ஆகும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோயால் ஏற்படும் சேதங்களானது அஸ்டிலஸ் அட்ரோமகுலேட்டஸ் என்னும் மக்காச்சோள புள்ளி வண்டுகளால் ஏற்படுகிறது. முதிர்ந்த வண்டுகள் லேசான நீளமாக, கரு நிறப் புள்ளிகளுடன் மஞ்சள் நிற இறக்கைகளைக் கொண்டிருக்கும். இவை பெரும்பாலும் தாவரங்களை உண்ணக்கூடியவை. மக்காசோளம், அரிசி, சோளம் அல்லது சூரிய காந்தி போன்ற பயிர்களின் பட்டுநூல், மகரந்தம் அல்லது தானியங்களை உண்ணும். இவை பொதுவாக இந்தச் செடிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துவதில்லை. வயலில் மிகவும் குறைவானப் பயிர்கள் இருக்கும்போது, இவை கூட்டமாக புல்வெளிகளை வந்தடையும், மேலும் இவற்றை கால்நடைகள் உண்ணும்போது பிரச்சனையாக மாறக்கூடும், இறப்பதற்கு கூட சாத்தியங்கள் ஏற்படக்கூடும். பெண் பூச்சிகள் உலர்ந்த இலைகளுக்கு அடியில் முட்டைகள் இடும். முட்டைப்புழுக்கள் தரையில் வாழ்ந்து, சிதையும் தாவரக் கழிவுகளை உண்ணும். இவை சிலநேரங்களில், விதைகளுக்கு அல்லது முளைக்கும் மக்காச்சோள நாற்றங்கால்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி, தாவரங்களின் நிலைத்தன்மையைக் குறைக்ககூடும். வெதுவெதுப்பான, வறண்ட காலநிலை (15 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை) இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை ஆதரிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • ஒற்றைப் பயிர்வளர்ப்பு முறைகள் பூச்சிகளின் சுழற்ச்சிக்கு ஆதரவாக இருப்பதால், அவற்றை தவிர்க்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க, தண்ணீர் நிறைந்த மஞ்சள் நிற வாலிகள் அல்லது 2 -பினைல் எத்தனால் கொண்ட தூண்டில் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க