மற்றவை

வெள்ளை வண்டினப்புழு

Phyllophaga spp.

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • வளர்ச்சிக் குன்றிய, வாடிய, நிறமிழந்த தாவரங்கள்.
  • வயலில் வாடிய மரங்களின் வளர்ச்சித் திட்டுக்களாகக் காணப்படுதல்.
  • காயமடைந்த தாவரங்கள் பொதுவாக கத்தரிப்பு நிறத் தண்டுகளைக் கொண்டிருக்கும்.
  • குளிர்ச்சியான, ஈரமான மணல் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கும்.


மற்றவை

அறிகுறிகள்

வெள்ளை வண்டினப்புழுக்கள் முதிர்ந்த தாவரங்களின் முக்கிய வேர்களை வெட்டும் அல்லது மெல்லிய வேர்களை மெல்லும். இது நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுத்து, வளர்ச்சிக் குன்றிய, வாடிய, நிறமிழந்த கவிகைகளை உருவாக்கும். முளைக்கும் நாற்றுகள் தாக்கப்படக்கூடும், இதன் விளைவாக வயலில் வாடிய தாவரங்களின் வளர்ச்சித் திட்டுக்களாகக் காணப்படும் அல்லது வரிசைகளில் இடைவெளிகள் காணப்படும். பொதுவாக, காயமடைந்த தாவரங்களின் தண்டு பாஸ்பரஸ் குறைபாட்டைக் குறிக்கும், கத்தரிப்பு நிறமாக மாறும். குளிர்ந்த, ஈரமான மண் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும், ஏனென்றால் சோள நாற்றுகளின் வளர்ச்சி மெதுவாகி, மேலும் நீண்ட காலம் பாதிக்கப்படக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வெள்ளை வண்டினப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை எதிரிகளுள் டிபியா மற்றும் மைசினம் மற்றும் பெலிசினஸ் பாலிடியூரேட்டர் இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிக் குளவிகளும் அடங்கும். ஒட்டுண்ணி ஈக்களில் பிர்கோட்டா அன்டேட்டா இனங்களும் அடங்கும். கார்டிசெப்ஸ் சார்ந்த பூஞ்சையும் முட்டைப்புழுக்களைப் பாதிக்கும், இந்தப் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் கரைசல்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். பேசில்லஸ் பாபிலியா மற்றும் பேசில்லஸ் லென்டிமோர்பஸ் போன்ற பாக்டீரியா வித்துக்களை மண்ணில் உட்செலுத்துவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இந்த அனைத்துத் தயாரிப்புகளும் வணிக ரீதியாகக் கிடைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வெள்ளை வண்டினப்புழுக்களின் மேலாண்மையில் தாவரங்களை நடவு செய்வதற்கு முன் அந்தப் புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை முழுவதும் கண்காணித்தல் மிகவும் முக்கியமானதாகும். அவற்றின் எண்ணிக்கையை ஏற்றுக்கொள்ளத்தக்க அளவில் குறைக்க மண் பூச்சிக்கொல்லிகளுடன் புகையூட்டலைப் பயன்படுத்தலாம். விதைச் சிகிச்சை சில நேரங்களில் வெள்ளை வண்டினப்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது, ஆனால் பொதுவாக இரசாயணச் சிகிச்சை பரிந்துரைக்கப்படவில்லை.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது ஃபைல்லோஃபாகா இனத்தைச் சார்ந்த பல்வேறு வண்டுகளின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இது பொதுவாக வெள்ளை வண்டினப்புழு என்று அறியப்படுகிறது (100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்கள்). மற்ற வகையான வண்டினப்புழுக்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம், ஆகையால் இவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது முக்கியம். வண்டுகள் 12 முதல் 25 மி.மீ. நீளத்தில், மஞ்சள் முதல் சிவந்த-பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில், வலுவான மற்றும் நீளமான வடிவத்துடன் இருக்கும். முட்டைப்புழுக்கள் பழுப்பு நிறத் தலையுடன், வெள்ளை நிறத்தில், "C" வடிவில், 20 முதல் 45 மிமீ நீளத்தில் 3 ஜோடி கால்களைக் கொண்டிருக்கும். வயிற்றின் பின்பகுதி அடர் நிறத்தில், சற்று பெரியதாக இருக்கும் ஏனெனில் உடல் பகுதியில் காணப்படும் மண் துகள்களால் இவ்வாறு காணப்படுகிறது. இந்தப் பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பரவலாக மாறுபடும், எனவே இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தடுப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும்.


தடுப்பு முறைகள்

  • அதிகம் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயிர் செய்யவும்.
  • வண்டினப் புழுக்களின் உச்சகட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க, திட்டமிடப்பட்ட நடவுத் தேதியை மாற்றவும்.
  • பாதிக்கப்பட்ட பகுதியில் சில தாவரங்களைத் தோண்டி, அவற்றின் வேர் மண்டலத்தில் வெள்ளை வண்டினப்புழுக்கள் ஏதேனும் தென்படுகிறதா எனக் கண்காணிக்கவும்.
  • ஆழ்ந்த வேரூன்றிய பருப்பு வகைகள் (மண் புல் வகை அல்லது குளோவெர்ஸ்) போன்ற புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும்.
  • முட்டைகள் இடப்படுவதின் எண்ணிக்கையைக் குறைக்க, வயலில் புற்கள் மற்றும் களைகளின் வளர்ச்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • முன்னர் சோயாபீன் அல்லது உருளைக்கிழங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் சோளத்தை விதைப்பதைத் தவிர்க்கவும்.
  • பருவத்தின் நடுப்பகுதியில் உழுவதின் மூலம், பூச்சிகளை இரைப் பிடித்துண்ணிகளுக்கு வெளிப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு, ஆழமாக உழுது, அறுவடைக் கழிவுகள் மற்றும் பயிர்த்தாள்களை அகற்றி விடவும் அல்லது எரித்து விடவும்.
  • மாற்றாக, நிலத்தைத் தோண்டி, வண்டினப் புழுக்களை உண்ண பன்றிகளைப் பயன்படுத்தவும்.
  • பூச்சிக்கொல்லிகளை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • ஏனெனில், இது வெள்ளை வண்டினப்புழுக்களின் இயற்கை எதிரிகளைப் பாதிக்கும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க