மற்றவை

கம்பி புழுக்கள்

Elateridae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • நடவு செய்த பிறகு நாற்றுகள் இறந்து போகுதல் மற்றும் வெறுமையான விதைகள் காணப்படும்.
  • பிந்தைய நிலைகளில், தாவரங்கள் வாடி போகும் மற்றும் தண்டுகள் துண்டாகும்.
  • இருப்பினும் அவை வேர்களுடனே இணைந்து இருக்கும்.
  • வயலில், மெல்லிய தண்டுகளுடன் திட்டுக்களாக அல்லது வெறுமனே காணப்படும்.
  • வசந்த காலத்தின் ஆரம்பத்திலேயே பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டுவிடும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

கம்பிப்புழுக்கள் முளைக்கும் விதைகள், வேர்கள் மற்றும் இளம் நாற்றுகளை நிலத்திற்கு அடியில் உண்டு, நேரடியாகத் தாவரங்களைக் கொன்றுவிடும் அல்லது அவற்றை சேதப்படுத்தும். இந்தக் காயங்கள் சந்தர்ப்பவாத நோய்க் கிருமிகளுக்கு சரியான நுழைவு வாயிலாக அமையும், இது அறிகுறிகளை மேலும் மோசமடைய செய்யும். நடவு செய்த பிறகு, இளம் நாற்றுகள் மற்றும் வெறுமையான விதைகள் ஏற்படுவது, இந்த நோய்ப் பூச்சியால் மணல் பாதிக்கப்பட்டிருப்பதை குறிக்கும் அறிகுறிகளாகும். தாவர வளர்ச்சியின் பிந்தைய நிலைகளில், இளம் தாவரங்கள் வாடி, நிறமாற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். நடுப்புற இலைகள் உண்ணும் சேதங்களை கொண்டிருக்கும் அல்லது இறந்துவிடும், இருப்பினும் வெளிப்புற இலைகள் பச்சையாகவே இருக்கும். தண்டுகள் துண்டிக்கப்படக்கூடும், ஆனால் அவை வேர்களுடனேயே இணைந்திருக்கும். வயலில், தாவரங்கள் மெல்லிய தண்டுகளுடன் திட்டுக்களாக அல்லது வெறுமனே காணப்படும். வசந்த காலத்தின் ஆரம்பத்திலேயே பெரும்பாலான சேதங்கள் ஏற்பட்டுவிடும். உருளைக்கிழங்கில், கம்பிப்புழுக்கள் வசந்த காலத்தில் உருளைக்கிழங்கு விதை துண்டுகளினுள் துளையிட்டு அதனுள் வாழும், மேலும் இலையுதிர் காலத்தில் வளரும் கிழங்குகளினுள் வாழும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில நிலத்தடி வண்டுகள் மற்றும் மேயும் வண்டுகள் கம்பிப்புழுக்களை உண்ணும். சில குத்து வாள் ஈக்களின் முட்டைப்புழுக்கள் (தெரிவிடே) கூட கம்பிப்புழுக்களின் இரைப்பிடித்துண்ணிகளாகும். சில வகை நூற்ப்புழுக்களும் கம்பிப்புழுக்களை உண்ணும். பூஞ்சை மெட்டார்ஹீலியம் அனிசோப்லேயும் கம்பிப்புழுக்களை தாக்கி, உண்ணும். இந்த பூஞ்சையை கொண்டிருக்கும் சிறுமணி உருவாக்கமானது கம்பிப்புழுக்களை கட்டுப்படுத்தும் திறனை தீர்மானிக்க சோதிக்கப்பட்டு வருகிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கம்பிப்புழுக்களின் சேதங்களை தடுப்பதற்கு, நடவு செய்வதற்கு முன் அல்லது நடவு செய்யும்போது சிகிச்சை தேவைப்படும். பூச்சிக்கொல்லிகளுடனான விதைச் சிகிச்சைகள் அவற்றின் எண்ணிக்கையை ஓரளவு கட்டுப்படுத்தப் பயன்படும். உங்கள் நாட்டில் இந்த தயாரிப்புகளில் சிலவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது சொடுக்கு வண்டுகள் கூட்டம் (எலாடெரிடே) முதிர்ச்சியற்ற முட்டைப்புழு நிலையில் இருக்கும்போது ஏற்படுகிறது. கம்பிப்புழுக்களானது 2 செ.மீ. வரையிலான நீளத்தில், உருளை வடிவத்தில், வெள்ளை, மஞ்சள் அல்லது தாமிர நிறத்தில் காணப்படும். கோடைக் காலத்தில் மண் துகள்களில் பெண் பூச்சிகள் பல நூறு முட்டைகளை ஒற்றையாக இடுகின்றன. தளர்வான மற்றும் மணற்பாங்கான மண் இவற்றின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாகும். முட்டைப்புழுக்கள் நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள தாவர பாகங்கள், முளைக்கும் விதைகள் அல்லது இளம் நாற்றுகளை முதிர்ச்சியடைவதற்கு முன்னர் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உண்ணும். இது பெரும்பாலும் மெல்லிய பயிர் தண்டுகள் மற்றும் குறைந்த விளைச்சலுக்கு வழிவகுக்கும். கோதுமையை தவிர, இவை மக்காச்சோளம், புற்கள் மற்றும் சில காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம்) போன்றவற்றைத் தாக்குகின்றன. நடவு செய்தபின் பயிர் சேதங்கள் பொதுவாக கண்டறியப்படுகிறது, இது பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாமதமான காலமாகும். எனவே நடவு செய்வதற்கு முன், கம்பிப்புழுக்கள் இருக்கின்றதா என நன்கு ஆராய்வது மிக முக்கியமாகும்.


தடுப்பு முறைகள்

  • நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவாக உள்ள தாவரங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • நடவு செய்வதற்கு முன், வயல்களை தொடர்ச்சியாக, நன்கு ஆராயவும், ஏனெனில் இந்த நடவடிக்கையானது இந்த நோய்ப் பூச்சியை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியம்.
  • தூண்டில் பொறிகள் அல்லது பந்து முறைகள் போன்றவற்றை கம்பிப்புழுக்களை பிடிக்கவும், அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவும் பயன்படுத்தலாம்.
  • கம்பிப்புழுக்களால் பாதிக்கப்படும் சாத்தியம் கொண்ட வயல்களில் உருளைக்கிழங்குகளை நடவு செய்வதை தவிர்க்கவும்.
  • விரைவாகத் தாவரங்கள் முளைப்பதற்கு சூடான மற்றும் ஈரமான மண்ணில் விதைகளை விதைக்க வேண்டும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க