உலர்ந்த திராட்சை

செந்திராட்சை வகை கொப்புள அசுவினி

Cryptomyzus ribis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • மேல்பக்க இலையில் சிவந்த, ஊதா அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிற கொப்புளங்கள் காணப்படும்.
  • சிதைந்த திசுக்களைச் சுற்றி நிறமாற்றமடைந்த பகுதிகள்.
  • கடுமையான தாக்குதலின் கீழ் இலைச் சிதைவு ஏற்படும்.
  • தேன்துளி பூசண வளர்ச்சியை ஆதரிக்கிறது.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்
உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை

அறிகுறிகள்

சிவப்பு மற்றும் வெள்ளை திராட்சை வகை செடியின் இலைகளின் மேல் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருந்து ஊதா நிறம் வரையிலான கொப்புளங்கள் தெரியும். இந்தக் கொப்புளங்கள் பொதுவாக கருப்பு திராட்சை வகை தாவரத்தின் மீது மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். நிறமாற்றம் செய்யப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் சிதைந்த திசுக்களைச் சுற்றிக்கொள்ளும். முக்கியமாக தளிர் முனைகளில் உள்ள இலைகள் மடிந்து அல்லது சிதைந்து காணப்படும். கடுமையான நோய் பாதிப்புகளில் இலைச் சிதைவு ஏற்படலாம். வெளிர் மஞ்சள் நிற அசுவினிகள் கொப்புளங்களுக்கு அடியில் வசந்த காலத்தின் பிற்பகுதியில் - கோடையின் தொடக்கத்தில் காணப்படும். தேன்துளி இலைகளிலும் இருக்கலாம், இது இறுதியில் சந்தர்ப்பவாத கரும்பூசண வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், புதர்களால் பொதுவாக இலேசான இலைத்திரள் அறிகுறிகளுடன் ஒரு சாதாரண பயிரை உருவாக்க முடியும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கையில் வேட்டையாடும் இனங்களில் பெண் வண்டுகள் அடங்கும் - திடீர் நோய் பாதிப்பு ஏற்பட்டால் இவற்றை வெளியிடப்படலாம். செந்திராட்சை வகை கொப்புள அசுவினிகளைக் கட்டுப்படுத்த தோட்டத்திற்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது சலவை சோப்பின் இலேசான கரைசல் கொண்ட தெளிப்புகள் போதுமானது. குழாய் மூலம் வலுவாக நீர் தெளிப்பதன் மூலம் அசுவினிகளை அகற்றலாம். தோட்டத்திற்கு பயன்படுத்தும் ஒரு உயர்ந்த வகை எண்ணெய் மூலம் குளிர்காலத்தில் முட்டைகளை அழிக்கலாம். வளர்ந்து வரும் அசுவினிகளைக் கொல்லும் பிற கரிம கலவைகளில் பைரெத்ரம் அல்லது பைரெத்ரம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் அடங்கும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள். மிகவும் கடுமையான நோய் பாதிப்புகளின்போது, டெல்டாமெத்ரின் அல்லது லாம்ப்டா-சைஹலோத்ரின் என்ற பூச்சிக்கொல்லியைக் கொண்ட தெளிப்புகளை பயன்படுத்தி வளர்ந்து வரும் அசுவினிகளைக் கொல்லலாம். காணக்கூடிய அறிகுறிகள் வினைபுரியும் வரை காத்திருக்க வேண்டாம், ஏனெனில் இலைகள் மடிந்த பிறகு தெளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளுக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக பூக்கும் தாவரங்களில் தெளிக்க வேண்டாம்.

இது எதனால் ஏற்படுகிறது

செந்திராட்சை வகை கொப்புள அசுவினி, கிரிப்டோமைசஸ் ரிபிஸ் என்பவற்றால் இந்நோயின் சேதம் ஏற்படுகிறது. இலையின் அடிப்பகுதியில் உள்ள சாற்றை உறிஞ்சும் இறக்கையில்லா, வெளிர் மஞ்சள் நிற அசுவினிகளை விட, மடிந்த மற்றும் கொப்புளங்கள் கொண்ட இலை திசுக்களை பெரும்பாலும் கவனிக்கலாம். இவை வசந்த காலத்தின் பிற்பகுதியில் அல்லது கோடையின் தொடக்கத்தில் தெரிய ஆரம்பிக்கும். கொப்புளங்கள் மற்றும் நிறமாற்றம் ஆகியவை உண்ணும் செயல்முறையின் போது இலைகளில் இரசாயனங்கள் செலுத்தப்படுவதால் ஏற்படுகிறது. கோடையின் நடுப்பகுதியில் இறக்கைகள் கொண்ட அசுவினிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவை இரண்டாம் நிலை புரவலன் தாவரங்களுக்கு இடம்பெயர்கின்றன, முக்கியமாக ஹெட்ஜ் உண்ட்வார்ட் (ஸ்டாச்சிஸ் சில்வாடிகா) என்ற தாவரத்திற்கு இவை இடம்பெயர்கின்றன. இவை இலையுதிர்காலத்தில் திராட்சை வகை தாவரத்திற்கு திரும்ப வந்து, தளிர்கள் மீது செயலற்ற நிலையில் இருக்கும் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் வசந்த காலத்தில் குஞ்சு பொரித்து, அசுவினி காலனிகளை உருவாக்க ஆரம்பிக்கின்றன, இவை இலைகளின் கீழ்ப் பக்கத்திற்கு இடம்பெயர்கின்றன. திராட்சை வகை கொப்புள அசுவினி சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு திராட்சை வகைத் தாவரங்களையும், அத்துடன் இவற்றைப் போன்ற காட்டுத்தாவரம் ஜோஸ்டாபெர்ரி (ரிப்ஸ் இனம்) ஆகியவற்றையும் பாதிக்கிறது. பொதுவாக பயிர் பாதிக்கப்படாததால், மிகவும் கடுமையான நோய் பாதிப்புகளில் மட்டுமே கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும்.


தடுப்பு முறைகள்

  • திராட்சை வகைகள் மற்றும் தொடர்புடைய புரவலன்களில் சி.ரிபிஸ் மற்றும் அவற்றின் அறிகுறிகளின் இருப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • பூச்சிக்கொல்லிகளை கண்மூடித்தனமாக பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது பெண்வண்டு போன்ற இயற்கையாக வேட்டையாடும் பூச்சிகளை பாதிக்கலாம்.
  • நைட்ரஜன் கொண்டு அதிகம் உரமிடுவதைத் தவிர்க்கவும், இதன் விளைவாக பசுமையான இலைத்திரள்கள் அதிக அசுவினிகளைக் கவரும்.
  • முன்பு வேளாண்மை செய்த இடங்களில் இருக்கும் கழிவுகளை அகற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க