நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

கருப்பு பார்லடோரியா செதில் பூச்சி

Parlatoria ziziphi

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள், பழங்கள், தளிர்கள் ஆகியவற்றை மூடிக்கொள்ளும் சிறிய, கருப்பு நிறச் செதில் பூச்சிகள் காணப்படும்.
  • இலைத் திரள்கள் மற்றும் பழங்களில் மஞ்சள் கோடுகள் மற்றும் புள்ளிகள் காணப்படும்.
  • கடுமையான நோய்த் தொற்று ஏற்படும்போது, இலைகள் முன்கூட்டியே உதிரக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

பி.ஸிஸிபியின் நோய்த் தொற்றுகள் கருநிற சிறிய பூச்சிகள் தளிர்கள், இலை திரள்கள் மற்றும் பழங்களை உண்ணுவதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. கடுமையான நோய்த்தொற்றுகளில், கிட்டத்தட்ட அகற்ற முடியாத வகையில் துணைச்செவ்வக செதில்கள் மற்றும் அவற்றின் வெள்ளை நிற ஊர்ப்புழுக்கள் பழங்கள், இலைகள் மற்றும் தளிர்களை மூடிக்கொள்ளும். தாவரச் சாறுகள் குறைவதனால் புரவலன் தாவரங்களின் வீரியம் குறையக்கூடும் மற்றும் உண்ணும் பகுதிகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். இவை உண்ணுவதனால் கிளைகள் அழிந்து, பழங்களின் வளர்ச்சியை தீவிரமாக பாதித்து, பெரும்பாலும் சிதைவுகளுக்கு வழிவகுக்கும். இவை முன்கூட்டியே முதுமையடைதல், இலைகள் மற்றும் பழங்கள் கீழே விழுதல் மற்றும் பழங்களின் அளவு மற்றும் தரம் குறைதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இது நாரத்தை மரங்களை தாக்கக்கூடிய மிக முக்கியமான பூச்சியாக ஆகிவிட்டது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஸ்குடெல்லிஸ்ட்டா கேருளியா, டைவெர்ஸிநெர்வஸ் எலிகன்ஸ் மற்றும் மெட்டாபைகஸ் ஹெல்வோலஸ் உள்ளிட்ட சில ஒட்டுண்ணி குளவிகள், அத்துடன் அஸ்பிடியோட்டிபேகஸ் மற்றும் அப்பிடீஸ் போன்றவற்றின் சில இனங்களும் பி.ஸிஸிப்பியை கட்டுப்படுத்த உதவும். செந்நிற சிறுவண்டுகள் (கிலோகோரஸ் பைபஸ்டுலேட்டஸ் அல்லது சி.நிக்ரிடா, லிண்டோரேஸ் லோபெந்தே மற்றும் ஆர்கஸ் கலிபியஸ்) போன்ற இரைப்பிடித்துண்ணிகள் சரியான அமைப்பில் கருப்பு செதில் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. கனோலா எண்ணெய் அல்லது பூஞ்சை மூலக்கூறுகளைக் கொண்ட உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கருப்பு செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுசூழலில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பூச்சிகளுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், வெள்ளை எண்ணெய் கரைசல்களை (எ.கா. ஒரு பகுதி சலவை சோப்புக்கு 4 பகுதிகள் தாவர எண்ணெய்) கருப்பு செதில் பூச்சிகளுக்கு எதிராகத் திறன்பட பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூப் பூத்த பிறகு, மற்றும் கோடைக்காலத் தெளிப்புகளுக்கு இடையிலான முதல் தலைமுறை ஊர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த கருப்பு செதில் பூச்சிகளின் சிகிச்சைகளை சரியான நேரத்தில் செய்யவேண்டும். மாலத்தியான், டைமீத்தோயேட் ஆகியவற்றைக் கொண்ட ஆர்கனோபாஸ்பேட்ஸ் அல்லது எண்ணெய் தெளிப்பான்கள் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அவை இரைப்பிடித்துண்ணும் பூச்சிகளைப் பாதிக்கும் என்பதால் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது பார்லடோரியா ஜிஜிப்பி என்னும் செதில் பூச்சியால் ஏற்படுகிறது, இவை பெரும்பாலும் நாரத்தை மரங்களைப் புரவலனாகக் கொண்டுள்ளது. இலைகள் இந்தப் பூச்சிகள் தங்குவதற்கு விருப்பமான தளங்களாக இருந்தாலும், இவை பழங்கள் மற்றும் கிளைகளிலும் தங்கி, உண்ணுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து வளர்ச்சி நிலைகளும் ஏற்படுகின்றன; இதன் மூலம் இந்தப் பூச்சிகள் ஒவ்வொரு வருடமும், இரண்டு முதல் ஏழு வரை, ஒன்றின் மேல் ஒன்றாக ஏராளமான தலைமுறைகளை நிறைவு செய்கிறது. இந்த எண்ணிக்கை நாரத்தை மரங்கள் வளரும் பகுதிகளை பெரும்பாலும் சார்ந்திருக்கும். சிசிலியில் சாதகமான சூழ்நிலையில் இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி முழுமையாக நிறைவடைய 30-40 நாட்கள் ஆகும், அதேசமயம் அது துனிசியாவில் ஒப்பீட்டளவில் வெதுவெதுப்பான சூழலில் 70-80 நாட்கள் வரையிலும், குளிர் காலங்களில் 160 நாட்கள் வரையிலும் நீடிக்கும்.


தடுப்பு முறைகள்

  • செதில் பூச்சிகளின் கூட்டங்கள் ஏதேனும் தென்படுகிறதா என மரங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • லேசான நோய் தொற்றுகளின் போது, தாவர பாகங்களை கையால் அகற்றுதல் அல்லது பூச்சிகளை நசுக்குதல் பயனுள்ளதாக இருக்கும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை அகற்றவும் மற்றும் அவற்றை பழத்தோட்டங்களுக்கு அப்பால் சென்று எரித்துவிடவும் அல்லது ஆழமாக புதைத்துவிடவும்.
  • தாவரங்களுக்கு இடையேயான பாலங்களைத் தவிர்க்க மற்றும் கவிகைகளின் காற்றோட்டத்தை மேம்படுத்த போதுமான அளவு சீர்திருத்தம் செய்யவும்.
  • பாதிக்கப்படக்கூடிய தாவர பொருட்களின் போக்குவரத்துகளைத் தவிர்க்கவும்.
  • தாவரங்களில் குடியிருக்கும் இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க, நிலப்பரப்புகளில் பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க