நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

பச்சை நிற நாரத்தை செடிப்பேன்

Aphis spiraecola

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் இலைகளில் கடுமையாக, உட்புறம் சுருண்டுகொள்ளும் பண்புகள் காணப்படும் மற்றும் கிளைகளில் உருக்குலைவும் தென்படும்.
  • இலைகளுக்கு அடிப்பகுதியில் வடியும் ஏராளமான தேன்துளிகளால், புகை போன்ற பூஞ்சைகளின் காலனித்துவம் காணப்படும்.
  • குறிப்பாக இளம் மரங்கள் இந்த பூச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன மற்றும் இவை குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

இளம் இலைகள் கடுமையாக, உட்புறமாக சுருண்டு கொள்ளுதல் மற்றும் சிறுகிளைகளின் உருக்குலைவு போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட பூக்கள் மற்றும் இளம் பழங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழுந்துவிடும், குறிப்பாக மென்மையான தோலை கொண்டவை கடுமையாக பாதிக்கப்படக்கூடும். மேலும், நோய்க்கிருமிகள் உற்பத்தி செய்யும் ஏராளமான தேன்துளிகள் இலைகளுக்கு அடிப்பகுதியில் விழும். அதன் சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக, புகை போன்ற அச்சுகளால் உடனடியாக காலனித்துவப்படுத்தப்படுகிறது. தேன்துளிகளை உண்ணும் எறும்புகளும் செடிப்பேன்களுக்கு இணையாக செயல்படுகின்றன. செடிப்பேன்களின் தொடர்ச்சியான உண்ணும் பழக்கம் மற்றும் பூஞ்சைகள் படருவதால் ஏற்படும் குறைந்த ஒளிச்சேர்க்கை விகிதங்கள் மரங்களை பலவீனப்படுத்தும். இந்த நோய் கிருமிகளால் இளம் மரங்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்றன, மேலும் அவை குன்றிய வளர்ச்சியுடன் காணப்படும். இவை எவ்வளவு சீக்கிரம் தாவரங்களை தாக்குகின்றதோ, அவ்வளவு சீக்கிரம் அறிகுறிகள் தென்படும். பழங்களின் தரமும் பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பல வகையான ஈக்கள், கண்ணாடி இறக்கை பூச்சிகள், பெண்வண்டுகள் மற்றும் மிதவை பூச்சிகள் போன்றவை ஸ்பிரியா செடிப்பேன்களின் இரைப்பிடித்துண்ணிகளுள் அடங்கும். செடிப்பேன்கள் இனத்தின் சில ஒட்டுண்ணி குளவிகளும் செடிப்பேன் ஸ்பிரியாவை தாக்குவதாகக் கூறப்படுகிறது, ஆனால் முட்டைப்புழுக்கள் அவற்றின் வாழ்க்கை சுழற்சியை அரிதாகவே நிறைவு செய்கின்றன, எனவே இந்த சிகிச்சை நம்பகமானவை அல்ல. பல நோய்க்கிருமி பூஞ்சைகளும் செடிப்பேன்களை பாதிக்கின்றன, ஆனால் பூச்சியின் சேதத்தைக் குறைக்க எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இளம் மரங்களில் அதிகமாக நோய் தொற்று ஏற்படுவதால், இவற்றின் சேதங்களை குறைப்பதற்கு ஓரளவு தான் இவற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியும். உயர் வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதமான காலங்களில் மருந்துகள் தெளிப்பதை தவிர்க்கவும். கார்பமேட்ஸ், சில இயற்கைபாஸ்பெட்கள், அசிடமிப்ரிட், பிரிமிகார்ப் மற்றும் இமிடோக்ளோரைட் ஆகியவை ஸ்பிரியா செடிப்பேன்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகளானது அஃபிஸ் ஸ்பிரேகோலா என்னும் பலதீனிகளை உண்ணும் செடிப்பேன்களின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இவை ஆப்பிள், நாரத்தை மற்றும் பப்பாளியை தவிர, பல முக்கியமான பயிர்களையும் இரண்டாம் நிலை புரவலனாக பாதிக்கிறது. பல்வேறு வகையான க்ரெடகஸ் (ஹாவ்தோர்ன்) மற்றும் ஸ்பிரீயா இனங்கள் காட்டு புரவலன்களுள் அடங்கும், எனவே இவை இத்தகைய பொதுவான பெயர் பெற்றது. இதன் உடல் மஞ்சள் முதல் வெளிர் பச்சை நிறத்தில், 2 மிமீ நீளமுள்ளதாகவும் இருக்கும். வயிற்றின் அடிப்புறத்தில் மூன்று கருப்பு புடைப்புகள் காணப்படும். முதிர்ந்த மற்றும் இளம் பூச்சிகள் இலைகள் மற்றும் கிளைகளை விருப்பமாக உண்டு, தாவரங்களின் சாற்றை உறிஞ்சி, ஏராளமான தேன்துளிகளை உற்பத்தி செய்கிறது. இந்த சர்க்கரை பொருள் பின்னர் புகை போன்ற பூஞ்சைகளால் காலனித்துவப்படுத்தப்படலாம். வெப்பநிலையானது இதன் வாழ்க்கை சுழற்சியில் குறிப்பிடத்தக்க விளைவைக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, 25º செல்சியசில் இந்த நோய் பூச்சி 7-10 நாட்களுக்குள் தனது தலைமுறையை நிறைவு செய்கிறது. இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் இந்த நோய் பூச்சிக்கு சாதகமாக இருக்காது. இது ஓரளவு குளிர்காலங்களையும் நன்கு தாங்கி கொள்ளும், இதனால் தான் மிதமான குளிர்காலத்திற்கு பின்வரும் வசந்த காலத்தின் துவக்கத்தில் நாரத்தை தோப்புகளில் திடீரென நோய்த்தொற்று ஏற்படுகிறது. இறுதியாக இது ட்ரிஸ்டெசா வைரஸ் மற்றும் பிற தாவர வைரஸின் நோய்க்காரணியாகும், மேலும் இவற்றால் பல்வேறு புரவலன்களுக்கு இடையே பரவ முடியும்.


தடுப்பு முறைகள்

  • செடிப்பேன்களின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • எறும்புகளின் இயக்கங்களை தடுக்க தடைகளை பயன்படுத்தவும்.
  • தேன்துளிக்கள் இருப்பதை கண்டறிய, நீர்-உணர்திறன் கொண்ட காகிதம் போன்ற கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும்.
  • எறும்புகளை தடுக்க ஒட்டும் பொறிகளைப் பயன்படுத்துங்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க