மற்றவை

பட்டாணி காய் துளைப்பான்

Etiella zinckenella

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • உண்ணும் சேதங்கள் உள்புறத்திலிருந்து மலர் மற்றும் இளம் காய்களில் காணப்படும், சில நேரங்களில் அவற்றை கீழே விழச்செய்யும்.
  • பூச்சிகளின் கழிவுகள் மேற்பரப்பில் மென்மையான, பழுப்பு, அழுகிய திட்டுக்களை ஏற்படுத்துகிறது.
  • வெடித்த காய்களில், பகுதியாக அல்லது முழுவதும் உண்ணப்பட்ட விதைகள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

தோட்ட பட்டாணி, புறா பட்டாணி, பொதுவான அவரை மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட அறுவடை செய்யப்பட்ட அவரை வகைகளின் காய்களை முட்டைப்புழுக்கள் தாக்கும். சோயாபீன்ஸ் பொருத்தமான புரவலன் ஆகும். சிறிய முட்டைப்புழுக்கள் புதிய மலர்கள் மற்றும் இளம் இலைகளை உட்புறமாக உண்டு, சில நேரங்களில் அவற்றைக் கீழே விழச் செய்கிறது. காய்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதனை அதன் நுழைவு மற்றும் வெளியேறும் துளைகள் இருப்பதன் மூலம் அறிய முடியும். அங்கு முட்டைப்புழுக்கள் விதைகளை சேதப்படுத்தும். வழக்கமாக, ஒவ்வொரு காய்களிலும் ஒன்று அல்லது இரண்டு முட்டைப்புழுக்களை காணலாம். மேலும் அவற்றால் உருவாகும் கழிவுகள் மேற்பரப்பில் மென்மையான, பழுப்புநிற, அழுகிய திட்டுக்களை ஏற்படுத்துகிறது. அவை விதைகளை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ உண்ணும், மலர்கள் மற்றும் காய்கள் கிடைக்கவில்லை என்றால் முட்டைப்புழுக்கள் இலைத் தொகுதிகளை உண்ணும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

சில முதுகெலும்புயிரிகள், கணுக்காலி மற்றும் பறவைகள் ஆகியவை இறைப்பிடித்துண்ணிகளில் அடங்கும். பிராகான் பிளாட்டினோடா, பெரிசெரோலா செல்லுலாரிஸ் மற்றும் ஜட்ரோபிஸ் டாட்ரிசிடிஸ் போன்ற ஒட்டுண்ணிகள் அல்லது ஒட்டுண்ணி குளவிகளின் இனங்கள், தங்க பட்டை எட்டியல்லா அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்களை தாக்குகின்றன, மேலும் அதன் எண்ணிக்கையை சொல்லும் அளவிற்கு குறைக்கிறது. பூச்சி பரவுவதை கட்டுப்படுத்த பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களையும் பயன்படுத்தப்படலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப் பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இந்த அந்துப்பூச்சி வழக்கமாக பருப்பு வகைகளின் முக்கிய பூச்சியாக கருதப்படுவதில்லை, பெரும்பாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இருப்பினும், சில பூச்சிக்கொல்லி சூத்திரங்களை இலைத்திரள் தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். இந்த பூச்சி பரவாமல் தடுக்க விதைத்த 45 நாட்களில் மாலதியோன் 5 டி (எக்டருக்கு 25 கிலோ) என்பவற்றை பயன்படுத்தவும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது எட்டியல்லா ஜின்கென்னெல்லா என்னும் அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இந்த பூச்சி உலகளவில் பரவி காணப்படுகிறது. முதிர்ந்த அந்துப்பூச்சிகள் இரவு நேரங்களில் இயங்கும் மற்றும் அவை உப்பிய தலை மற்றும் இரண்டு நீளமான உணர்கொம்புடன், பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். அவற்றின் முன் இறக்கைகள் பழுப்பு-சாம்பல் நிறத்தில் மின்னும் தோற்றத்தையும், அவற்றின் முன்பக்க முனையில் வெள்ளைக் கோடுகளையும் கொண்டிருக்கும். தங்க-ஆரஞ்சு நிற பட்டை இறக்கையின் இரு புறங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும், எனவே இவை "தங்கக் பட்டை எட்டியல்லா அந்துப்பூச்சி" என்றழைக்கப்படுகிறது. அவற்றின் பின் இறக்கைகள் வெளிறிய சாம்பல் நிறத்தில், கருமமையான நரம்பு அமைப்பையும், நீளமான கரும் விளிம்புப் பகுதியையும் கொண்டுள்ளது. பெண் பூச்சிகள் முட்டைகளை மலர்கள் அல்லது பச்சை பழங்களில் இடும், முட்டைப்புழுக்கள் பழங்களின் உட்பகுதியில் வாழ்ந்து, விதைகளை உண்டு, ஒரு அவரையிலுருந்து மற்றொன்றுக்கு எளிதில் செல்லும். அவை வெளிறிய பச்சை முதல் பச்சை நிறத்திலும், பழுப்பு இளஞ்சாயம் மற்றும் ஆரஞ்சு தலையையும் மற்றும் தலைப்பகுதியில் கருப்பு வி போன்ற வடிவமும், நான்கு கருப்பு புள்ளிகளும் இருக்கும். முட்டைப்புழுக்கள் மண்ணில் விழுந்து, 2-5 செ.மீ. ஆழத்தில் மண்ணில் உள்ள கூட்டில் தனது குளிர்காலத்தைக் கடக்கும். வசந்த காலத்தில் முதிர்ந்த பூச்சிகளாக வெளியே வரும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை உடைய வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை பயன்படுத்தவும்.
  • நோய்ப்பூச்சிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களை கண்காணிக்கவும் (முட்டை கொத்துக்கள், கம்பளிப்பூச்சிகள், சேதம்).
  • பாதிக்கப்பட்ட பூக்கள், காய்கள் அல்லது தாவர பாகங்களை கையால் அகற்றவும்.
  • தழைச்சத்து உரங்களை உகந்த அளவில் பயன்படுத்துங்கள்.
  • வயலின் வடிகாலினை உகந்ததாக்கவும், ஏனெனில் அதிகப்படியான நீர் தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
  • அந்துப்பூச்சிகளைக் கண்காணிக்க அல்லது பெருமளவில் பிடிக்க பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • முட்டைப்புழுக்களை உண்ணும் பறவைகளுக்காக திறந்த வெளிகள் மற்றும் அவை உட்காருவதற்கான இடங்களை அமைக்கவும்.
  • வயல் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நல்ல களையெடுத்தல் திட்டத்தைப் பயன்படுத்தவும்.
  • பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், ஏனெனில் இது நன்மை பயக்கும் பூச்சிகளை பாதிக்கும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர எச்சங்கள் அல்லது தானே வளரும் தாவரங்களை அகற்றவும்.
  • எளிதில் பாதிக்காத பயிர்களுடன் பயிர் சுழற்சியைப் பின்பற்றவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க