மற்றவை

முலாம்பழ ஈ

Zeugodacus cucurbitae

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பழங்களின் மீதான முட்டைப்புழுக்களின் துளையிடுதல் மற்றும் உண்ணும் செயல்பாடு, பழங்கள் அழுகி, முன்கூட்டியே விழுவதற்கு வழிவகுக்கிறது.
  • பழங்கள் மீது சிறிய நிறமிழந்த திட்டுக்கள் காணப்படும்.
  • நாற்றுகள், வேர்கள், தண்டுகள் மற்றும் மொட்டுகள் மாமிசப்புழுக்களால் தாக்கப்படலாம்.

இதிலும் கூடக் காணப்படும்


மற்றவை

அறிகுறிகள்

ஜி.குக்கூர்பிட்டே யின் பெண்புழுக்கள் பழங்களின் தோல்களைத் துளைத்து, அங்கு தன் முட்டைகளை இடும். முட்டைப்புழுக்கள் பழங்களைத் துளைக்கும். பழங்களின் சதைகளுக்குள் (கழிவு மாசுப்பாடு, அழுகுதல்) கணிசமான சேதங்கள் ஏற்படும். பழங்களின் தோலில் சிறிய, நிறமாறிய திட்டுக்கள் காணப்படும், அங்கு முட்டையிடுதல் நடைபெறும். முட்டைகளை இடுவதால் ஏற்படும் காயங்கள்,சந்தர்ப்பவாத பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால், பழங்களில் இரண்டாம் நிலை நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. பாதிக்கப்பட்ட பழம் அழுகிப்போகும், மேலும் அடிக்கடி முதிர்ச்சியடைவதற்கு முன் தாவரத்திலிருந்து பழங்கள் கீழே விழும். மாமிசப்புழு இளம் நாற்றுகள், தர்பூசணியின் சதை நிறைந்த வேர்கள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய் போன்ற பிற புரவலன் தாவரங்களின் தண்டுகள் மற்றும் மொட்டுக்களையும் பாதிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அறுவடைக்குப் பிந்தைய வெப்ப சிகிச்சை (வெப்ப ஆவி அல்லது சூடான நீர்) அல்லது குளிர் சிகிச்சைகள், போக்குவரத்தின்போதும் மற்றும் போக்குவரத்திற்கு பிறகும் மாசுபாட்டின் ஆபத்துகளைத் தவிர்க்கிறது. வளரும் பழங்களைப் பாதுகாப்பான கவர் கொண்டு மூடவும் அல்லது பெரோமோன் அல்லது புரதத் தூண்டில் பொறிகளைப் பயன்படுத்தவும் (எ.கா. மெத்தில் யூகினால் ஆண் ஈக்களைக் கவர்கின்றன). யூகினாலை கொண்ட ஓசிமம் சான்க்டம் (புனித துளசி), பீட்டா-காரிபியோபிலீன் மற்றும் பீட்டா-எலிமெனி ஆகியவற்றின் இலைச் சாறுகளை பருத்திப் பஞ்சில் வைத்தால் 0.8 கிமீ தொலைவில் இருக்கும் ஈக்களை ஈர்க்கும் வலிமை கொண்டது. இந்தக் கூறுகளை ஸ்பினோசாடுடன் கலந்து விஷமாகத் தெளிக்கும்போது பழந்தோட்டத்தில் இருக்கும் அனைத்து ஈக்களையும் கொன்றுவிடும். வேம்பு விதையின் உட்கருச் சாற்றை முட்டையிடுதலின் தடுப்பாகப் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாலத்தியானைக் கொண்டுள்ள பூச்சிக்கொல்லிகள் பழ ஈக்களுக்கு எதிராக மிதமான அளவில் செயல்படுகின்றன. தெளிப்பான்கள் புரதத் தூண்டில்களுடன் கலக்கப்படுவதனால், அவை குறிப்பிட்ட நிலைகளுக்கு ஈக்களை வசப்படுத்துகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

இளம் பழங்களின் தோல்களுக்கு அடியில் முட்டைகள் கொத்துக்களாக இடப்படும். முழுவதும் வளர்ச்சியடைந்த மாமிசப்புழு 10-12 மி.மீ. நீளத்தில் இருக்கும், அவை பழங்களின் சதைகளை துளையிட்டு சேதங்களை ஏற்படுத்தும். கூட்டுப்புழுக்களாக 10 நாட்களுக்கு நீடிக்கும், பொதுவாக அவை மண்ணில் நடைபெறும், ஆனால் அவ்வப்போது பழங்களிலும் நடைபெறும். கூட்டுப்புழுக்கள் நீள்வட்ட வடிவில், பழுப்பு நிறத்தில், 6-8 மிமீ நீளம் கொண்ட கூட்டினை உருவாக்கும். மிகவும் வறண்ட பகுதிகளில், கூட்டுப்புழுக்கள் வளர்ச்சித் தடைக்காலத்தை அடையக்கூடும். முதிர்ந்த ஈக்கள் 8-10 மி.மீ. நீளமும், இருண்ட பழுப்பு நிற தலையையும், மூன்று பிரகாசமான மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டிருக்கும். அவைகள் தேன், சேதமடைந்த பழச்சாறு மற்றும் தாவரங்களின் மரச்சாறுகளை உண்ணும். இறக்கைகள் ஒளிபுகும் தன்மையுடன் 12-15 மிமீ பரப்பில், முனையில் கரும்பழுப்பு பட்டையுடன் வெளிப்படையாக இருக்கும். அவற்றின் வாழ்க்கை சுழற்சி நிறைவடைய 3-4 வாரங்கள் ஆகும், மேலும் ஆண்டுக்கு பல முறை அவை நிகழும்.


தடுப்பு முறைகள்

  • அனைத்து மாமிசப்புழுக்களும் இறந்து விட்டதை உறுதி செய்வதற்கு, அறுவடை செய்யப்படாத அனைத்து பழங்களும் குறைந்தது 0.5 மீ ஆழத்தில் புதைக்கப்பட வேண்டும்.
  • முட்டைப்புழுக்களை சூரிய ஒளியில் வெளிப்படச்செய்ய மண்ணைத் தொடர்ந்து உழுதல் வேண்டும் அல்லது அவற்றை ஆழமாகப் புதைக்க வேண்டும்.
  • எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்ய வேண்டும்.
  • பொறிகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வயல்களைக் கண்காணிக்கவும்.
  • முதிர்ந்த ஈக்களைக் கண்காணிக்க அல்லது மொத்தமாகப் பிடிக்க பொறிகளைப் பயன்படுத்துங்கள்.
  • நோய் தொற்று ஏற்பட்ட பழங்களை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லாதீர்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க