மாங்கனி

மாம்பழ துளைப்பான்

Citripestis eutraphera

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இளம் பழங்களில் கூழ் மற்றும் சாறுகள் வடியும் கருப்பு நிற நுழையும் துளைகள் காணப்படும்.
  • பழங்கள் பிளந்து, அவை முதிர்ச்சியடைவதற்கு முன்னரே கீழே விழுந்து விடக்கூடும்.
  • இளம் முட்டைப்புழுக்கள் கருப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு நிற உடலையும் கொண்டிருக்கும், பின்னர் இவை சிவந்த-பழுப்பு நிறமாக மாறும்.
  • முதிர்ந்த அந்துப்பூச்சிகள் கரும்பழுப்பு நிற முன் இறக்கைகளையும் மற்றும் வெளிர் வெள்ளை-சாம்பல் நிற பின் இறக்கைகளையும் கொண்டிருக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மாங்கனி

அறிகுறிகள்

தொங்கிக்கொண்டிருக்கும் பழங்களின் நுனிப்பகுதியில் நிறமாறிய திட்டுக்களால் சூழப்பட்ட கருப்பு நிற நுழையும் துளைகள் பட்டாணி அல்லது எலுமிச்சை அளவு பழங்களில் காணப்படும். பழங்கள் பெரியதாக இருக்கும் போது நுழைவு துளைகளில் இருந்து மெல்லிய கூழ் மற்றும் சாறுகள் கசியும். துளைப்பானின் விரிவான குடைவுகளால் பழங்கள் பிளந்து விடக்கூடும். முட்டைப்புழுக்கள் பின்னர் வேறு பழங்களுக்கு இடம்பெயரும். புதிதாக வெளிவந்த முட்டைப்புழுக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில், கரும்பழுப்பு முதல் கருப்பு நிற தலையைக் கொண்டிருக்கும். பின்னர், இவை சிவந்த-பழுப்பு நிறமாக மாறும். ஆரம்பத்தில் இவை பல தோல்களை சுரண்டி, தேமல் போன்ற திட்டுக்களை உருவாக்கும், பின்னர் இவை பழத்தினுள் துளையிட்டு, இளம் பழங்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே கீழே விழுந்து விடக்கூடும். கடுமையாக பாதிக்கப்பட்ட மரங்களின் கீழ் நூற்றுக்கணக்கானவை காணப்படும். பாதிக்கப்பட்ட பழங்கள் முன்கூட்டியே கீழே விழுந்துவிடக்கூடும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

மாமரம் பூக்கும் நிலையில் இருக்கும்போது, வாராந்திர இடைவெளியில் வேப்பிலை சாறை (அசாத்திராட்சின்) பயன்படுத்தவும், இவற்றை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செய்யவும். மாம்பழ துளைப்பானின் இயற்கை எதிரிகளின் எண்ணிக்கையை பராமரிக்க முயலுங்கள், எ.கா. குளவிகள் ரிச்சியம் அட்ரிசிமம் (முட்டைப்புழுக்களை உண்பவை) மற்றும் டிரிகோகாம்மா கிலோனிஸ் மற்றும் டிரிகோகாம்மா கிலோட்ரீ ஆகியவை முட்டைகள் மீது ஒட்டுண்ணிகள் போன்று பற்றி படரும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தியோகுளோபிரிடை கொண்டிருக்கும் தெளிப்பான்கள் மாம்பழ துளைப்பான்களை நன்கு கட்டுப்படுத்துகின்றன. மேலும், பளிங்கு அளவிலான பழங்கள் மீது பென்புரோபத்ரின் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தெளித்தல் திருப்திகரமான விளைவுகளைக் கொடுத்தது. குளோரிபைரிபாஸ் (2.5 மில்லி / லி) கொண்ட தெளிப்பான்கள் மாம்பழ துளைப்பான்களை நன்கு திறன்மிக்க வகையில் குறைக்கிறது.

இது எதனால் ஏற்படுகிறது

முதிர்ந்த அந்துப்பூச்சிகள் கரும்பழுப்பு நிற முன்னிறக்கைகளையும், இளஞ்சிவப்பு வெள்ளை-சாம்பல் நிற பின் இறக்கைகளையும் கொண்டிருக்கும். முதிர்ந்த அந்துப்பூச்சிகள் நடுத்தரமான அளவுடன் 20 மிமீ அளவு நீள இறக்கைகளைக் கொண்டிருக்கும். முதிர்ந்த அந்துப்பூச்சிகள் சுமார் ஒரு வாரத்திற்கு வாழும், மேலும் அவை பழங்களின் சுரசுரப்பான பகுதி மற்றும் மலர் காம்புகளில் 125-450 முட்டைகளை இடும். முட்டைப்புழுக்கள் பழத்தினுள் நுழைந்து, அவற்றின் சாறுகள் மற்றும் விதைகளை உண்ணும். முழுவதும் வளர்ந்த கம்பளிப்பூச்சிகள் சுமார் 20 மிமீ நீளத்தினைக் கொண்டிருக்கும். இவை கீழே விழுந்த பழங்களுக்கு அருகே உள்ள மணலில் பட்டு நூல்களால் லேசாக பிண்ணப்பட்ட கூட்டில் கூட்டுப்புழுக்களாக மாறும். வளர்ச்சி நிறைவு பெற 30 நாட்கள் ஆகும். பாதிக்கப்பட்ட பழங்களின் போக்குவரத்து மூலம் இந்த நோய்ப்பூச்சி பரவும். இன்னும் என்ன, முதிர்ந்த அந்துப்பூச்சிகள் பல்வேறு பழத்தோட்டங்களுக்கு பறக்கும் தன்மை கொண்டவை.


தடுப்பு முறைகள்

  • தூய்மையான, அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • சான்றளிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • பூச்சிகள் மற்றும் அசாதாரணமான அறிகுறிகள், குறிப்பாக பழங்கள் உருவாகும் நிலைகளில், ஏதேனும் தென்படுகிறதா என பழத்தோட்டங்களை அடிக்கடி கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட மரங்களின் பழங்கள் மற்றும் பட்டைகளை அழிக்கவும்.
  • காற்று இடர்தடுப்புகள் பழத்தோட்டங்களில் அந்துப்பூச்சிகளின் படையெடுப்பை தவிர்க்கக்கூடும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை ஆதரிக்க அதிகப்படியான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவர பொருட்கள் அல்லது பழங்களை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லாதீர்கள்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க