நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நாரத்தை இலை துளைப்பான்

Phyllocnistis citrella

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலை சிதைவு - முறுக்கப்பட்ட அல்லது சுருண்ட தோற்றம்.
  • இலை மேற்பரப்பில் வெள்ளை அல்லது சாம்பல் நிற சுரங்கங்கள்.
  • குன்றிய வளர்ச்சி.
  • பழத்தின் அளவு சிறிதாகுதல்..

இதிலும் கூடக் காணப்படும்


நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

அறிகுறிகள்

அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் நோய்த்தொற்று ஏற்படலாம், மற்றும் அவை இளம் இலைகளிலேயே முக்கியம் காணப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகளானது சிதைந்த, முறுக்கப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட இலைகள் காணப்படும், இருப்பினும்,அவை பச்சை நிறமாகவே இருக்கும். உற்று நோக்கும் போது இலைகளின் இரண்டு தோலுக்கு இடையே வெள்ளை அல்லது சாம்பல் நிற குடைவுகள் காணப்படும். முட்டைபுழுவின் கழிவுகளுடன் தொடர்புடைய மெல்லிய கரும் வரிகள் அல்லது புள்ளியிட்ட கரும் வரிகள் குடைவுகளுக்குள், குறிப்பாக அடிப்பகுதியிலிருந்து வெளிப்படையாகக் காணப்படும். முட்டைப்புழுக்கள் பெரும்பாலும் இந்தக் குடைவுகளின் அடிப்பகுதியில் காணப்படும் மற்றும் அவற்றின் பெரும்பாலானவை ஒவ்வொரு இலையிலும் காணப்படும். இலைகளில் ஏற்படும் சேதங்கள் சந்தர்ப்பவாத பூஞ்சை அல்லது பாக்டீரியாவின் தொற்றுநோய்க்கான மூலமாக இருக்கக்கூடும். கடுமையான நோய்த்தொற்று குறைந்த ஒளிசேர்க்கை விகிதங்களுக்கு வழிவகுத்து, குன்றிய வளர்ச்சி, குன்றிய பழங்களின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை ஏற்படுத்தும். கடுமையான சந்தர்ப்பங்களில், நாரத்தை இலைத் துளைப்பான் இளம் மரங்களின் ஒட்டு மொத்த இலை உதிர்வுக்கு வழிவகுத்து, இறுதியாக மரங்களை இறக்க செய்யும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

நியூரோப்டோரா இனத்தின் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளும் இரைப்பிடித்துண்ணிகளுள் அடங்கும். பிறவற்றுக்கு மத்தியில், டெட்ராஸ்டிகஸ் இனங்களின் எண்ணற்ற இரைபிடித்துண்ணி குளவிகள் நாரத்தை இலைத் துளைப்பானை தாக்கி, அவற்றின் முட்டைப்புழுக்களை உண்ணும். நாரத்தை இலைத் துளைப்பானின் நோய்தொற்றைக் கட்டுப்படுத்த, ஸ்பினோசாட், மீன் எண்ணெய் பிசின் சோப்பு மற்றும் பொங்கமியா எண்ணெய் ஆகியவற்றை கொண்ட கரிம பூச்சிக்கொல்லிகளை இலைவழித் தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். மரத்தின் இலைகளில் பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்க வேப்ப எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். இலைகளின் தோலினால் முட்டைப்புழுக்கள் பாதுகாக்கப்படுவதால், நாரத்தை இலைத் துளைப்பான் நோய் தொற்றுக்கு எதிராக பூச்சிக்கொல்லிகள் திறம்பட செயல்படுவதில்லை. பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், முதிந்தப் பூச்சிகள் செயல்பாட்டில் இருக்கும் போது, முறையான தயாரிப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும். அபாமெக்ட்டின், டெபூபெனோசைடு, அசிடமிபிரிட், டைஃப்ளூபன்ஸூரான் அல்லது ஸ்பினேடோரம் ஆகியவற்றை உள்ளடக்கியச் சூத்திரங்களை கொண்ட பல தயாரிப்புகளும் தெளிப்பான்களாக கிடைக்கப்பெறுகின்றன. செயற்கை பைரித்ராய்டு குடும்பத்தின் பூச்சிக்கொல்லிகளும் இந்தப் பூச்சிக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இந்த நோய்க்கான அறிகுறிகள் நாரத்தை இலைத் துளைப்பான், பில்லோக்நிஸ்டிஸ் சிட்ரெல்லா என்னும் முட்டைப்புழுக்களின் உண்ணும் செயல்பாட்டால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சிறிய, பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில், தடித்த கோடுகளைக் கொண்ட இறக்கைகளையும், அதன் முன் இறக்கைகளின் மேல்ப் பகுதியில் கரும்புள்ளிகளையும் கொண்டிருக்கும். அவை முக்கியமாக குளிர் வெப்பநிலையில் அதிகாலை முதல் மாலை வரை செயல்பாட்டில் இருக்கும். வசந்த காலத்தில், இலைகளின் அடிப்பகுதியில் பெண்பூச்சிகள் முட்டையிடும். வெளிவரும் முட்டைப்புழுக்கள் பளிங்கு பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும், அவைப் பழங்களையும் தாக்கும் என்றாலும், இலைகளையே பெரும்பாலும் உண்ணும். அவை இலைகளின் இரு தோல்களுக்கிடையே குடையும், அதன் விளைவாக வெள்ளி நிறப் பாம்பு பொந்துகள் போன்ற குடைவுகள் ஏற்படும். முட்டைப்புழுக்களின் இறுதி நிலையில், இலைத்துளைப்பான்கள் அந்த குடைவுகளில் இருந்து வெளியேறி, தன்னை சுற்றி இலைகளை சுருட்டிக் கொண்டு கூட்டுப்புழு நிலையினை அடையும். இது நாரத்தை பல வகைகளை தாக்கும் முக்கிய பூச்சியாகும். இது கிட்டத்தட்ட நாரத்தைப் பழங்களை உற்பத்தி செய்யும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் காணப்படும். மேலும் பாக்டீரியா சொறிநோய் போன்ற பிற நோய்கள் ஏற்படக்கூடிய பாதிப்பும் அதிகரிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • நாரத்தை இலைத் துளைப்பானுக்கு எதிரான, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட தாவர வகைகளை தேர்வு செய்யவும்.
  • மரங்களுக்கு இடையே பில்லி ஆட்டு களைகளை(அகேரேட்டம் கோணிஜாய்ட்ஸ்) நிலத்தை மூடுவதற்காக நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா எனப் பழத்தோட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், முக்கியமாக இலைகளின் அடிப்பகுதியை கண்காணிக்கவும்.
  • பூச்சிகள் ஒளிந்து கொள்வதை தடுக்க குளிர்காலத்தில் கீழே விழும் இலைகளை சேகரித்து அகற்றவும்.
  • அந்துப்பூச்சிகளை ஈர்ப்பதற்கும், மற்றும் அவற்றின் எண்ணிக்கையை கண்காணிப்பதற்கும் பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • புதிய வளர்ச்சியின் தோற்றத்தை தவிர்க்க நோய் தொற்று உச்சக் கட்ட நிலையில் இருக்கும்போது, மரங்களை சீர்திருத்தம் செய்யவும்.
  • தண்டுவழிச்சந்ததிகளையும் அதற்கேற்ப சீர்திருத்தம் செய்யவும்.
  • நன்மை பயக்கும் பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க