உளுந்து & பச்சை பயிறு

பட்டாணியின் ஊதா வண்ணத்துப்பூச்சி

Lampides boeticus

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • பூ மொட்டுக்கள், மலர்கள் மற்றும் பச்சை காய்களில் முட்டைப்புழுக்கள் ஏற்படுத்திய துளைகள் காணப்படும்.
  • முட்டைப்புழுக்கள் காய்களின் உள்ளடக்கங்களை உண்டு, ஒரு முனையில் வட்ட வடிவிலான துளைகளை ஏற்படுத்தும்.
  • தேன்துளி சுரப்பு மற்றும் எறும்புகள் அந்த துளையின் வாயில் அருகே காணப்படும்.
  • இந்த நோய்தொற்றை நாம் கண்டுகொள்ளாவிட்டால், மிக பெரிய விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.


உளுந்து & பச்சை பயிறு

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் வளரும் நிலையில் பெரும்பாலான தாவர பாகங்களில் சேதங்கள் ஏற்படுகின்றன. முட்டைப்புழுக்கள் தாவரங்களின் உட்பகுதிகள் மற்றும் காய்களின் உள்ளிருக்கும் விதைகளை உண்ணுகிறது. முட்டைப்புழுக்கள் வெளியானபிறகு, நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் துளைகளாக மலர் மொட்டுகள், பூக்கள் மற்றும் பச்சை காய்களில் காணப்படும். வட்ட வடிவிலான துளைகள் மற்றும் பூச்சிக்கழிவுகள் காய்களில் காணப்படும் துளைகளின் வாயில் அருகே காணப்படும். தேன்துளி சுரப்பிகள் மற்றும் அந்த சுரக்கும் புள்ளிகளுக்கு அருகே கருப்பெறும்புகள் ஆகியவற்றைக் காணலாம். கருப்பு நிறமாற்றம் காய்கள் அழுகுவதை குறிக்கிறது. முட்டைப்புழுக்கள் நேரடியாக காய்களை தாக்குவதால், நோய்தொற்று அதிக விளைச்சல் இழப்பிற்கு வழிவகுக்கிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

வயல்களில் பூச்சிகளின் இயற்கை எதிரிகளை விடுவிப்பதன் மூலம் தொற்றுநோயை திறம்பட கட்டுப்படுத்த முடியும். ட்ரிகோகிராமா சிலோட்ரேயே, ட்ரிகோகிராமாடோய்டீயா பாக்டிரே, காடிசியா ஸ்பெகுலாரிஸ், ஹைபெரன்சிர்டஸ் லுகோனிபிலா மற்றும் லிட்ரோ டிரோமஸ் கிரேசிப்ஸ் போன்ற முட்டை மற்றும் முட்டைப்புழு ஒட்டுண்ணிகள் நல்ல பயனளிக்கும். பாசிலோமைசஸ் லிலசினஸ் மற்றும் வெட்ரிசிலியம் லெகானி ஆகியவற்றைக் கொண்ட உயிரியல் பூச்சிக்கொல்லிகளை தொற்றுக்களை கட்டுப்படுத்த இலைவழி தெளிப்பான்களாக பயன்படுத்தலாம். வேப்ப மரத்திலிருந்து பெறப்படும் தாவரச் சாறுகளும் முட்டைப்புழுவிற்கு எதிராக திறம்பட செயல்படுகின்றன. முட்டைப்புழுக்களைக் கட்டுப்படுத்த என்எஸ்கேஇ- ஐ 5% இரண்டு முறை தெளிக்கவும், அதனை தொடர்ந்து வேப்ப எண்ணெய் @ 2% தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிகளின் இயற்கை எதிரிகள் பாதுகாக்கப்பட்டால், ரசாயன சிகிச்சையின் அவசியம் இருக்காது. பூச்சிக்கொல்லிகள் தேவைப்பட்டால், லாம்ப்டா-சைஹலோதிரின், டெல்டாமெத்ரின் ஆகியவற்றை கொண்ட தயாரிப்புகளை இலை தொகுதிகள் மீது தெளிக்கலாம். இது தட்டைப்பயறு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றில் 80 முதல் 90% வரையிலான கட்டுப்பாட்டு அளவைக் கொடுக்கலாம். மற்ற செயல்பாட்டு பொருட்களில் எமாமெக்டின் 5% எஸ்.ஜி (220 கிராம் / ஹெக்டேர்) மற்றும் இந்தோக்சாகார்ப் 15.8% எஸ்சி (333 மிலி / ஹெக்டேர்) ஆகியவை அடங்கும். பட்டாணி நீல நிற வண்ணத்துப்பூச்சி இத்தகைய ரசாயனங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

தாவரங்களின் சேதம் பெரும்பாலும் லாம்பைட்ஸ் போட்டிகஸ் என்பவற்றின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. முதிர்ந்தவைகள் உலோகம் அல்லது கரு நீல நிறத்தில் இருக்கும். மேலும் ஊதா நிற முடிகளுடன், நீண்ட நீல நிற சாம்பல் நிறமுடைய உடல்பகுதியைக் கொண்டிருக்கும். நீண்ட இணைப்புகளுடன், அதன் பின் இறக்கைகளின் கீழ்ப்பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படும். அதன் அடிப்பகுதியில் வழக்கமாக இறக்கை விளிம்பிற்கு அருகே பல ஒழுங்கற்ற வெள்ளை மற்றும் பழுப்பு நிற கோடுகள் மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். மலர் மொட்டுகள், மலர்கள், முதிர்ச்சியடையாத காய்கள் மற்றும் வளர்ந்து வரும் தளிர்கள் மற்றும் இலைகள் மீது பெண்பூச்சிகள் வட்ட வடிவ வெளிர் நீலம் அல்லது வெள்ளை முட்டைகளை ஒற்றையாக இடும். இந்த முட்டைப்புழுக்கள் இளம் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில், சற்று வட்டவடிவில், நத்தைகள் போல தோற்றமளிக்கும். வெப்பநிலையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை முட்டைப்புழுக்களின் நிலை நீடிக்கும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கும் நோய்களை தாங்கக் கூடிய அல்லது நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளை நடவு செய்ய வேண்டும்.
  • பருவக்காலத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ நடவு செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அது பூச்சிக்கு ஆதரவாக இருக்கும்.
  • தாவரங்களுக்கு இடையே அதிகமான இடைவெளிவிடவும்.
  • பூச்சிகளின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என உங்கள் தாவரங்கள் அல்லது வயலை கண்காணிக்கவும்.
  • விதைப்படுகை அல்லது வயல்களில் காணப்படும் முட்டைப்புழுக்களை எடுத்து, அதனை அழித்து விடவும்.
  • முட்டைப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்த மண்ணை தொடர்ந்து உழுதல் வேண்டும்.
  • பூச்சியின் இயற்கையான எதிரிகளை அழிக்கும் வகையில் கண்மூடித்தனமாக பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க