மக்காச்சோளம்

அவரையின் இலை பிணைக்கும் புழு

Hedylepta indicata

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைகள் வெளிப்புறமாக உண்ணப்பட்டு, எலும்புக்கூடு போன்றாகுதல்.
  • பட்டு நூல்களால் இலைகள் சுருட்டப்படுதல் அல்லது நூற்கப்படுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


மக்காச்சோளம்

அறிகுறிகள்

முக்கியமாக இதன் கம்பளிப்பூச்சிகள் (ஆனால் அது மட்டுமல்ல) அவரைய இனத் தாவரங்களைத் தாக்குகின்றன. பச்சை நிற முட்டைப்புழுக்கள் பட்டு நூல்களால் பிண்ணப்பட்டச் சுருண்ட ஒற்றை இலைகள் அல்லது இரட்டை இலைகளுக்குள் வாழும். பிந்தைய நிலைகளில், இவை பல இலைகளை ஒன்றாகப் பிண்ணி, ஓரளவு உண்ணப்பட்ட இலைத் தொகுப்புத் திரளாக உருவாக்கும். இவை நரம்புகள் மற்றும் சேதமடைந்த இலைகள் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள மென்மையான இலைத் திசுக்களை உண்ணும், அந்தப் பகுதியில் உள்ள வெளிப்புறத் தோல்கள் அகற்றப்பட்டு, அவை பழுப்பு நிறமாக மாறக்கூடும் அல்லது இறக்கக்கூடும். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், இலைகள் கடினமான பாகங்களாகி, எலும்புக்கூடு போன்று குறைந்துவிடக் கூடும். கடுமையான நோய்த்தொற்றின் போது இலைப் பரப்பில் ஏற்படும் வியக்கத்தகு குறைவானது சிறிய காய்களை உற்பத்தி செய்து, விளைச்சலையும் பாதிக்கும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோகிராம்மாவின் ஒட்டுண்ணிக் குளவி இனங்களை நோய்த்தொற்றுக்குப் பிறகு உயிரியல் கட்டுப்பாட்டு முறையாகப் பயன்படுத்தலாம். பிராக்கிமெரியா ஓவட்டா, கிரோட்டியூசோமியா, நைக்ரிகன்ஸ், ஸ்டுர்மியா அல்பின்சிசா, நெமோரில்லா மாகுலோசா மற்றும் அபாடெலெஸ் மற்றும் டோக்சொஃப்ராய்ட்ஸ் இனங்கள் உள்ளிட்டவை பிற முட்டைப்புழு ஒட்டுண்ணி இனங்களாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். 0,02% சைபெர்மெத்ரின் அல்லது 0,02% டெகாமெத்ரின் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிக் கலவைகளை இரண்டு வார காலத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது ஹெடிலெப்டா இண்டிகேட்டா என்னும் அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சுமார் 20 மி.மீ. இறக்கைகளுடன் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மூன்று அடர் ஜிக்ஜாக்கிங் கோடுகள் மற்றும் சில அடர் நிறத் திட்டுக்களுடன் பொன்னிற அல்லது மஞ்சள் பழுப்பு நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். பின் இறக்கைகளில், குறுக்குக் கோடுகளின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்திருக்கும். பெண் அந்துப்பூச்சிகள் புரவலன் தாவரங்களின் இளம் இலைகள் அல்லது தளிர்கள் மீது முட்டைகளை ஒற்றையாக இடும். கம்பளிப்புழுக்கள் வெளிர் பழுப்பு நிறத் தலைப்பகுதியுடன் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இவை பட்டால் பிண்ணப்பட்ட மடிந்த இலைகளுக்குள் உண்ணும் மற்றும் வாழும். மணல் பரப்பில் தாவரக் குப்பைகளுக்கு மத்தியில் உள்ள புழுக்கூட்டில் இவை கூட்டுப் புழுக்களாக மாறும். அவரை பிணைக்கும் புழு அவரைய இனம், சிவப்பு பீட் மற்றும் மக்காச்சோளத்தின் தாவரங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான புரவலன் தாவரங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு முக்கியமான பூச்சி என்று கருதப்படுவதில்லை, ஆதலால் இவற்றுக்குச் சிகிச்சை தேவைப்படாது.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்புத் திறன் உடைய இரகங்களை நடவு செய்யவும்.
  • உங்கள் தாவரங்களைக் கவனமாகக் கண்காணிக்கவும், அதிகப்படியான தாவரங்களில் அறிகுறிகள் தென்பட்டால், நோய் மேலாண்மை நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும்.
  • பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.
  • பயிர் செய்யும் தளத்திலிருந்து களைகளை அகற்றவும்.
  • இயற்கை இரைப்பிடித்துண்ணிகளை ஆதரிப்பதற்கு வயல்களைச் சுற்றிலும் தேன் உற்பத்தி செய்யும் தாவரங்களை விதைக்கவும்.
  • பூச்சிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க மற்றும் அவற்றின் இனச்சேர்க்கை நடவடிக்கைகளைத் தகர்க்க, பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க