நிலக்கடலை

பூனைக்காலி கம்பளிப்புழு

Anticarsia gemmatalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலைத் தொகுதி மற்றும் முழு இலைகளிலும் உண்ணும் சேதங்கள் காணப்படும்.
  • மொட்டுக்கள், சிறிய காய்கள் மற்றும் தண்டுகளில் உண்ணும் சேதங்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

5 பயிர்கள்

நிலக்கடலை

அறிகுறிகள்

பூனைக்காலி அந்துப்பூச்சியின் முட்டைப்புழுக்கள் புரவல தாவரங்களின் இலைகளைப் பாதிக்கும். முதலில், இளம் முட்டைப்புழுக்கள் மென்மையான திசுக்களை உண்ணும். உள்ளே இருக்கும் முதிர்ந்த முட்டைப்புழுக்கள் நரம்புகள் உட்பட முழு இலைகளையும் உண்ணுகின்றன. பிந்தைய நிலைகளில், முட்டைப்புழுக்கள் மொட்டுகள், காய்கள் மற்றும் தண்டுகளை உண்ணும். அவை பெரும்பாலும் இரவு நேரத்திலேயே சுறுசுறுப்பாக இருக்கும். அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், அவை எண்ணிக்கையில் பெருகி, அவரை அல்லது பிற பயறு வகைகளின் வயல்களை மொத்தமாக அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கை எதிரிகள் கொண்டு, உதாரணமாக இயுப்லெக்ட்ரஸ் புட்லெரி மற்றும் மெடியோரஸ் ஆட்டோகிராபெ போன்ற ஒட்டுண்ணி வண்டுகளின் சில இனங்களைக் கொண்டு பூனைக்காலி அந்துப்பூச்சியை எதிர்க்கலாம். தரை வண்டுகள், புலி வண்டுகள், சிவப்பு தீ எறும்பு, அல்லது விந்தேமியா ரூபோபிக்டா என்னும் டகினிட் ஈ ஆகியவையும் கவனிக்கப்படவேண்டிய பிற இரைப்பிடித்துண்ணிகளாகும். பறவைகள், தவளைகள் மற்றும் கொறித்துண்ணிகள் போன்ற முதுகெலும்பி இரைப்பிடித்துண்ணிகளும் பூனைக்காலி அந்துப்பூச்சிகளை குறைக்கின்றன. அல்லது பூனைக்காலி கம்பளிப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நோயாக்கிகளை பயன்படுத்துதல் வேண்டும், உதாரணமாக பாக்டீரியாபேசில்லஸ் துரிங்ஜென்சிஸ்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் தடுப்பு சிகிச்சை பூச்சியைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் உறுதியான முடிவுகளை வழங்குகிறது.

இது எதனால் ஏற்படுகிறது

ஆன்டிகார்சியா ஜெம்மாடாலிஸ் என்பவற்றின் முதிர்ந்த அந்துப்பூச்சிகள் 30 முதல் 40 மிமீ வரையிலான இறக்கைகளை கொண்டிருக்கும். அதன் முன்இறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் பழுப்பு நிறம் அல்லது இருண்ட செம்பழுப்பு நிறம் வரை மாறுபடுகிறது. அதன் பின் இறக்கைகள் வெளிர் பழுப்பு நிறத்தில், அதன் விளிம்புகள் அருகே வெளிர் நிற புள்ளி வரிசைகளைக் கொண்டிருக்கும். அவை இரண்டு இறக்கைகளையும் விரிக்கும்போது, இரண்டு இறக்கைகளின் நெடுகிலும் இருண்ட குறுக்குவட்ட வரிகள் காணப்படும். முட்டைகள் சிறிது நீள்வட்ட வடிவில், வெள்ளை நிறத்தில் காணப்படும், மேலும் முட்டை பொறிவதற்கு சற்று முன்பாக இளம் சிவப்பு நிறமாக மாறும். அவை இலைகளின் கீழ்ப்பகுதியில் தனித்தனியாக இடப்படும். மூன்று முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து புழுக்கள் வெளியேறும், அவை தான் வெளிவந்த முட்டையின் ஓடுகளை உண்ணும். பூனைக்காலியின் முட்டைப்புழுக்கள் வண்ணத்திலும், புள்ளிகளிலும் மிகவும் மாறுபடக்கூடியவை. இளம் முட்டைப்புழுக்கள் சிலசமயங்களில் சோயாபீன் காவடிப்புழு (சூடோபிளூசியா இன்குழுடென்ஸ்) என்று தவறாகக் கருதப்படும். கூட்டுப்புழுவாவதற்கு முந்தைய நிலைகளில், முட்டைப்புழுக்கள் 25 மிமீ நீளத்திற்கு சுருங்கி, சீமைத்தேக்கு பழுப்பு நிறமாக மாறுகின்றன. கூட்டுப்புழுக்கள் வெளிர்பச்சை நிறம் முதல் பழுப்பு நிறம் வரை இருக்கும். மேலும் அவை சுமார் 20 மிமீ நீளத்தில் காணப்படும். அவை மண் பரப்பிற்கு அடியில் இருக்கும். கோடைக் காலத்தில் சுமார் நான்கு வாரங்களில் வாழ்க்கைச் சுழற்சி முடிவடைகிறது. வெப்பநிலை குறையும் போது வாழ்க்கை சுழற்சி அதிக நாள் நீடிக்கும். வருடாந்திர தலைமுறைகளின் எண்ணிக்கைப் பகுதிகளை பொறுத்து வேறுபடுகிறது.


தடுப்பு முறைகள்

  • நோய்க்கு எதிராக தாக்கு பிடிக்க கூடிய தாவர வகைகளை நடவு செய்யவும்.
  • சீக்கிரம் முதிர்ச்சியடையும் சாகுபடிகளை தேர்ந்தெடுக்கவும்.
  • சீக்கிரம் அறுவடை செய்வதற்கு சீக்கிரம் நடவு செய்யவும்.
  • உங்கள் தாவரங்களை கவனமாகக் கண்காணித்து, அதிகமான எண்ணிக்கையை அடையும்போது நோய் மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தவும்.
  • பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க