அரிசி

மஞ்சள் தண்டு துளைப்பான்

Scirpophaga incertulas

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுவின் உண்ணும் சேதங்களினால் பக்கக்கன்றுகள் இறந்து போகுதல் மற்றும் வெண்ணிறத்தில் நிரம்பப்படாத கதிர்கள் போன்றவை ஏற்படும்.
  • சேதமடைந்த தண்டுகள் மற்றும் பக்கக்கன்றுகளில் சிறிய துளைகள் காணப்படும்.
  • இலையின் நுனிப்பகுதிக்கு அருகில் முட்டைவடிவ திட்டுக்கள் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

அரிசி

அறிகுறிகள்

தாவரத்தின் அடிப்பகுதியில் அல்லது நடுத்தண்டு நெடுகிலும் காணப்படும் உண்ணும் சேதங்கள் வளர்ச்சி நிலைகளில் இறந்த பக்கக்கன்றுகளையும், இனப்பெருக்க நிலைகளில் வெண்ணிறத்தில் நிரப்பப்படாத கதிர்களையும் ஏற்படுத்துகிறது. முட்டைப்புழுக்கள் வெளியான பிறகு, இவை இலை உறைகளை துளையிட்டு, தண்டின் உட்புறத்தை உண்ணும். சேதமடைந்த தாவர திசுக்களில் சிறிய துளைகள், கழிவுகள் மற்றும் மலப்பொருட்கள் போன்றவற்றைக் காணலாம். முட்டைப்புழுக்கள் ஒரு கணுவிடைப்பகுதியிலிருந்து இன்னொன்றுக்கு நகரும். வளர்ச்சி நிலையின்போது, முட்டைப்புழுக்களின் உண்ணும் சேதங்கள் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, ஏனெனில் தாவரமானது கூடுதல் பக்கக்கன்றுகளை உருவாக்குவதன் மூலம் சேதத்தை ஈடுசெய்யும். ஆனால், இது ஆற்றலை செலவழிக்கிறது, இதன் விளைவாக விளைச்சல் பாதிக்கப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இயற்கை இறைப்பிடித்துண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஏராளமாக உள்ளன மற்றும் பல வகையான எறும்புகள், வண்டுகள், வெட்டுக்கிளிகள், ஈக்கள், குளவிகள், நூற்புழுக்கள், இலைப்பேன்கள், காது முடி பூச்சிகள், தும்பி வகை, டிராகன் தும்பி வகை மற்றும் சிலந்தி உள்ளிட்டவையும் அடங்கும். இறுதியாக, நடவு செய்த 15 நாட்களில் தொடங்கி முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிராம்மா ஜபோனிகம் (ஹெக்டேருக்கு 100,000 / ஹெக்டேர்) ஐந்து முதல் ஆறு வெளியீடுகளைத் திட்டமிடலாம். முட்டைப்புழுக்களை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொண்ட தயாரிப்புகளின் பயன்பாடு சிகிச்சையில் அடங்கும் (இது தண்டுக்குள் ஊடுருவுவதற்கு முன்பு). வேப்பஞ்சாறு, பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் ஆகியவற்றையும் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். தடுப்பு வேதியியல் சிகிச்சையில் நடவு செய்வதற்கு முன் நாற்றுகளின் வேர்களை 0.02% குளோர்பைரிபோஸில் 12-14 மணிநேரங்களுக்கு ஊறவைப்பதும் (30 நாட்கள் பாதுகாப்பு) அடங்கும். ஃபிப்ரோனில் குளோர்பைரிஃபோஸ் அல்லது குளோரன்ட்ரானிலிப்ரோல் போன்றவை அடிப்படையிலான சிறுமணி பூச்சிக்கொல்லிகளை அல்லது தெளிப்பான்களை குறிப்பிட்ட எல்லை அடையும் வரை பயன்படுத்தலாம் (25-30 ஆண் அந்துப்பூச்சிகள் / பொறி / வாரம்).

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது மஞ்சள் தண்டு துளைப்பான் ஸ்கிர்போபாகா இன்சேர்டுலாஸ் என்பவற்றின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது, இது ஆழமான நீரில் வளரும் நெற்பயிரின் நோய்ப்பூச்சியாகும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நீர்வாழ் சூழல்களில் வாழும் தாவரங்கள் அல்லது பயிர்த்தாள்களின் மேலே காணப்படுகிறது. இளம் முட்டைப்புழுக்கள் இலையின் ஒரு பகுதியால் தனது உடம்பை சுற்றிக்கொண்டு, தாவரங்களில் இருந்து பிரிந்து, நீர்ப்பரப்பில் விழும். பின்னர் இவை ஒரு புதிய தாவரத்தின் அடிப்பகுதியில் தன்னை இணைத்துக் கொண்டு தண்டுக்குள் துளையிடுகிறது. அதிகப்படியான தழைசத்துக்கள் இருக்கின்ற நிலம் இந்த நோய்ப்பூச்சிக்கு மிகவும் ஏதுவானது. பருவத்தின் பிற்பகுதியில் பயிரிடப்பட்ட வயல்களும் பூச்சியை ஆதரிக்கின்றன, சீக்கிரம் நடவு செய்யப்பட்ட வயல்களில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒப்பீட்டளவில், இந்த பூச்சியானது ஆரம்பத்தில் நடவு செய்யப்பட்ட வயல்களில் 20% மகசூல் இழப்பையும், தாமதமாக பயிரிடப்பட்ட பயிர்களில் 80% விளைச்சல் இழப்பையும் ஏற்படுத்தும்.


தடுப்பு முறைகள்

  • இந்த பூச்சியை எதிர்க்கும் பயிர் வகைகளை பயன்படுத்தவும்.
  • (எ.கா.
  • TKM 6, IR 20, IR 36).
  • மோசமான சேதத்தைத் தவிர்க்க பருவத்தின் ஆரம்பத்தில் நடவு செய்யவும்.
  • அண்டை விவசாயிகளுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் நடவு செய்யவும்.
  • நடவு செய்வதற்கு முன், முட்டைகளை எடுத்துச் செல்வதைக் குறைக்க இலையின் மேல்பகுதியை வெட்டிவிடவும்.
  • ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக நாற்றுகளை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
  • விதை படுக்கைகள் மற்றும் வயல்களை தவறாமல் கண்காணிக்கவும். பயிரிட்ட 15 நாட்களில் (3/ஏக்கர் அல்லது 8/ஏக்கர்) பெரோமோன் பொறிகள் அல்லது அதிகளவில் பூச்சிக்களைக் கவரும் பொறிகளைப் பயன்படுத்தவும்.
  • அவற்றை 25, 46 மற்றும் 57 நாட்கள் கழித்து மாற்றியமைக்கவும். விதை படுக்கைகளிலும், நடவு செய்யும் போதும் முட்டை கொத்துக்களை கைப்பற்றி அழிக்கவும்.
  • வயலிலும், அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள களைகள் மற்றும் தானே வளரும் தாவரங்களை கட்டுப்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை பிடுங்கி, அழித்துவிடவும்.
  • நைட்ரஜன் உரங்கள் அல்லது எருக்களை மிதமான முறையில் பயன்படுத்தவும்.
  • பருவக்காலத்தில் பிளவு பயன்பாடுகளில் உரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • முட்டைகளை கொல்ல அவ்வப்போது பாசன நீரின் அளவை உயர்த்தவும்.
  • பூச்சிகளை எதிர்த்துப் போராட பரந்த-வீச்சுகளை உடைய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • பயிர்த்தாள்களில் உள்ள முட்டைப்புழுக்களை அகற்ற நிலமட்டத்திற்கு பயிர்களை அறுவடை செய்யவும்.
  • அறுவடைக்குப்பிறகு, தாவர குப்பைகள் மற்றும் பயிர்த்தாள்களை அகற்றி அழித்துவிடவும்.
  • மீதமுள்ள முட்டைப்புழுக்களை மூழ்கடிக்க, அறுவடைக்குப் பிறகு வயலை உழுது, நீர் தேங்கிநிற்கும்படி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க