மக்காச்சோளம்

ஐரோப்பிய சோளத் துளைப்பான்

Ostrinia nubilalis

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • முட்டைப்புழுக்கள் தாவரங்களின் காற்றில் அசையும் அனைத்து பாகங்களையும் சேதப்படுத்தும்.
  • இவை இலைச்சுருள், மையநரம்புகள், தண்டுகள், பட்டு மற்றும் சோளக்காதுகளினுள் உண்ணும்.
  • இவை குன்றிய வளர்ச்சி, இலைகளின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் குறைந்த உற்பத்தித்திறன் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.
  • தண்டுகளில் இவை ஏற்படுத்தும் துளைகள் தாவரங்களின் தாங்கி நிற்கும் திறனைப் பலவீனப்படுத்தி மற்றும் தாவரங்கள் கீழே விழுவதற்குச் சாதகமாக இருக்கிறது.
  • சோளக்காதுகளின் தானியங்கள் சேதமடைந்து மற்றும் கீழே விழக்கூடும்.
  • இந்தத் துளைகளில் சந்தர்ப்பவாத பூஞ்சைகள் குடியேறி மற்றும் அழுகல் ஏற்படக்கூடும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

மக்காச்சோளம்

அறிகுறிகள்

முட்டைப்புழுக்களானது தாவரங்களின் காற்றில் அசையும் அனைத்து பாகங்களையும் சேதப்படுத்தும். இவை இலைச் சுருள்கள் அல்லது மைய நரம்புகளை முதலில் உண்ணத் தொடங்கி, மற்றும் தாவரங்களின் அடிப்பகுதியில் இருக்கும் தண்டுகளைத் துளையிட்டு, பின்னர் பட்டு மற்றும் சோளக்காதுகளினுள்ளும் உண்ணும். இவை நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் உட்புறத் திசுக்களை அழித்து, தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல், குறைந்த இலைகள் மற்றும் குறைவான உற்பத்தித் திறன் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. தண்டுகளில் இவை ஏற்படுத்தும் துளைகள் தாவரங்களின் தாங்கி நிற்கும் திறனைப் பலவீனப்படுத்தி, தாவரங்கள் கீழே விழுவதற்குச் சாதகமாக இருக்கிறது. சோளக்காதுகளில் ஈரமான கழிவுகளுடன் வட்ட வடிவிலான துளைகள், சேதமடைந்த தானியங்கள் காணப்படும் மற்றும் இவை கீழே விழக்கூடும். இந்த துளைகளைத் தாவரங்களில் குடியேற சந்தர்ப்பவாதப் பூஞ்சைகள் பயன்படுத்திக்கொள்கிறது, இதன் விளைவாக அந்தத் திசுக்களில் அழுகல் ஏற்படுகிறது. இந்த பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சுக்கள் மகசூல் தரத்தை இன்னும் மோசமாக்கின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஐரோப்பிய சோளத் துளைப்பானின் எண்ணிக்கையை இரைப்பிடித்துண்ணிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்துதல் சாத்தியமானது. இன்சிடஸ் மலர் வண்டுகள் (ஓரியஸ் இன்சிடஸ்), பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் மற்றும் பல கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை ஆகியன பூர்விக இரைப்பிடித்துண்ணிகளுள் அடங்கும். பறவைகள் 20 முதல் 30 சதவீதம் வரை செயலற்ற நிலையில் இருக்கும் முட்டைப்புழுக்களை அழித்துவிடும். டச்சினிட் ஈ லிடெலா தொம்சோனி மற்றும் எரிபோரஸ் டெரிபிரான்ஸ் ஆகிய இனங்களின் குளவிகள், சிம்பிஸிஸ் விரிடுலா, மற்றும் மேக்ரோசென்ட்ரிஸ் கிராண்டி ஆகியன ஒட்டுண்ணிகளுள் அடங்கும். ஸ்பினோசாட் அல்லது பேசில்லஸ் துரிங்ஜென்சிஸ் ஆகியவற்றின் அடிப்படையிலான உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் நன்கு பயனளிக்கும்.

இரசாயன கட்டுப்பாடு

பல பூச்சிக்கொல்லி மருந்துகள் சோளத் துளைப்பான் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். நுணுக்கமான கலவைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சைஃப்லுத்ரின், எஸ்பென்வலேரெட் ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகளை இலை சுருள்கள் மற்றும் வளரும் சோளக்காதுகளில் தெளிக்கலாம். இந்த நோக்கத்திற்காக செயற்கை பைரித்ராய்ட்ஸ் என்பவற்றையும் பயன்படுத்தலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

முட்டைப்புழுக்கள் மண்ணில் உள்ள தாவரக் கழிவுகளில் குளிர் காலத்தை செயலற்ற நிலையில் கழித்து மற்றும் வசந்த காலத்தில் வெளியாகிறது. ஐரோப்பிய சோளத் துளைப்பானின் முதிர்ந்த பூச்சிகள் இரவில் தீவிரமாகச் செயல்படுகின்றன. ஆண் அந்துப்பூச்சிகள் ஒல்லியான உடலுடன் பழுப்பு நிறச் சாயங்கள் மற்றும் வெளிறிய பழுப்பு முதல் பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் ரம்பம் போன்ற மஞ்சள் நிறத் தோற்றத்துடன் இருக்கும். பெண் பூச்சிகள் மெல்லிசாக, இறக்கைகள் முழுவதும் பல இருண்ட நெளிவரிப் பட்டைகளுடன், மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை பொதுவாக, காற்று அமைதியாகவும், வெப்பநிலை வெப்பமாகவும் இருக்கும்போது, இலைகளின் கீழ்ப்பகுதியில் வெள்ளை முட்டைகளைக் கொத்துக்களாக இடுகின்றன. முட்டைப்புழுக்கள் மென்மையான, முடியில்லாத தோல் மற்றும் உடல் முழுவதும் கரும் புள்ளிகளுடன் அழுக்கு வெள்ளை நிறம் முதல் சிவந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். அவற்றின் தலை கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்தில் காணப்படும். இவை எண்ணற்ற களைகள் மற்றும் சோயாபீன்ஸ், மிளகுத்தூள் மற்றும் தக்காளி போன்ற மாற்று புரவலன்களையும் உண்ணும். குறைந்த ஈரப்பதம், குறைந்த இரவுநேர வெப்பநிலை மற்றும் கடுமையான மழை போன்றவை முட்டையிடுதல் மற்றும் துளைப்பான் உயிர்வாழ்விற்குக் கேடு விளைவிக்கிறது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் திறன் கொண்ட தாவர வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றைப் பயன்படுத்தவும்.
  • பூச்சிகளின் உச்சகட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க சீக்கிரம் தாவரங்களை நட வேண்டும்.
  • வயல்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், மேலும் பொறிகளைப் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்கவும்.
  • வயலில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல களை மேலாண்மையை உறுதி செய்து கொள்ளவும்.
  • மண்ணில் செயலற்ற நிலையில் இருக்கும் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்துவதற்கும் மற்றும் தாவரக் கழிவுகளை புதைப்பதற்கும் ஆழமாக உழுதல் வேண்டும்.
  • பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை உடைக்க புரவலன் அல்லாத பயிர்களைக் கொண்டு பயிர்ச் சுழற்சி செய்யவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க