மற்றவை

திராட்சையின் டாட்ரிக்ஸ் அந்துப்பூச்சி

Argyrotaenia ljungiana

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • இலை எலும்புக்கூடு போன்றாகுதல்.
  • இலைகள் மற்றும் பெர்ரிகள் வலையால் பிண்ணிக்கொள்ளக்கூடும்.
  • கம்பளிப்பூச்சிகள் வெளிர் பச்சை நிறத்தில், மஞ்சள் கலந்த பழுப்பு நிற தலையுடன் சற்று ஒளிஊடுருவும் தன்மையுடன் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

3 பயிர்கள்

மற்றவை

அறிகுறிகள்

வசந்த காலத்தின் துவக்கத்தில், கம்பளிப்பூச்சிகள் வளரும் மலர் மொட்டுகள் மற்றும் நரம்புகளுக்கு இடையேயான மென்மையான இலை திசுக்களை உண்டு, எலும்புக்கூடு போன்ற இலை பரப்பினை ஏற்படுத்துகின்றன. பூக்கும் ஆரம்ப காலத்தில், முதிர்ந்த முட்டைப்புழுக்கள் கொத்துக்களில் நுழைந்து, பெர்ரிகளுக்கு மத்தியில் பல இலைகளை பிண்ணி கூட்டினை உருவாக்கும். இவை பெர்ரியின் தோலை சுரண்டி, உள்ளுக்குள் ஊடுருவி, உட்புறமாக உண்ணும். இலைகள் மற்றும் பெர்ரிகளுக்கு ஏற்படும் காயங்கள் தவிர, சேதம் திசுக்களை காலனித்துவப்படுத்தும் சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளை ஈர்க்கிறது, இதன் விளைவாக அழுகல் ஏற்படுகிறது. திராட்சைத் தவிர, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் மரங்களிலும் இந்த நோய்ப்பூச்சி பொதுவாக காணப்படுகிறது. மாற்று புரவலன் தாவரங்களில் மல்லோ, சுருள் டாக், கடுகு அல்லது லூபின் ஆகியவை அடங்கும். ஓட்ஸ் மற்றும் பார்லியின் திராட்சை நிலவளங்காப்பு பயிர்களும் இந்த பூச்சியை ஈர்க்கின்றன.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

டிரைகோகிராம்மா மற்றும் எக்ஸோகஸ் நிக்ரிபால்பஸ் சபோப்ஸ்கரஸ் போன்ற ஒட்டுண்ணி குளவிகள், அத்துடன் பல வகையான சிலந்திகள் முட்டைப்புழுக்களை உண்ணுகின்றன. பேசிலஸ் துரிஞ்ஜியென்சிஸ் மற்றும் ஸ்பினோசாட் ஆகியவற்றின் அடிப்படையிலான கரிம சூத்திரங்களை தெளிப்பது உயிரியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மேலாண்மை கருவிகள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செயல்பாட்டு பொருள்களான மெத்தாக்ஸிஃபெனோசைட், குளோரன்ட்ரானிலிப்ரோல், கிரையோலைட் மற்றும் ஸ்பினெடோரம் ஆகியவற்றைக் கொண்ட தெளிப்புகள் டார்ட்ரிக்ஸ் அந்துப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படுகின்றன.

இது எதனால் ஏற்படுகிறது

இலைகள் மற்றும் பெர்ரிகளில் காணப்படும் அறிகுறிகள் ஆர்கிரோடீனியா லுஜியானா என்ற பல தீனிகளை உண்ணும் இனங்களின் உண்ணும் செயல்பாட்டினால் ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் சுமார் 15 மி.மீ. இறக்கைகளை கொண்டிருக்கும், மேலும் இதன் முன் இறக்கைகள் சில அடர் நிற நீட்டுப்போக்கான பட்டைகளுடன் வெளிர் பழுப்பு நிறத்திலும், பின் இறக்கைகள் வைக்கோல் நிறத்திலும் காணப்படும். முட்டைப்புழுக்கள் குளிர் காலத்தை கூட்டுப்புழுவாக சுற்றி வளைந்த நிலையில் கொடியின் பட்டை, தரையில் உள்ள குப்பைகள் அல்லது வலை பிண்ணப்பட்ட இலைகளில் கழிக்கும். மாறாக, இவை மாற்று புரவலன்களிலும் குளிர்காலத்தை கழிக்கும். வசந்த காலத்தில், பெண் பூச்சிகள் இலைகளின் மேற்பரப்பில் சுமார் 50 எண்ணிக்கைகளை கொண்ட முட்டைகளை இடுகின்றன. கம்பளிப்பூச்சிகள் வெளிர் பச்சை நிறத்தில், சற்று ஒளிஊடுருவக்கூடியவையாக இருக்கும், மேலும் இது மஞ்சள் கலந்த பழுப்பு நிற தலையையும் கொண்டிருக்கும். இவை முதலில் நரம்புகளுக்கு இடையேயான மென்மையான இலை திசுக்களை உண்டு, இலை பரப்புகளை எலும்புக்கூடு போன்றாக்குகின்றன. முதிர்ந்த முட்டைப்புழுக்கள் இலைகளை சுருட்டி அல்லது வலைப்பிண்ணி கூட்டை உருவாக்கும், இது மொட்டுகளையும் பழங்களையும் கூட உண்ணும். வருடத்திற்கு மூன்று வரை ஒன்றோடொன்று நிகழும் தலைமுறைகளை டார்ட்ரிக்ஸ் அந்துப்பூச்சிகள் கொண்டிருக்கும், மேலும் இந்த பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளும் வளரும் பருவம் முழுவதும் நிகழலாம்.


தடுப்பு முறைகள்

  • நோய்ப்பூச்சியின் அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வழக்கமாக பழத்தோட்டத்தை கண்காணிக்கவும்.
  • பூச்சிகளின் அளவை அனுமானிக்க பெரோமோன் பொறிகளை பயன்படுத்தவும்.
  • செயலற்ற காலத்தில் திராட்சைத் தோட்டத்தை சுத்தம் செய்யவும்.
  • கொடிகளில் உள்ள உலர்ந்த திராட்சைக் கொத்துகளை அகற்றவும், தரையில் உள்ள களைகளையும் கொத்துகளையும் புதைக்கவும்.
  • கூடுதலாக, தொற்று சிறியதாக இருந்தால், பாதிக்கப்பட்ட திராட்சை மற்றும் இலைகளை அகற்றவும்.
  • வசந்த காலத்தில் தளிர்கள் உருவாகத் தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே இந்த வேலையைச் செய்யவும்.
  • பெரும்பாலும் சீக்கிரம் அறுவடை செய்வதன் மூலம் சேதத்தை ஓரளவு தடுக்கலாம்.
  • பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இயற்கை எதிரிகளை அழிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க